Tuesday 27 August 2019

பஃறுளி ஆறு



  குமரி முனைக்குத் தெற்கில் பெருநிலப் பரப்பு இருந்ததாயும் அதன் பெயர் தமிழில் குமரி கண்டம் எனவும் ஆங்கிலத்தில் லெமுரியா எனவும் அதைக் கடல் விழுங்கிவிட்டது என்றும் சிலர் கூறி அதற்கு ஆதாரங்களுள் ஒன்றாக சிலப்பதிகாரத்தின் சில அடிகளைக் காட்டுவர்:

  வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
  பஃறுளி யாற்றுடன் பன்மனை யடுக்கத்துக்
  குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

  (சிலம்பு 11 : அடி 18-20)

  இதன் பொருள்:

கூரிய வேலைத் தன் மேல் (பாண்டியன்) எறிந்தமையால் கடலானது அவன் மீது பகைமை கொண்டு அவனது நாட்டில் இருந்த பஃறுளி ஆற்றையும் குமரி மலையையும் மூழ்கடித்தது.

(பல துளி = பல்துளி = பஃறுளி)

  அது தவறான தகவல். குமரி கண்டம் மறைந்த பின்பு தோன்றியது மூன்றாம் தமிழ்ச் சங்கம் என்பர். அப்போது அந்த ஆறு இருந்தது என்பது புறம் 9 ஆம் பாட்டால் தெரிகிறது. அதில் புலவர் நெட்டிமையார், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் கீழ்க்காணுமாறு வாழ்த்துகிறார்:

வாழிய குடுமி
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

கருத்து – பஃறுளி ஆற்றிலுள்ள மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை கொண்ட ஆண்டுக்காலம் வாழ்க!

  தம் காலத்தில் இருந்த ஓர் ஆற்றைத்தானே புலவர் வாழ்த்துவதற்குப் பயன்படுத்தியிருப்பார்?

  சரி, இப்போது இருக்கிறதா? இருக்கிறது. தற்காலப் பெயர் பறளியாறு. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாற்றுக்கு அருகிலுள்ள மகேந்திர மலையில் உற்பத்தியாகி இறங்கி வருகிறது. மாத்தூர் தொட்டிப் பாலத்தின் கீழ்ப் பகுதி வழியாக வரும் அந்த ஆறு அருவிக்கரை வழியே திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் வளாகத்தைத் தொட்டபடி மூவாற்றுமுகத்தில் கோதையாற்றுடன் இணைகிறது.

  தொட்டிப் பாலம் என்பது மாத்தூர் பகுதியிலுள்ள கணியான்பாறை என்ற மலையையும் கூட்டுவாயுப் பாறை என்னும் குன்றையும் இணைத்துப் பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக இரு மலைகளுக்கும் நடுவில் 1971-இல் கட்டப்பட்ட பாலம்.

  பஃறுளியாறு இன்று வரை மக்களுக்கு நீர் வழங்கிக்கொண்டிருக்கிறது. அதைக் கடல் கொள்ளவில்லை. சிலப்பதிகார ஆசிரியர் தம் காலத்து நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

  இலக்கியம் கூறுவது சான்றாகக் கொள்ளத்தக்கதல்ல.

&&&&&&&

11 comments:

  1. புதிய தகவல்களை அறிந்தேன் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. பல்துளி ஆறு பற்றிய தங்கள் கருத்து முடிந்த முடிபாக இருக்க வழியில்லை. சென்னை வந்த பிறகு தங்களிடம் பேசுகிறேன். தற்போது நியூஜெர்சியில் இருப்பதால் என்னிடம் போதுமான விவரங்கள் கைவசம் இல்லை. தங்களுக்கு நேரம் இருக்குமானால் எனது பதிவுகளைப் படிப்பீர்களாயின் மகிழ்ச்சியடைவேன். https://chellappatamildiary.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ; பேசக் காத்திருக்கிறேன் . உங்கள் மாற்றுக் கருத்தை யறியப் பேரார்வம் கொண்டுள்ளேன்; உங்கள் பதிவுகளை வாசிப்பேன் .

