ஆரியர்கள், காரியஞ்சாதிப்பதற்கான ஐந்து தந்திரங்களைக்
கண்டறிந்து, பட்டியலிட்டு, அவற்றை விளக்குவதற்குப் பஞ்ச
தந்திரக் கதைகளை இயற்றியதோடு நில்லாமல்
நான்கு உபாயங்களையும் அனுபவத்தில் தெரிந்துகொண்டார்கள். அவை வாழ்க்கையில் என்றும் பயன்படுபவை.
அவை: சாம தான பேத தண்டம்.
1 - சாமம் -- நேரடியாகவோ அதிகாரம்
அல்லது செல்வாக்கு
உடைய ஒருவரைத் துணைக்
கொண்டோ எதிராளியுடன் பேச்சு நடத்தி உடன்பாடு எய்திப் பிரச்சனைக்குத் தீர்வு காணுதல். இதுவே சிறந்தது, பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவது, நீடித்த பயனை நல்க வல்லது, பக்க விளைவு இல்லாதது.
2 - பேதம் -- எதிராளிகள் ஒருவர்க்கு மேல்
இருந்தால்,
அவர்களிடையே பேதம் (பிளவு) விளைவித்துப் பலவீனப்படுத்தித் தனது
பிடிக்குள் ஒரு சாராரைக் கொண்டுவந்து
காரிய சித்தி
பெறும் வழி.
3 - தானம்
-- இதில் பல வகை உண்டு:
அன்னதானம், சொர்ண தானம், கோதானம், பூதானம், கன்னிகாதானம் முதலியவை.
பக்தர்களின் தானங்கள், 'தங்களுக்குப் புண்ணியம் சேரும், அதன் பலனாகப் போகிற கதி நல்லதாகும்'
என்னும் நம்பிக்கையின் அடிப்படையில்
வழங்கப்படுகின்றன.
சாதாரண
மக்கள் சொர்ணதானம்
(பணம், பொருள், விலையில்லா மிக்சி முதலானவை) மூலம் பயனடைகிறார்கள். சில சமயம்
இது லஞ்சம் என்னும் பெயர் பெறுகிறது. இன்று பெருவாரியாகப் புழக்கத்தில் உள்ள உபாயம் இதுவே எனில் மிகையாகாது. அரசு அலுவலகங்களில் வேலை முடிக்க இது உதவுகிறது; இன்னதுக்கு இன்ன ரேட் என்று நிர்ணயித்து அதிகாரத் தொனியில் கேட்டு வாங்கும் துணிச்சல் மிக்க அதிகாரிகளுக்குப் பஞ்சமில்லை.
பணமோ பதவியோ சலுகையோ தந்து எதிர்க்கட்சிக்காரரை ஆளுங்கட்சியானது தன்
வலையில் வீழ்த்துவது நம் நாட்டு அரசியலில் சகஜம்.
4 - தண்டம் -- வன்செயல், அடி, உதை, கொலை முதலியவை
இதிலடங்கும். மேற்சொன்ன வழிகள் உதவாதபோது இந்த உபாயம் நாடப்படுவது உண்டு; குழந்தைகளுக்கு எதிரான வன்செயல்கள், எழுத்தாளரை ஒடுக்குதல், அரசியல் கொலைகள் இதன்பாற்படும்.
*************************
’சாம தான பேத தண்டம்’ பற்றிய விளக்கங்களும் உதாரணங்களும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
ReplyDeleteஉங்களின் ஊக்கம் தரும் கருத்துக்கு மிகுந்த நன்றி .
Deleteகாரியம் சாதிப்பதற்கான நான்கு வழிகளான சாமம், பேதம், தானம் தண்டம் பற்றிய விளக்கமறிந்தேன். மிகவும் நன்றி.
ReplyDeleteநன்றிக்குப் பதில் நன்றி .
Deleteநன்றி
ReplyDelete