நூல்களிலிருந்து
-- 10
மூப்பியல் மருத்துவ வல்லுநர் பேராசிரியர் வ. செ. நடராசன்
இயற்றிய 'முதுமையிலும்
இன்பம்' என்னும் நூல்
வழங்கும் அறிவுரைகளிற் சிலவற்றைப் பகிர்கிறேன்:
"முதுமைக் காலத் துன்பத்தைத் தள்ளிப்போட சுமார் 50 அகவையிலிருந்தே தேவையான முயற்சிகளை
மேற்கொள்ளவேண்டும்.
1 -- சத்துணவு -- முதுமையில் பசியும் சுவையும் குன்றுவதால்
உணவின் அளவும் குறைகிறது; உணவு சத்து
உள்ளதாயின், குறைவாக உண்டு, நிறைந்த பயனடையலாம்.
முதுமைக்கென்று தனியான உணவு எதுவுமில்லை.
2 -- உடற்பயிற்சி -- வயதான காலத்தில், மருத்துவரின்
ஆலோசனையைப் பெற்று, அவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளைத் தவறாமலும்
ஒழுங்காகவும் செய்துவந்தால், குருதி அழுத்தம் தவிர்த்து, எலும்பு வலிமை, நல்லுறக்கம் முதலிய நன்மைகளை அடையலாம்.
3 -- மருத்துவப் பரிசோதனை -- முதுமை ஒரு நோயன்று;
அது ஒரு பருவமே. வயதாக ஆக,
பசி குறைதல், தூக்கக் குறைவு, நினைவாற்றல் மங்குதல், முதலிய குறிப்பிடத்தக்க
சங்கடங்கள் உண்டாகும்; அவை முதுமையின் விளைவே
என்றெண்ணி அலட்சியப்படுத்தாமல் தொடக்க நிலையிலேயே மருத்துவரிடம் பரிசோதனை
செய்துகொண்டு சிகிச்சை பெறவேண்டும்.
4 -- மன நலம் -- முதுமையில்
உடல்நலம் எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை மனநலமும். வயது ஏற ஏற, மூளைத் திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். காட்டாக,
70 வயதுக்காரருக்கு
மூளையின் எடை சுமார் 65% தான் இருக்கும்;
அதனால், மனச்சிதைவு, மனத் தளர்ச்சி முதலான நோய்கள் வர வாய்ப்புண்டு.
நடுத்தர வயதிலேயே நல்ல பொழுதுபோக்குகளை
ஏற்படுத்திக் கொள்ளுங்கள்: புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல், இசை கேட்டல், நண்பர்களுடன் அளவளாவுதல் முதலியவை நற்பலன்
தரும்; தியானம் மனத்தை ஒருமுகப்படுத்துவதால் அது சிறந்த
டானிக். தனிமையில் முடங்கிக்
கிடப்போர்க்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு மிகுதியாக
ஏற்படக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. முதுமையின் எதிரியாகிய தனிமையை
எப்பாடுபட்டாவது தவிர்ப்பது மிக மிக அவசியம்.
முதியவர் பலர் நிறைய மருந்துகளை உட்கொள்ளுகின்றனர்.
நோய்கள் பல இருப்பினும் எவை மிகுதியாய்த் தொல்லை தருகின்றனவோ அவற்றுக்கு முக்கியத்துவம்
தந்து மருந்து தின்னலாம்; மருத்துவர்
ஆலோசனைப்படியே செய்யவேண்டுமேயொழிய தாமாகவே மருந்து உட்கொள்ளக்கூடாது; அவரைக் கேட்காமல்
மாத்திரையின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது; திடீரென்று நிறுத்துவதும் தவறு. முதுமையை வெல்ல
முடியும் என்று பல மருந்துகள் கடைகளில் விற்பனை ஆகின்றன; அவை எல்லாமே தீமையை விளைக்கக்கூடியவை. முதுமையை மருந்தினால் வெல்லவே முடியாது;
அது இயற்கையாக அகவை அடிப்படையில்
வருவது."
***************************
வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு தண்டனையா என்று எழுதி இருந்தேன் பிறிதொரு நாளில் முதுமையின் பரிசு என்றும் எழுதி இருந்தேன் நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள் சுட்டி இதோ
ReplyDeletehttp://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி . அவசியம் இரண்டையும் வாசிப்பேன் .
Deleteசெய்யாத குற்றம் பதிவின் சுட்டி இதோ
ReplyDeletehttp://gmbat1649.blogspot.in/2010/12/blog-post_05.html நன்றி
70 வயதுக்காரருக்கு மூளையின் எடை சுமார் 65% தான் இருக்கும் என்பது நான் இதுவரை அறியாதது. முதுமையில் இன்பம் காணும் வழிகள் எல்லோருக்குமே பயன்படக்கூடியது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete