Thursday, 30 April 2015

தமிழ் நெடுங்கணக்கு (Alphabet)

   
    முதல்  ன்  வரையுள்ள   எழுத்துகள்  கொண்ட   நெடுங்கணக்கை   நாம்  பயன்படுத்துகிறோம்; இதைத்  தமிழர்   உருவாக்கவில்லை. அதனால்தான்  ற் ன்  என்ற  இரண்டு  எழுத்துகளும்  இறுதியில்  தள்ளப்பட்டன.    வரிசை  எப்படி  இருந்திருக்க  வேண்டும்?

    க் ங் , ச் ஞ் , ட் ண் ,  த் ந் , ப் ம் , ற் ன் .  ( கசடதபற );  ய் ர் ல் வ்,ழ்,ள் ( யரலவழள ). இப்படி.

அசோகரின்  கல்வெட்டுக்கள்   பிராமி   என்னும்  எழுத்தில்   செதுக்கப்பட்டுள்ளன;  
பிராமியில்    ற் ன்  இல்லை.   

  அந்த  பிராமி  தமிழகத்துக்கு  வந்தபோதுநம்  மொழிக்குத்  தேவைப்பட்ட   சில 
வேறுபாடுகளை   அதில்   செய்து   உருவாக்கியது  தமிழ்  பிராமி  எனப்பட்டது . காலத்தால்  
முற்பட்ட   தமிழ்க்   கல்வெட்டுகள்  (கி. மு. 2 ஆம்  நூற்றாண்டுதமிழ்  பிராமியில்   உள்ளன.

     அந்த   எழுத்துகாலப்  போக்கில்  உருமாறி,   வட்டெழுத்து   எனப்  பெயர் பெற்றது.  
அதிலிருந்து  தோன்றியது  இன்றைய  நெடுங்கணக்கு.   இது  தொல்காப்பியருக்கு   முன்பே    
புழக்கத்தில்  இருந்தமை

                         'அகர   முதல்  னகர  இறுவாய்'
                               (  முதல் ன் இறுதி)

என்னும்   நூற்பாவால்  தெரிகிறது.

     அசோகரின்   பிராமியில்      என்ற  ஒலிகள்  குற்றொலிகள்  அல்லஅவை     என   
நீட்டி  உச்சரிக்கப்பட்டனதமிழுக்குக்   குற்றொலிகள்  வேண்டுமேமேலே  புள்ளி  
வைத்து   சமாளித்தார்கள்.
       அதாவது:        ----  உச்சரிப்பு     ;





--- உச்சரிப்பு     .
       இதைத்   தொல்காப்பியம்  தெரிவிக்கிறது:

                மெய்யின்  இயற்கை  புள்ளியொடு  நிலையல் ;
                எகர  ஒகரத்து   இயற்கையும்  அற்றே.

     பொருள்:  மெய்  எழுத்தின்மேல்  புள்ளி  இட  வேண்டும்;     வுக்கும் அப்படியே.
      13  ஆம்  நூற்றாண்டில்  இயற்றப்பட்ட    நன்னூலும்  அதை வழிமொழிகிறது:

               தொல்லை   வடிவின   எல்லா   எழுத்தும் ஆண்டு
               எய்தும்    எகர  ஒகர   மெய்  புள்ளி.

     பொருள் :         ஆகியவற்றுக்கும்    மெய்யெழுத்துகளுக்கும்  புள்ளி  வைக்கவேண்டும்.

     உயிர்மெய்  எழுத்துகளுக்கும்  இது  பொருந்தும்:
          பெபொ  ------    உச்சரிப்பு --  பே , போ






உச்சரிப்பு  -- பெபொ.
     2000  ஆண்டாகத்   தமிழர்  அப்படித்தான்  எழுதிவந்தனர் .
    18 ஆம்  நூற்றாண்டில்இத்தாலியிலிருந்து  தமிழகம்  வந்து  தமிழ்  பயின்ற   வீரமாமுனிவர்,    
ஒழுங்குபடுத்தினார் ;  அதன்படி,

                 எ , ஒ -----  ----  ------  உச்சரிப்பு:  எ ,  ஒ .  (குற்றொலிகள்);
                 ஏ ,   ஓ ------   --- ---     உச்சரிப்பு: ஏ , ஓ .  (நெடில்கள் ) .
                  பெ , பொ  ---  --- --                       பெ , பொ    (குறில் )  ;
                  பே  , போ   ---    ---                        பே ,   போ .   (நெடில்)

      குறிலுக்கான   புள்ளி  ஒழிக்கப்பட்டு   ஓரளவு  சீர்மை  ஏற்பட்டது.

      20  ஆம்    நூற்றாண்டில்     பெரியார்  ஈ , வே.  ராமசாமி  அதுவரை    புழக்கத்தில்  இருந்த   சில  ஒழுங்கற்ற  வடிவங்களையும்  திருத்தினார்.   அவை:











அவற்றை  முறையே    றா,  னா , ணா,,  லை, ளை,  னை,  ணை    எனச்  சீரமைத்துத்   தமது  இயக்க
ஏடுகளில்   எழுதிப்   பரப்பினார்.   திராவிடர்  கழகத்தினர்   அனைவரும்    அவரைப்  பின்பற்றினர் .  
அதைச்  சட்டப்படி  அமல்படுத்தத்   தமிழர்  எவரும்   அக்கறை   செலுத்தவில்லை.  
எம். ஜி.  ஆர்.   தான்   அந்தப்   பெருமைக்கு   உரியவரானார். அவரால்  குறைந்தன  தமிழ்  கற்போரின்  சிரமங்கள்.

    ஓர்   இத்தாலியர்,  ஒரு  கன்னடியர்,  ஒரு  மலையாளி  எனத்  தமிழைத்  தாய்மொழியாய்க்   கொள்ளாதவர்களே  நம்  நெடுங்கணக்கை  ஒழுங்குபடுத்தினர் !
                                      
                                            ++++++++++++++++++++++++++++++++++

Wednesday, 15 April 2015

நூற்பா வரிசை


   இலக்கணவிதிகளைக் கூறும் செய்யுள்கள் வட  மொழியில் சூத்திரங்கள்  எனவும் தமிழில் நூற்பாக்கள் எனவும் சுட்டப்படுகின்றன. அவை அமைகிற வரிசையை அழகிய சொற்றொடரால் நன்னூல் குறிப்பிடுகிறது; அந்த வரிசை நான்கு வகைப்படும்:

    1   --   ஆற்றொழுக்கு  --  ஒரு  விதியைக்  கூறும்  ஒரு   சூத்திரம்அதற்குத்  தொடர்புடைய  அடுத்த  சூத்திரம்இப்படித்  தொடர்ந்து  செல்லும்  வரிசைக்கு  ஆற்றொழுக்கு  என்று  பெயர்.

   ஆற்றில்  நீர்  ஓடுகிறதுஅதைத்   தொடர்கிறது   பின்னால்  வரும்  நீர்இதை  மனத்திற்   கொண்டு  சூட்டிய  பெயர்.

   2  --    அரிமா  நோக்கம் -   பல   நூற்பாக்களையடுத்து  இடம்  பெறும்  ஒரு  சூத்திரமானது, தனக்கு முன்னால் உள்ள அத்தனைக்கும் பொதுவான  விதியைச்  சொன்னால்அது   அரிமா  நோக்கம்.

         அரிமா  என்பது  சிங்கம்;   அது  கொஞ்ச  தொலை  நடந்து  சென்றபின் ,  நின்று,     தான்  கடந்து   வந்த   பாதையைத்    திரும்பிப்   பார்க்குமாம்.  (மெய்  தானா  என்பது விலங்கு நூலார்க்குத்தான் தெரியும்). அப்படி சிங்கம்  நோக்குவது   போல்,   இந்த   நூற்பா, முந்தைய   பாக்களைத்  தழுவி,  விதி   சொல்கிறது  அல்லவா?

   3  --  தவளைப்  பாய்த்து --   அதாவது  தவளைப்   பாய்ச்சல்:   தவளைஓரிடத்திலிருந்து   வேறிடத்துக்குப்  பாயும்போதுஇடையில்  ஒரு   சிறு  நிலப்  பகுதியைத்   தாண்டுகிறது  அல்லவா?

 ஒரு பா இருக்கிறது;   இதற்கும்  அடுத்த  சில   பாக்களுக்கும்  தொடர்பு   இல்லை;  ஆனால்,  அதன்பின்பு  வரும் பாவுடன் தொடர்பு கொள்கிறது.  காட்டாக 28-  ஆம்   பாவின்   விதியும்   33 - ஆம்   சூத்திரத்தின்   விதியும்   சம்பந்தம்  உடையது.  இதுதான்  தவளைப்  பாய்த்து.  நான்கு  பாக்களைத்   தாண்டிவிடுகிறது.   

