Tuesday, 26 May 2015

வெள்ளையரின் நெடுங்கணக்கு


     

  ஆங்கில  எழுத்து  என  நாம்  குறிப்பிடும்  26  எழுத்துக்கும்  ஆதிமூலம்  பினீசியரின் (Phoenicians)  நெடுங்கணக்கு.   இவர்கள்  நடுநிலக்  கடலின்  மேலைக்  கரையில்இப்போதைய  லெபனான்  நாட்டின்  மேற்குப்  பகுதியில்,   சுமார்  2500  ஆண்டுக்கு முன்பு    தலைசிறந்த  நாகரிகத்துடன்  வாழ்ந்தவர்கள் ;   விவிலியம்  இவர்களைக்    கானானியர்  என்கிறதுஇவர்கள்தான்  தனித்தனி  எழுத்துகளால்   ஆன  (மொத்தம்  22  எழுத்துநெடுங்கணக்கை  உருவாக்கிய  உலக  முதல்வர்கள்

    இதைத்    தெரிந்துகொண்ட  கிரேக்கர்,   தமது  மொழியின்  தேவைக்கேற்பகொஞ்சம்  சீர்படுத்தியும்  நான்கு   எழுத்தைக்  கூட்டியும்  உபயோகித்தனர்பினீசிய  நெடுங்கணக்கின்   முதலிரண்டு  எழுத்துகளுக்குப்  பெயர்   அல்ஃபா,    பேத்  (alpha,  beth).  இந்தப்  பெயர்களைக்  கிரேக்கர்  அப்படியே  தங்களது  மொழியின்  முதலிரு  எழுத்துகளுக்கும்  சூட்டினர்:   அல்ஃபாபீட்டா  (alpha, beta ).   இவை இரண்டும்   சேர்ந்ததால்   அல்ஃபாபெட் (alphabet)  என்னும்  சொல்  பிறந்தது.

     கிரேக்கரிடமிருந்து,     இத்தாலியில்  வாழ்ந்த  எத்ருஸ்கர்  (Etruscans)  என்ற  மக்களும்     இவர்களிடமிருந்து,   ரோமானியரும்    நெடுங்கணக்கைக்  கற்று,    தத்தம்  மொழிகளுக்கு  உபயோகித்தார்கள்தென்  ஐரோப்பா முழுதும்   ஒரு  காலத்தில்  ரோமானியரின்  கையில்  இருந்ததால்  அவர்களின்  மொழியாகிய  லத்தீன்   (26 எழுத்துஅக்  கண்டத்தில்  பரவியதுரோமன்  எழுத்து (Roman   Script)  எனப்  பெயரிடப்பட்ட  அதை   ஒவ்வொரு  நாட்டாரும்  கூட்டியோ குறைத்தோ  மாற்றியோ  பயன்படுத்தினர்.

      காட்டாக, பிரஞ்சில்  39  எழுத்துகள்   உண்டு:  a e i o u  ஆகியவற்றின்மீது  இரட்டைப் புள்ளி  வைத்தோசாய்வுக்   கோடு  இழுத்தோ,   தொப்பி  போட்டோ   புது  எழுத்துகளை  உருவாக்கியுள்ளனர்;  o  வும்  e  யும்  ஒட்டிக்கொண்ட   ஓரெழுத்தும்   வால்  முளைத்த   c  யும்  உண்டு.

     இப்போது வெள்ளைக்காரர்கள்  வாழும்  எல்லா  நாடுகளும்  மட்டும்  அல்லாமல்   துருக்கிவியட்நாம்  முதலான   வேறு   சில   நாடுகளும்          ரோமனெழுத்தைக்  கைக்கொண்டுள்ளன.  

   உலகத்தில்  பெரும்பாலான  பகுதிகளில்  அமுலில்  இருக்கும்   நெடுங்கணக்கு  ஆசியாக்காரரால்   உருவாக்கப்பட்டது    என்பதை  எண்ணி    நாம்  பெருமை  பாராட்டலாம்.

        -------------------------------------

     

Thursday, 30 April 2015

தமிழ் நெடுங்கணக்கு (Alphabet)

   
    முதல்  ன்  வரையுள்ள   எழுத்துகள்  கொண்ட   நெடுங்கணக்கை   நாம்  பயன்படுத்துகிறோம்; இதைத்  தமிழர்   உருவாக்கவில்லை. அதனால்தான்  ற் ன்  என்ற  இரண்டு  எழுத்துகளும்  இறுதியில்  தள்ளப்பட்டன.    வரிசை  எப்படி  இருந்திருக்க  வேண்டும்?

    க் ங் , ச் ஞ் , ட் ண் ,  த் ந் , ப் ம் , ற் ன் .  ( கசடதபற );  ய் ர் ல் வ்,ழ்,ள் ( யரலவழள ). இப்படி.

அசோகரின்  கல்வெட்டுக்கள்   பிராமி   என்னும்  எழுத்தில்   செதுக்கப்பட்டுள்ளன;  
பிராமியில்    ற் ன்  இல்லை.   

