Thursday, 17 May 2012

தொன்று தொட்ட விழா





 கார்த்திகை விழா பற்றிய குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களுள் காணப்படுகின்றன. 

இன்று போலவே அன்றும், கார்த்திகை மாதம் முழு மதி நாளில், விளக்குகளை ஏற்றி வரிசை வரிசையாய் வைத்து வீட்டு வாயில்களையும் தெருக்களையும் அணி செய்தார்கள்.  

சான்றுச் செய்யுட்களை நோக்குவோம்:


1 - நற்றிணை 202  

அறுமீன் பயந்த அறஞ் செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி .....


அறுமீன் - கார்த்திகை நட்சத்திரம்;
பயந்த - தந்த;
திங்கள் - கார்த்திகை மாதம்;
சுடர் நெடுங்கொடி - விளக்குகளின் நீண்ட வரிசை.


2 - அக நானூற்றில் 3 பாடல்கள்:


அ ) இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி .... (11 ) 

ஆயம் - பெண்கள்;
 மலிபுதொகுபு - மிக்க மகிழ்ச்சியுடன்;
எடுத்த - ஏற்றி வைத்த


ஆ) ... மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்
மறுகு விளக்கு உறுத்த .... (141 )

மதி நிறைந்து - முழுமதி.
மறுகு - தெருக்கள்.


இ) அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் ........................................(' 185 )

உயர்சிமை - மலை உச்சியில்;
விளக்கம் - விளக்குகள்.


3 - கார் நாற்பது - 26

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கில்.... 

இட்ட கொளுத்தி வைத்த;
தலைநாள் - சிறந்த நாள்அதாவது கார்த்திகை நட்சத்திரத்தன்று. 


4 - களவழி நாற்பது 17 

கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே

சாற்றில் - விழாவில்;
கழி விளக்கை - நிறைய விளக்குகளை.


ஒரு விழா பன்னெடுங்காலமாய் மாறுதல் இல்லாமல் கொண்டாடப்படுவதை அறிய வியப்பு மேலிடுகிறது.
(படம் உதவி: இணையம்)

6 comments:

  1. அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுத்திருந்தது
    இன்னும்அறியாத பண்டைத் தமிழ் சொற்களை அறிந்து கொள்ள
    எங்களுக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான இலக்கிய பகிர்வு ..............ரசித்தேன் நன்றி

    ReplyDelete
  3. கார்த்திகை பன்னெடுங்காலமாய் மாறுதலின்றி தமிழர்களால் கொண்டாடப்படும் செய்தியைச் சான்றுகளுடன் கொடுத்திருப்பதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. அரிய தரவுகள். வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  5. அரிய தரவுகள். வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete