தாவர இயல் அறிஞர் கு. வி. கிருஷ்ணமூர்த்தி, தமது "தமிழரும்
தாவரமும்" என்னும் ஆராய்ச்சி நூலில் எந்தத் தாவரங்கள் எவ்வெந்நாடுகளிலிருந்து எப்போது தமிழகத்துள் நுழைந்தன என்ற விவரங்களை வழங்கியுள்ளார். முக்கியமானவற்றை இங்கே பகிர்கிறேன்:
எண்
|
தாவரம்
|
நாடு
|
காலம்
|
1.
|
கடலைப் பருப்பு
|
இத்தாலி
|
கி.மு.5
|
2.
|
இஞ்சி
|
வட கிழக்கு இமயம்
|
கி.மு.1
|
3.
|
வெற்றிலை , பாக்கு
|
மலேசியா
|
கி.பி.1
|
4.
|
ஆல மரம்
|
வட இந்தியா
|
புத்தர் காலம்
|
5.
|
அரச மரம்
|
இமயமலை அடிவாரம்
|
மேற்படி
|
6.
|
மஞ்சள்
|
சீனா
|
தெரியவில்லை
|
7.
|
தென்னை
|
பிலிப்பைன்ஸ்
|
கி.பி.2
|
8.
|
பவழ மல்லிகை
|
வட இந்தியா
|
கி.பி.7
|
9.
|
கேழ்வரகு
|
ஆப்பிரிக்கா
|
கி.பி.10
|
10.
|
துளசி
|
இத்தாலி, பிரான்ஸ்
|
கி.பி.12
|
11.
|
இலவ மரம்
|
ஆப்பிரிக்கா
|
கி.பி.12
|
12.
|
புளிய மரம்
|
மேற்படி
|
கி.பி.14
|
13.
|
மிளகாய்
|
மெக்சிக்கோ
|
கி.பி.16
|
14.
|
கொய்யா மரம்
|
பெரு
|
கி.பி.16
|
15.
|
புகையிலை
|
அமெரிக்கா
|
கி.பி.16
|
16.
|
முந்திரி
|
தெரியவில்லை
|
கி.பி.16
|
17.
|
தக்காளி
|
அமெரிக்கா
|
கி.பி.17
|
18.
|
உருளைக் கிழங்கு
|
சிலி
|
கி.பி.17
|
19.
|
வெங்காயம்
|
ஆப்கானிஸ்தான்
|
கி.பி.17
|
20.
|
முள்ளங்கி
|
சீனா
|
கி.பி.17
|
21.
|
ஆரஞ்சு
|
சீனா
|
கி.பி.17
|
22.
|
வேர்க்கடலை
|
மத்திய அமெரிக்கா
|
கி.பி.19
|
23.
|
காப்பி
|
எத்தியோப்பியா
|
கி.பி.19
|
24.
|
மரவள்ளி
|
தென்னமெரிக்கா
|
கி.பி.19
|
25.
|
கிராம்பு
|
பசிபிக் தீவுகள்
|
கி.பி.19
|
(குறிப்பு - 1: பழங்காலத்தில் தமிழர் புளி பயன்படுத்தி இருக்கிறார்கள்; அது கோரக்கர் புளி எனப்படும்; மேற்கு மலைத் தொடரில் விளைகிறது.
குறிப்பு - 2: லெமூரியா என்ற குமரி கண்டம் பற்றிச் சில
தமிழறிஞர் கூறிவரும் செய்திகள் அறிவியலாதாரம் அற்றவை என இலக்கியச் சாரலில் லெமூரியா என்னும் தலைப்பில் தெரிவித்திருந்தேன்; அதற்கு இந்நூல் வலு சேர்க்கிறது
; பக்
. 12
-- 15.)
**************************
(படம் இணையத்திலிருந்து எடுத்தது)