      Delete
    2. இளங்கோ சொன்னது வரலாறு.சிந்துவெளி நாகரீகம் ஜான் மார்ஷல் அகழ்ந்து கண்டு அது திராவிட நாகரீகம் என்று சொன்னபோது ,
      சென்னையிலிருந்து ஒரு மேய்ச்சல் கூட்டம் அது ஆரிய நாகரீகம்தான்
      என்று கூப்பாடு போட்டது. "சாக்கியப்பெண்களைத் தென்னன் கற்பழிக்க" என்று சொன்ன, அன்பே சிவமென்று உதட்டளவில் பிதற்றிய அன்றைய ஞானசம்பந்தன் வழியில்தான் இந்த ஞான சம்பந்தனும்...

      இலக்கியம் சொல்வது சான்றாக கொள்ளத்தக்கதல்ல,என்கிறார்.. பலே....பேஷ்... பேஷ்..
      த்ரேதாயுகம்- லட்சம் வருங்கட்கு மேல் -அந்த யுகத்தில்தான் ராமன் வாழ்ந்தான் என்று ராமாயணம் பிதற்றுகிறது. அந்த பொய்யை இரண்டாயிரம் வருடங்களாகச்சொல்லி உண்மையாக்கிவிட்டார்
      உள்நோக்கத்தார்.....

      பொய்.........................மெய்போலும்மே....அ

      Delete
    3. நம்மிடம் இருப்பது முன்னோர் களின் எழுத்துகள்தான். அதையும் நாவன்மையால் மறுக்கப்
      பார்க்கிறது.குமரிக்கண்டத்தை மறுக்கும் அதே வேளையில் மகேந்திரமலைக்கும் அஸ்திவாரம் போடும் திறமை என்னே... இங்கிருந்து பார்த்தால் இலங்கை தெரியுமோ... மகேத்திரமலை இருப்பது மத்தியப்ரதேசத்தில்- ராவண தேசத்தில்

      Delete
  3. அறியாத தகவல் ஐயா
    பஃறுளி ஆறுதான்,பறளியாறா வியப்பாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . இந்த உண்மையை எஸ் . வையாபுரி பிள்ளை கண்டறிந்து தம் நூலொன்றில் தெரிவித்துள்ளார் .

      Delete
    2. மயங்க வேண்டாம்.

      Delete
  4. 49 நாடுகளைக் கொண்ட குமரி்க்கண்டமும், அதன் மக்களும் இறைவனால் அழிக்கப்பட்டது வரலாறு. பஃறுளி ஆற்று நாகரிகமே உலகின் மூத்த நாகரீகம். அம்மக்கள் இறைவனுக்கு இணைவைத்ததால், இறைவன் கோபமுற்று அழித்தது வரலாறு.

    ReplyDelete
  5. 49 நாடுகளைக் கொண்ட குமரி்க்கண்டமும், அதன் மக்களும் இறைவனால் அழிக்கப்பட்டது வரலாறு. பஃறுளி ஆற்று நாகரிகமே உலகின் மூத்த நாகரீகம். அம்மக்கள் இறைவனுக்கு இணைவைத்ததால், இறைவன் கோபமுற்று அழித்தது வரலாறு.

    ReplyDelete
  6. 49 நாடுகளைக் கொண்ட குமரி்க்கண்டமும், அதன் மக்களும் இறைவனால் அழிக்கப்பட்டது வரலாறு. பஃறுளி ஆற்று நாகரிகமே உலகின் மூத்த நாகரீகம். அம்மக்கள் இறைவனுக்கு இணைவைத்ததால், இறைவன் கோபமுற்று அழித்தது வரலாறு.

    ReplyDelete