பயன்பாட்டுக்குக் கார் வருவதற்கு
முன்பு பெருஞ் செல்வர்களுக்கு இரட்டைமாட்டு வில் வண்டிகள் உதவின; அவர்கள் பயணிக்கையில், முன்புறமாய் ஒருவர், "ஐயாவோட வண்டி
வருது" என அறிவித்துக்கொண்டு ஓடுவார்.
பாதசாரிகள் ஓரமாய் ஒதுங்கி வழிவிடுவார்கள்;
படுத்திருப்போர், அமர்ந்திருப்போர் மரியாதைக்கு அறிகுறியாக எழுந்து நிற்பார்கள்.
முன்னால் ஓடுபவரை முன்னோடி (முன் +
ஓடி) என்றார்கள்; முன்னோடும்பிள்ளை என்பதுமுண்டு.
இதற்கு இணையான ஆங்கிலச் சொல்
ப்ரிக்கர்சர் (Precursor ). ப்ரி - முன்; கர்சர் - ஓடுபவர். Forerunner என்பதும் அப்பொருள் உடையது.
முன்னோடி என்னும் சொல் இன்று வேறு
அர்த்தத்தில் வழங்குகிறது.
அறவழிப் போராட்டத்துக்கு முன்னோடி
காந்தி, தமிழ்ப் புதினத்துக்கு முன்னோடி பிரதாப
முதலியார் சரித்திரம் என ஒரு துறையில் பிறர்க்கு / பிறவற்றுக்கு
வழிகாட்டிகளை அச் சொல் குறிக்கிறது.
*******************************************************************படம் உதவி ; இணையம்
முன்னோடி -- பற்றி சிறப்பான செய்திகள் ! பாராட்டுக்கள்..
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி .
Deleteநல்ல பதிவு
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு அகமார்ந்த நன்றி .
Deleteசிறப்பான பகிர்வு ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 1)
ReplyDeleteதொடர்ந்து வாசித்துப் பாராட்டும் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி .
Delete