Thursday, 12 January 2012

இராவணன்



பிறன் மனைவியைக் காமுற்றுக் கடத்திய மாபெருங் குற்றமே இராவணனின் அழிவுக்குக் காரணம் என்று ஒரு கருத்து  நிலவுகிறது . அது தவறான கருத்து .


அவன் எந்தச் சிறு தவறும் இழைக்காமல் இருந்திருப்பினும் கொல்லப்பட்டிருப்பான் .

" அவனை அழிப்பதற்காகத் தசரதன் மகனாய்ப் பிறப்பேன் " என்று
 தேவர்களிடம் உறுதி  அளித்துவிட்டுத்தானே இராமன் அவதரித்தான் ?

ஆதாரம் : கம்பராமாயணம் திரு அவதாரப் படலம் - பா : 201 :

" தசரதன் மதலையாய் வருதும் தாரணி "

( தசரதன் மைந்தனாய் வருவேன் உலகில் )

எனவே இராவணனின் கொலை என்பது தேவ லோகத்தில் முன்கூட்டியே , சீதை பிறக்கும் முன்பே , செய்த முடிவு .

வான்மீகி ராமாயணத்துக்கு வேறு பெயர் " ராவண வதம்" என்பது குறிப்பிடத்தக்கது .


(படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

1 comment:

  1. அவன் எந்தச் சிறு தவறும் இழைக்காமல் இருந்திருப்பினும் கொல்லப்பட்டிருப்பான் .

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete