Wednesday, 28 March 2012

நெப்பெட்டீஸ்ம்



 

நெப்போஸ் என்ற லத்தீன் சொல்லுக்கு சகோதரன் அல்லது சகோதரி மகன் என்று பொருள். அது ஆறாம் வேற்றுமையில் நெப்போத்தீஸ் என மாறும். இதிலிருந்து பிறந்த பிரஞ்சு வார்த்தையான நெப்போத்தீஸ்ம், வேண்டியவர்க்குச் சலுகை வழங்குவதைக் குறிக்கும். இதை ஆங்கிலம் நெப்பெட்டீஸ்ம் ( Nepotism ) என்கிறது. 

இந்தச் சொல் உருவானமைக்கு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. 

14 ஆம் நூற்றாண்டில் போப்பாண்டவராய்த் தேர்வு செய்யப்பெற்ற ஒரு பிரஞ்சுப் பாதிரியார், ஐந்தாம் க்ளேமான் என்னும் பட்டத்துடன் ரோமுக்குப் போகாமல் பிரான்சிலிருந்தே அதிகாரம் செலுத்தினார். இத்தாலியை இடைவிடாப் புரட்சிகளும் உள்நாட்டுப் போர்களும் அலைக்கழித்தமையால் அவருக்குப் பின் பதவி ஏற்றோரும் பிரான்சிலேயே தங்கினார்கள். 

1305 இலிருந்து 1378 வரை நீடித்த அந்தக் கால கட்டத்தில் அவர்கள் மத நிர்வாகிகளைப் பணியமர்த்தக் கையூட்டுப் பெற்றும் இயன்ற வேறு வழிகளிலும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெரும் செல்வம் ஈட்டி ஆடம்பரமாய் வாழ அதைச் செலவழித்தார்கள்.

தங்கள் உடன்பிறந்தாரின் புதல்வர்களுக்கு விலையுயர்ந்த அன்பளிப்புகளைத் தாராளமாய் வழங்கினார்கள். அப்போது நெப்போத்தீஸ்ம் என்னும் புதுச் சொல்லை மக்கள் படைத்துப் புழங்கினார்கள்.

2 comments:

  1. நெப்பெட்டீஸ்ம் வார்த்தையின் வரலாற்றை அறிய உதவிய இப்பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. புதிதாய் ஒரு சொல் தோன்றிய வரலாற்றைப் பற்றி அறிந்து வியக்கிறேன். புதிய தகவல்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete