ஆத்திரேலியாவின்
தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி
லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழில்
பெயர்த்திருக்கிறார் கீதா
மதிவாணன் . என்றாவது
ஒரு
நாள் என்னும்
தலைப்புடன்
வெளிவந்துள்ள அந்தச் சிறுகதைத்
தொகுப்பு நூலை விரிவாய்த் திறனாய்ந்த இரு
கட்டுரைகள்
இணையத்தில்
இடம் பெற்றிருக்கின்றன.
என்
பங்குக்கு, நூல்
பற்றிய என் கருத்துகளைப் பதிகிறேன்.
ஒரு
நூற்றாண்டுக்குமுன்பு, ஆத்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட
ஆங்கிலேயக்
கைதிகள், தங்களுக்குச்
சிறிதும் பழக்கமில்லாத,
புத்தம்புதிய, அடிப்படைக்
கட்டமைப்பு அறவே
இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு
ஆளாகி
அனுபவித்த
இன்னல்களை ஆசிரியர்
திறம்படச் சித்திரித்துள்ளார்.
கதைமாந்தர் கீழ்மட்ட
மக்கள், ஏழைகள்; ஆயினும் கடின
உழைப்பு, கடமையுணர்ச்சி, பாசம், அறைகூவல்களை
எதிர்கொள்ளும்
துணிச்சல்
முதலான நற்பண்பு
உடையவர்கள்; சிறுவர்களும்
குடும்பப் பாரத்தை
மனமுவந்து
சுமக்கிறார்கள்! ஆயினும், பொறுப்பற்ற போக்கு, தன்னலம்,
பகையுணர்வு சிலரிடம்
காணப்படுகின்றன.
தம் வாழ்வில்
ஆசிரியர் அனுபவித்த துன்பங்கள்
தந்த பட்டறிவு, கதை
மாந்தரையும் சூழ்நிலையையும் துல்லியமாய்ச் சித்திரிக்கப் பெருமளவில்
உதவியிருக்கும்.
அக்கம்பக்கம் மனித சஞ்சாரமற்ற
தனிமைச்
சூழ்நிலை, விரக்திக்கு
எளிதில் இட்டுச்
செல்லக்கூடியது; ஆயினும் இவர்களில் யாரும், "என்ன
வாழ்க்கை
இது? இப்படி உழல்வதைவிட,
இறந்து போவது மேல்" என்று எதிர்மறையாய்ச்
சிந்தியாமை போற்றற்குரியது.
லாசனின்
சுவை நிரம்பிய எழுத்துக்கு ஒரு
காட்டு: புதர்க்
காடுறை
பூனைகள்; அவருடைய
எழுத்தாற்றலைப்
பக்கம்
65 பறை
சாற்றுகிறது:
வாசகரின்
உள்ளம் நெகிழுமாறு
வறியவரின்
அவல
நிலையை அது
விவரிக்கிறது.
மொழிபெயர்ப்பு: இப்போதைய ஆத்திரேலிய ஆங்கிலம் இங்கிலாந்துக்காரர்களுக்கே விளங்குவது
கடினம் என்பர்; அப்படியிருக்க, முற்கால, ஒரு கலப்புக் கொச்சை மொழியைப் புரிந்து
மொழிபெயர்ப்பது என்பது
அறைகூவல்
நிறைந்த பணி.
மூல ஆசிரியரின் கருத்து, நடை, உத்தி ஆகிய
மூன்றையும் அப்படியே
வாசகர்க்கு வழங்குவதே சிறந்த பெயர்ப்பு
எனப்படுகிறது. அதில் பாராட்டுக்குரிய
விதத்தில் வெற்றி
பெற்றிருக்கிறார் பெயர்ப்பாளர்;
சனியன்,
புண்ணியமாய்ப் போகட்டும், பாழாய்ப்போன முதலிய சில சொற்றொடர்கள் மட்டும் தமிழ்ச் சாயலைத் தோற்றுவிக்கின்றன; மூலத்தில் இப்படி இருக்காது
எனக் கருதுகிறேன்.
கீதா மதிவாணனின் எழுத்துப் பணி மேன்மேலும் சிறக்கட்டும்!
