Tuesday, 13 March 2012

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....



எந்த ஆட்சியிலும் தங்களுக்கு நன்மை விளையவில்லை எனக் கருதுகிற ஏழை எளியவர்கள்,  " ராமன் ஆண்டால் என்ன?  ராவணன் ஆண்டால் என்ன? " என்ற பழமொழியைச் சொல்லித் தங்களின் விரக்தியை வெளிப்படுத்துவார்கள். 

இந்தப் பழமொழிக்கு மூலம் கம்ப ராமாயணம்.
யுத்த காண்டம் - மூல பல வதைப் படலம். 

அரக்கரின் பென்னம்பெரிய படையைப் போர்க்களத்தில் பார்த்த மாத்திரத்தில் திகிலடைந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது  இராமனின் வானரச் சேனை. அவனது கட்டளைப்படி அங்கதன் சென்று வானரர்களை அழைத்தபோது அவர்கள் வர மறுத்து

" அனுமன் , சுக்ரீவன்,  இராமன்,  இலக்குவன் ஆகியோரின் வலிமை தற்காப்புக்கே போதாதுஅவர்கள் எங்களை எப்படிக்  காப்பாற்றுவார்கள்ஆளை விடுங்கள். எங்களுக்கு உண்ணக் காய் கனிகள் உண்டுவாழக் குகைகள் உள்ளன.  உலகத்தை மனிதர் ஆண்டால் எங்களுக்கு என்ன?  அரக்கர் ஆண்டால் என்ன? " என்று வினவினார்கள். 

" மனிதர் ஆளின் என் இராக்கதர் ஆளின் என் வையம்?"
( வையம் - உலகம்) 

இதுவே சிறிது மாற்றம் பெற்றுப் பழமொழியாய்ப் புழங்குகிறது.

6 comments:

  1. அட, இப்படித்தான் வந்ததா அந்தப் பழமொழி! இதுவரை அறியாத விவரத்தை அறியச் செய்ததற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சரத்தில் தங்களை மீண்டும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பமைந்தமைக்காக மகிழ்கிறேன். நன்றி.

    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html

    ReplyDelete
  4. இன்று ஒன்றை உங்களால் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி..

    ReplyDelete