   4  --  பருந்தின்   வீழ்வு    ----   பல  நூற்பாக்கள்     ஆற்றொழுக்காகத்  தொடர்ந்து  செல்ல,   அடுத்து  வரும்  ஒன்று,   தனக்கு  முன்னால்  உள்ள    எல்லாப்  பாக்களுக்கும்   மட்டும்   அன்றி,   பின்னால்  வரப்  போகிற  சிலவற்றுக்கும்  பொருந்தும்   ஒரு  விதியைச்  சொன்னால்அது   பருந்தின்   வீழ்வு  (bird's  eye view).

 பருந்தானது  மேலே  வட்டம்  அடித்துக்கொண்டு  கீழேயுள்ள  எல்லாவற்றையும்   கவனிப்பது  போன்றது.

                                    நன்னூல்:

                    ஆற்றொழுக்கு      அரிமா     நோக்கம்    தவளைப்
                     பாய்த்துப்   பருந்தின்வீழ்வு  அன்னசூத்  திரநிலை.

     ஒரு    கட்டுரையிலும்  இந்த    நான்கு  நிலைகளைக்    காணலாம்:

    தொடர்ச்சியாகக்  கருத்துகளை  அடுக்கினால்ஆற்றொழுக்கு.   முன்னால்  உள்ள   சில  பத்திகளின்  எல்லாக்   கருத்துகளுக்கும்  தொடர்புடைய  பொதுவான  ஒரு  கருத்தைச்  சொல்வது  அரிமா  நோக்கம்.    4 ஆம்  பத்தியின்   கருத்தை    7 ஆம்    பத்தியில்   நினைவுபடுத்தி  மேலும்  அதை  விளக்குவது   தவளைப்   பாய்த்து . முன்னால்  எழுதியதுபின்னால்   சொல்லப்போவது,    யாவற்றையும்  தழுவும்  கருத்துபருந்தின்  வீழ்வு.  


                                 ============================

Saturday, 4 April 2015

என் கப்பல் பயணம்


   

 ஐம்பது  வயதுக்கு  உட்பட்டவர்களுக்குக்    கப்பல்  பயண  அனுபவம்  பெரும்பாலும்  வாய்த்திராதுஎனக்கு  அந்த  அரிய  வாய்ப்பு  கிட்டிற்று.

  பிரஞ்சுக்  காலனியாய்  இருந்த   வியட்நாமில்    ஓராண்டு  வசித்தபின்பிரான்சுக்குப்  போவதற்காக,   சைகோன்   (இப்போதைய  பெயர்  ஓச்சிமின்  சிட்டிதுறைமுகத்தில்,   மரேஷால்  ழோஃப்ர்   ( Marechal  Joffre)  என்ற  பிரஞ்சுக்  கப்பலில்    14 -07 -1948 இல்  ஏறி    26   நாள்   ( கிட்டத்தட்ட  ஒரு  மாதம்!) பயணித்தேன்.

   இலங்கையர்  இருவரும்    நானும்  ஆக   மூவரே  தமிழர் ;   10, 15 வியட்நாமிய  இளைஞர்மேற் கல்விக்காகவோ   வேலை  தேடியோ  சென்றவர்கள்;   மற்ற   யாவரும்   பிரஞ்சியர்மொத்தம்   200  பயணிகள்   இருக்கலாம்.

   சிங்கப்பூரில்  கப்பல்  நின்றுவிட்டுக்  கொழும்பை அடைந்ததும்  இலங்கையர்  இறங்கினர்.

   முதல்  நாள்மூன்று  தளங்களுக்கும்  போய்ச்  சுற்றினேன்முடி  வெட்டும்  கடைசலவைக்  கடைபல்பொருள்   விற்பனை அகம்சாராயக்  கடை முதலியன  கண்டேன்.   புதுச்  சூழ்நிலை,   புதிய  இடம்,   அறிமுகமற்ற  மனிதர்கள்அனுபவம்  புதுமை!    சில  நாள்  மகிழ்ச்சியாய்க்  கடந்தன.

    மேல்   தளத்தில்   அமர்ந்துசுற்றுமுற்றும்  பார்க்கையில்கப்பலானது   கடல் நீரை   இரு  புறமும்   நுரை  பொங்கக்  கிழித்துக்கொண்டு முன்னேறுவது கண்ணுக்கு  விருந்தளித்ததுஅவ்வப்போதுசற்றுத்  தொலைவில்சுறா  மீன்கள்   கடலுக்கு  மேலே  துள்ளி   அரை  வட்டமடித்துப்   பாய்வதைக்  கண்டு   களிக்கலாம்;   அரிதாக,   ஒரு  கப்பல்   எங்களை  நோக்கி  வந்து ,   மெது  மெதுவாகத்  தாண்டிச்  செல்லும்மற்றபடிஎங்கெங்கும்   நீர்நீர், நீர்!   நீரன்றி   வேறில்லை!

        உலகின்  முக்கிய  செய்திகளைச்  சுருக்கமாகத்  தட்டச்சு   செய்து   காலையில்  அறிவிப்புப்   பலகையில்  ஒட்டுவார்கள்;    (இந்திய  நிகழ்வுகள்   அநேகமாக  இடம்   பெறா).  கப்பல்  எந்தத்   துறைமுகத்தை  எப்போது   அடையும், எவ்வளவு   காலம்  நிற்கும்,   இறங்கிச்  சுற்றிப்  பார்க்க  அனுமதி  உண்டா  என்னும்  விவரங்களை  அதில் வாசித்தறியலாம்ஐந்தாறு  நாளுக்கு  ஒருமுறை, "இன்றிரவு   கடிகாரத்தை  ஒரு   மணி    நேரம்   தாமதப் படுத்திக்கொள்ளுங்கள்" என்ற  யோசனை  இருக்கும்.

     இரவில்கப்பல்  பல  வண்ண  மின்விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டுப்   பேரெழிலுடன்  திகழும்அந்த  விளக்கொளியில், மேல்  தளத்தில்,  பொழுது   போக்குக்காககுத்துச்  சண்டைஓரங்க  நாடகம்ஆடல்  பாடல்  என  சிற்சில  நாள்களில்  கலை நிகழ்ச்சிகளைப்  பயணிகள் நிகழ்த்தினார்கள்.

    எப்போதாவது ,   எங்கோ  வெகு  தொலைவிலிருந்துஒரு  கலங்கரை   விளக்கம்   தன்  புள்ளி  போன்ற  ஒளியைச்  சுழற்றும்;   அப்போதெல்லாம்   என்  மனத்தில்  ஏக்கம்  பிறக்கும்அதோஅங்கேமனிதர்கள்    காலாரத்  தரையில்   நடக்கிறார்கள்!

       கொழும்பிலிருந்து  ஜிபுத்திக்கான  ஒருவாரப்  பயணத்தின்போதுதான்  துன்புற்றோம்கப்பல்  இப்படியும்   அப்படியும்  சாய்ந்தாடி,    மேல்  தளத்திலிருந்த   எல்லாரையும்  ஒரு  பக்கத்திலிருந்து  எதிர்ப் பக்கத்துக்குத்  தள்ளிப்  பந்தாடியது. பலர்க்கு  மயக்கம்சிலர்  வாந்தி  எடுத்தனர்நல்ல  வேளைசில  மணி   நேரத்தில்  விமோசனம் கிட்டிற்று.

      ஜிபுத்தியில்   எங்களுக்கு  முன்னரே   சில  கலங்கள்   நங்கூரமிட்டுக்  காத்திருந்தனசூயஸ்    கால்வாயைக்   கடந்து    நடுநிலக்   கடலை   அடைய    வேண்டும்ஒரு  சமயத்தில்   ஒரு   கப்பல்  மட்டுமே   செல்ல  முடியும்மனிதன்  வெட்டிய   கால்வாய்   அல்லவோ?   அகலம்  அதிகமில்லை. வடக்கிலிருந்து  ஒவ்வொரு    கப்பலாய்,   இடைவெளி விட்டுவந்துகொண்டிருந்ததுஅது  முடிந்தபின்இங்கிருந்த    கப்பல்களை   வரிசைப்படி  அனுப்பினார்கள்.

      பிரான்சின்  மிகப்  பெரிய  துறைமுகமாகிய  மர்சேயை   ( Marseiille )  10-08-1948 இல்நல்ல   வண்ணம்  அடைந்து   யாவரும்   இறங்கினோம். அப்பாடா!

      கடற்பயணம்   படுபோர்!   இதைக்காட்டிலும் போர்வான் பயணம்;   ஆனால்  விரைவாய்   முடிந்துவிடும்.

                    ------------------------------------------------------------------