அய்யா வணக்கம். சகோதரி கீதமஞ்சரியின் வலைத்தள வழியே தங்களை அறிந்து வந்தேன்.
ReplyDeleteகாலத்தை வென்று நீங்கள் ஆற்றிவரும் கணினித்தமிழ்ப் பணிகள் வளரந்தோங்க, வாழ்த்தி வணங்குகிறேன் அய்யா. வளர்க தங்கள் பணியும், உடல்வளமும். நன்றி வணக்கம்
உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
Deleteதங்களுடைய விரிவான இந்த கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி. மூல ஆசிரியரைப் பாராட்டியிருப்பதோடு மொழிபெயர்ப்பையும் பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது.
ReplyDelete\\சனியன், புண்ணியமாய்ப் போகட்டும், பாழாய்ப்போன முதலிய சில சொற்றொடர்கள் மட்டும் தமிழ்ச் சாயலைத் தோற்றுவிக்கின்றன; மூலத்தில் இப்படி இருக்காது எனக் கருதுகிறேன்.\\
தாங்கள் குறிப்பிட்டுள்ளது சரிதான். மூலத்தில் இருக்கும் வார்த்தைகளை அப்படியே தமிழுக்கு நேரடியாக மாற்றினால் பொருத்தமாக இல்லை. அதனால் தமிழில் புழங்கும் சொற்களையே பயன்படுத்தியுள்ளேன்.
For god’s sake என்பது வார்த்தைக்கு வார்த்தை வருகிறது. அதை கடவுளுக்காக என்பதை விடவும் உனக்கு புண்ணியமாக போகட்டும் என்பது சரியாகத் தோன்றியது.
அது போல் blanky என்ற வார்த்தையும் வரிக்கு வரி வருகிறது. எரிச்சலையும் வெறுப்பையும் குறிப்பிட உதவும் வார்த்தை அது. கிட்டத்தட்ட bloody- என்பதற்கு நிகரான ஆஸ்திரேலிய வார்த்தை. அதை பாழாய்ப்போன என்று மாற்றியிருக்கிறேன். Blanky dingoes என்ற இடத்தில் பாழாய்ப்போன டிங்கோக்கள் என்று குறிப்பிட்டுள்ளேன்.
ஒருவன் தனக்கு விருப்பமில்லாமல் பிறக்கவிருக்கும் குழந்தையை Little begger என்று சொல்கிறான். அதை அப்படியே மொழிபெயர்த்தால் பிச்சைக்காரக்குழந்தை என்று சொல்லவேண்டியிருக்கும். அது வேறு பொருள் தரலாம். அதைவிடவும் குட்டிச்சனியன் என்று குறிப்பிடுவது வாசகருக்கு நெருக்கமாய் இருக்கும் என்று தோன்றியது.
தொடர்ந்து எழுத ஊக்கம் தரும் வகையில் அளித்த சிறப்பான கருத்துரைக்கு மிக்க நன்றி.
ஆங்கிலம் , பிரஞ்சு முதலான வளம் மிக்க மொழிகளில் உள்ளதைத் தமிழில் பெயர்ப்பது கடினந்தான் . கலச்சார வேறுபாடு ,, பழக்க வழக்கம் என்கிற சிக்கல்களோடு தமிழில் சொல் பற்றாக்குறையும் சேர்ந்துகொள்கிறது .. மூலச் சொற்கள் குறித்த விவரம் அறிந்தேன் . பெயர்த்தது சரியே எனத் தோன்றுகிறது .
Deleteவணக்கம் ஐயா.
ReplyDeleteமொழியாக்கம் செய்யப்பட்டுள்ள மிக அருமையானதொரு நூலினைப்பற்றி வெகு அழகாக விமர்சனம் செய்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள் ஐயா.
தாங்கள் மேற்படி நூல் ஆசிரியர் அவர்களின் சொந்த மாமனார் என்பது கேட்க மேலும் என் மகிழ்ச்சி இரட்டிப்பானது. மிக்க மகிழ்ச்சி, ஐயா.
