Tuesday, 31 January 2012

நம் மேதை முன்னோர்



ஜான் குல்பெர்க் ( Jan Gullberg ) 1997 இல் மேதமேட்டிக்ஸ் ( கணிதம் ) என்ற நூலை அமெரிக்காவில் வெளியிட்டார். அதில் பழங் கால இந்தியக் கணித மேதைகள் சிலரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.


பக்கம் 72 - எதிரெண்கள் ( Negative numbers )


தொல் கால பபிலோனிய, எகிப்திய, கிரேக்க அல்லது வேறெந்த நாகரிகமும் எதிரெண்களை அறிந்திருந்தது என்பதற்குச் சான்றில்லை.


இந்தியாவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கணக்கு எழுதுவதற்கு அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பை நேரெண்களாலும் ( Positive Numbers ) கடனை எதிரெண்களாலும் குறித்திருக்கின்றனர்.


இந்திய வானியல் வல்லுநர் பிரம்மகுப்தர் (598-665) தம் விண்ணூலில் கணிதம் பற்றிய ஓர் அதிகாரத்தில் எதிரெண்களைப் பற்றித் தெளிவாக எழுதியிருக்கிறார்.



 பக்கம் 91 - ( வட்டம் பற்றிய கணக்குக்கு இன்றியமையாத பை என்ற அளவின் மதிப்பை இந்தியர் கணித்திருந்தனர் என்பதை இந்தப் பக்கம் தெரிவிக்கிறது.)


ஆரியபட்டர் கி.பி.499 இல் வெளியிட்டது : 3.1416...


பிரம்மகுப்தர் (598 இல் பிறந்தவர் ) பயன்படுத்தியது : 3.1622....


பாஸ்கரர் (1114இல் பிறப்பு ) : 3.14156...


ஏன், எப்படி என்பதை மூவரும் சொல்லவில்லை.



நம் முன்னோரின் கணித அறிவு பற்றி நாம் பெருமிதம் கொள்ளலாம் அல்லவா?

1 comment:

  1. நம் முன்னோர் கி பி ஏழாம் நூற்றாண்டிலேயே கணித மேதைகளாகத் திகழ்ந்ததை நினைத்துப் பெருமிதமாக இருக்கிறது. தகவலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete