இது விளம்பர உலகம்: அன்றாடம் பல வகை
விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன, காதைத் துளைக்கின்றன;
சுவை நல்குபவை சில; எரிச்சல் ஊட்டுபவை வேறு சில. நுகர்வோரைக் கவர்வதற்காக எத்தனையோ உத்திகள் கையாளப்படுகின்றன; அவற்றுள்
அடிக்கடி இடம் பெறும் சொற்கள் புதிய, இலவசம், ஃபார்முலா முதலியவை.
விளம்பரம் சொல்வது என்ன என்பதைத்
தெரிந்துகொள்கிற நாம் அது என்ன சொல்லவில்லை என்பதை ஊகித்து உஷார் ஆவது முக்கியம்.
சில காட்டுகள்:
சொன்னது
|
சொல்லாதது
|
1.
மனைக்கு மிக அருகில் ரயில் நிலையம்
உள்ளது.
|
அங்கே முக்கிய வண்டிகள் நிற்காது.
|
2.
ஐந்து நிமிடத்தில் பேருந்து நிலையம்.
|
காரில் போனால்.
|
3.
இப்போது அதிக ஊட்டச் சத்துடன்.
|
இப்படிச் சொன்னாலாவது வாங்க மாட்டீர்களா?
|
4.
மூன்று கோடி பேர் இதைப்
பயன்படுத்துகிறார்கள்.
|
இதை நம்ப லட்சம் பேராவது இருப்பார்கள்.
|
5.
ஆடித் தள்ளுபடி.
|
தேங்கிக் கிடப்பதைத் தள்ளிவிடுவது.
|
6.
பரபரப்பாக விற்பனை ஆகிறது.
|
அப்படி விற்றால் இந்த விளம்பரம் ஏன்
கொடுக்கிறோம்?
|
7.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.
|
இரண்டுக்கும் சேர்த்துத்தான் விலை.
|
8.
எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஃபோன் செய்யலாம்.
|
ஏனோ தானோ பதில்தான் கிடைக்கும்.
|
9.
இது முடி கொட்டுவதைத் தடை செய்யும்.
|
தடையை மீறிக் கொட்டினால் நாங்கள் பொறுப்பல்ல.
|
10.
திருப்தி இல்லையேல் பணம் திரும்பப்
பெறலாம்.
|
நாங்கள் கொடுத்தால்.
|
ஹா... ஹா... சரியாகச் சொன்னீர்கள் ஐயா சொல்லாததை...
ReplyDeleteநன்றி...
நகைச்சுவை போல் நம் மக்களிடம் இருக்கும் அறியாமையை அழகாக உணர்த்திவிட்டீர்கள். நன்றியும் பாராட்டும்.
ReplyDeletesuperb!
ReplyDelete