அன்புடன் VGK
உங்கள் பாராட்டுக்கு என் உள்ளமார்ந்த நன்றி , ஐயா ..ஆம் , என் மருமகள் மூவருள் நூலாசிரியர் இரண்டாமவர் .
Delete//சொ.ஞானசம்பந்தன்15 March 2015 at 01:04
Deleteஉங்கள் பாராட்டுக்கு என் உள்ளமார்ந்த நன்றி , ஐயா ..ஆம் , என் மருமகள் மூவருள் நூலாசிரியர் இரண்டாமவர் .//
கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி, ஐயா.
தங்களைப்போலவே எனக்கும் மூன்று மருமகள்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மிகச்சிறப்பானவர்களே.
என் இரண்டாவது மருமகள், எங்களின் பசியறிந்து ருசியறிந்து, வக்கணையாக தினமும் சமைத்துப் போடுவதில் மிகவும் எக்ஸ்பர்ட். கொடுத்துத்தான் வைத்திருக்கிறோம், நாங்களும்.
தங்களின் இரண்டாவது மருமகள் வலைப்பதிவுகளின் மூலம் எனக்கு மிகவும் பரிச்சயம் ஆனவர்கள். அவர்களின் எழுத்தின் தனித்திறமைகளை சொல்லி மாளாது.
தங்களின் மகளும், எனக்கு பலவிதங்களில் பல உதவிகள் செய்துள்ளவர்களே.
முடிந்தால் கீழ்க்கண்ட ஒருசில பதிவுகளை மட்டும் JUST பாருங்கோ, ஐயா:
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html
http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html
http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html
http://gopu1949.blogspot.in/2014/11/part-4-of-4.html
http://gopu1949.blogspot.in/2014/10/5.html
http://gopu1949.blogspot.in/2014/10/3.html
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html
என்றும் அன்புடன் VGK
"என்றாவது ஒரு நாள்" - நூல் பற்றிய சொ.ஞானசம்பந்தன் அய்யாவின் அற்புதமான திறனாய்வு கருத்துரை என்னை அவர்பால் இனம்காணாத புரிதலுக்கும் போற்றுதலுக்கும் உட்படுத்தி விட்டது.
ReplyDeleteகாரணம் யாதாக இருக்கும் எண்ணிப் பார்த்தேன்
எனது மாநிலத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர் என்பதனாலா?
அல்லவே அல்ல!
தள்ளாத வயதிலும் துள்ளி விளையாடும் அவரது எழுத்தின் வலிமை வரிகளில் வசப்பட்டு கிடக்கின்றது.
சகோதரி கீத மஞ்சரியின் வருகையால் இதை படிக்கவும் ,தங்களை பற்றிய செய்திகளை அறியவும் நல்ல வாய்ப்பு நாடி வந்தமைக்கு நவில்கிறேன் நன்றினை!
நண்பர் சொக்கனிடம் சொல்லி அந்த நூலை அவசியம் வாங்கி படித்து அறிவேன்.
நன்றி!
தம வாக்கு 1
நன்றியுடன்,
புதுவை வேலு
உங்கள் கருத்துரைக்கு என் அகமார்ந்த நன்றி . அளவுக்கு மீறிய புகழ்ச்சி எனக் கருதுகிறேன் . நீங்களும் புதுவை என்பதறிய மிக்க மகிழ்ச்சி .
Deleteஉங்கள் வலைப்பூவில் நீங்கள் எழுதி வருவதைத் தவறாமல் படித்து வருபவன்.நான். எனது ப்திவு ஒன்றுக்கு நீங்கள் பின்னூட்டம் எழுதி இருக்கிறீர்கள். திருமதி .கீதா மதிவாணன் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் என்பதை விட மொழியாக்கம் செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவரது படைப்பு ஒன்றுக்குப் பின்னூட்டமாகநான் இம்மாதிரி மொழியாக்கம் செய்யும் போது மூலப் படைப்பில் இருக்கும் நேடிவிடி காணாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது என்று எழுதிய நினைவு. உங்கள் சுருக்கமான கருத்துரை படிக்கும் போது சொல்வதைவிட சொல்லாமல் விட்டதே அதிகம் என்று தோன்றுகிறது
ReplyDeleteதவறாமல் நீங்கள் படித்துவருவது எனக்கு ஊக்கமூட்டுகிறது .மிக்க நன்றி . ஏற்கனவே இரு விரிவான விமர்சனங்கள் வந்துவிட்டமையால் நான் சுருக்கிக்கொண்டேன் .
Deleteகண்டிப்பாக படிக்க வேண்டும் என்று தூண்டுகிறது ஐயா அவர்களின் விமர்சனம்.
ReplyDeleteஎன் விமர்சனத்தைப் பாராட்டியமைக்கு மிகுந்த நன்றி .
Deleteசிறப்பான விமர்சனம் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Deleteமொழிபெயர்ப்பு: இப்போதைய ஆத்திரேலிய ஆங்கிலம் இங்கிலாந்துக்காரர்களுக்கே விளங்குவது கடினம் என்பர்; அப்படியிருக்க, முற்கால, ஒரு கலப்புக் கொச்சை மொழியைப் புரிந்து மொழிபெயர்ப்பது என்பது அறைகூவல் நிறைந்த பணி//
ReplyDeleteஇதைவிட வேறு என்ன வேண்டும் கீதாமதிவாணனை மிக அருமையாக பாராட்டி விட்டீர்கள்.
கீதா மதிவாணனின் எழுத்துப் பணி மேன்மேலும் சிறக்கட்டும்! //
இந்த வாழ்த்துக்களும் அவரை மேலும் எழுத்து பணியை சிறப்பாக செய்ய உதவும்.
பாராட்டிக் கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி .
Delete"அக்கம்பக்கம் மனித சஞ்சாரமற்ற தனிமைச் சூழ்நிலை, விரக்திக்கு எளிதில் இட்டுச் செல்லக்கூடியது; ஆயினும் இவர்களில் யாரும், "என்ன வாழ்க்கை இது? இப்படி உழல்வதைவிட, இறந்து போவது மேல்" என்று எதிர்மறையாய்ச் சிந்தியாமை போற்றற்குரியது."
ReplyDeleteஉண்மை தான். இவ்வளவு கஷ்டம் இருந்தபோதிலும் வாழ்வின் மீது யாருக்குமே சலிப்பு தோன்றாதது வியப்பே. புரிந்து கொள்ள கடினமான முற்கால கலப்புக் கொச்சைமொழியைச் சரியாக ப் புரிந்து மொழியாக்கம் செய்வது அறைகூவல் நிறைந்த பணி, அதைத் திறம்படச் செய்திருக்கிறார் கீதா என்று தாங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. நல்லதொரு விமர்சனத்துக்கும், கீதாவுக்கும் பாராட்டுக்கள்!
பாராட்டுக்கு மிக்க நன்றி
Deleteசகோதரி கீதா மதிவணன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி ஐயா
தம +1
உங்களுக்கு என் பதில் நன்றி
Deleteஇரத்தினச் சுருக்கம் என்பது இது தானோ? ஒரு மிளகு போல: ஒரு கடுகு போல சின்னதாயும் செறிவானதாயும்!.....நன்றி ஐயா.
ReplyDeleteஐயா அவர்களின் கருத்தின் மூலமாக கீதாவிடம் இருந்து வந்திருக்கிற விளக்கம் மொழி பெயர்ப்பின் தார்ப்பரியத்தையும் தமிழின் ஜீவிதத்தையும் முக்கியமாக மொழி பெயர்ப்புக்கு கீதா கொடுத்திருக்கிற உழைப்பு சிரத்தை மற்றும் ஒவ்வொரு சொல்லுக்கும் அவர் கொடுத்திருக்கிற முக்கியத்துவம் எல்லாவற்றையும் கூட வெளியே கொண்டு வர உதவியது.
யாரை பாராட்டுவது? யாரை வாழ்த்துவது? இரண்டும் ஒன்றை ஒன்று தாங்கி சிறப்புச் செய்கிறது.
ஊக்கந் தரும் உங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்றி .நிச்சயமாக மொழிபெயர்ப்பாளர்தான் அதிகப் பாரட்டுக்குரியவர் . சமைத்தவர் அவர் , சுவைத்துக் கருத்து சொன்னவன் நான் .
Delete