  அந்த  பிராமி  தமிழகத்துக்கு  வந்தபோதுநம்  மொழிக்குத்  தேவைப்பட்ட   சில 
வேறுபாடுகளை   அதில்   செய்து   உருவாக்கியது  தமிழ்  பிராமி  எனப்பட்டது . காலத்தால்  
முற்பட்ட   தமிழ்க்   கல்வெட்டுகள்  (கி. மு. 2 ஆம்  நூற்றாண்டுதமிழ்  பிராமியில்   உள்ளன.

     அந்த   எழுத்துகாலப்  போக்கில்  உருமாறி,   வட்டெழுத்து   எனப்  பெயர் பெற்றது.  
அதிலிருந்து  தோன்றியது  இன்றைய  நெடுங்கணக்கு.   இது  தொல்காப்பியருக்கு   முன்பே    
புழக்கத்தில்  இருந்தமை

                         'அகர   முதல்  னகர  இறுவாய்'
                               (  முதல் ன் இறுதி)

என்னும்   நூற்பாவால்  தெரிகிறது.

     அசோகரின்   பிராமியில்      என்ற  ஒலிகள்  குற்றொலிகள்  அல்லஅவை     என   
நீட்டி  உச்சரிக்கப்பட்டனதமிழுக்குக்   குற்றொலிகள்  வேண்டுமேமேலே  புள்ளி  
வைத்து   சமாளித்தார்கள்.
       அதாவது:        ----  உச்சரிப்பு     ;





--- உச்சரிப்பு     .
       இதைத்   தொல்காப்பியம்  தெரிவிக்கிறது:

                மெய்யின்  இயற்கை  புள்ளியொடு  நிலையல் ;
                எகர  ஒகரத்து   இயற்கையும்  அற்றே.

     பொருள்:  மெய்  எழுத்தின்மேல்  புள்ளி  இட  வேண்டும்;     வுக்கும் அப்படியே.
      13  ஆம்  நூற்றாண்டில்  இயற்றப்பட்ட    நன்னூலும்  அதை வழிமொழிகிறது:

               தொல்லை   வடிவின   எல்லா   எழுத்தும் ஆண்டு
               எய்தும்    எகர  ஒகர   மெய்  புள்ளி.

     பொருள் :         ஆகியவற்றுக்கும்    மெய்யெழுத்துகளுக்கும்  புள்ளி  வைக்கவேண்டும்.

     உயிர்மெய்  எழுத்துகளுக்கும்  இது  பொருந்தும்:
          பெபொ  ------    உச்சரிப்பு --  பே , போ






உச்சரிப்பு  -- பெபொ.
     2000  ஆண்டாகத்   தமிழர்  அப்படித்தான்  எழுதிவந்தனர் .
    18 ஆம்  நூற்றாண்டில்இத்தாலியிலிருந்து  தமிழகம்  வந்து  தமிழ்  பயின்ற   வீரமாமுனிவர்,    
ஒழுங்குபடுத்தினார் ;  அதன்படி,

                 எ , ஒ -----  ----  ------  உச்சரிப்பு:  எ ,  ஒ .  (குற்றொலிகள்);
                 ஏ ,   ஓ ------   --- ---     உச்சரிப்பு: ஏ , ஓ .  (நெடில்கள் ) .
                  பெ , பொ  ---  --- --                       பெ , பொ    (குறில் )  ;
                  பே  , போ   ---    ---                        பே ,   போ .   (நெடில்)

      குறிலுக்கான   புள்ளி  ஒழிக்கப்பட்டு   ஓரளவு  சீர்மை  ஏற்பட்டது.

      20  ஆம்    நூற்றாண்டில்     பெரியார்  ஈ , வே.  ராமசாமி  அதுவரை    புழக்கத்தில்  இருந்த   சில  ஒழுங்கற்ற  வடிவங்களையும்  திருத்தினார்.   அவை:











அவற்றை  முறையே    றா,  னா , ணா,,  லை, ளை,  னை,  ணை    எனச்  சீரமைத்துத்   தமது  இயக்க
ஏடுகளில்   எழுதிப்   பரப்பினார்.   திராவிடர்  கழகத்தினர்   அனைவரும்    அவரைப்  பின்பற்றினர் .  
அதைச்  சட்டப்படி  அமல்படுத்தத்   தமிழர்  எவரும்   அக்கறை   செலுத்தவில்லை.  
எம். ஜி.  ஆர்.   தான்   அந்தப்   பெருமைக்கு   உரியவரானார். அவரால்  குறைந்தன  தமிழ்  கற்போரின்  சிரமங்கள்.

    ஓர்   இத்தாலியர்,  ஒரு  கன்னடியர்,  ஒரு  மலையாளி  எனத்  தமிழைத்  தாய்மொழியாய்க்   கொள்ளாதவர்களே  நம்  நெடுங்கணக்கை  ஒழுங்குபடுத்தினர் !
                                      
                                            ++++++++++++++++++++++++++++++++++