உலகில் முதல்முதலாய்ச் சட்டங்கள்
இயற்றி, வழக்குரைஞர்களை உருவாக்கி , நீதி மன்றங்களை நிறுவி , வழக்கு விசாரித்துத் தீர்ப்பு வழங்குகிற முறையை ஏற்படுத்தியவர்
ரோமானியர்.
அந்த முறைதான் இந்தியா உள்ளிட்ட
பெரும்பாலான நாடுகளில் இன்றளவும் அமலில் நீடிக்கிறது அது மட்டுமல்ல ; ரோமானிய சட்ட நூல்களிலிருந்து பற்பல லத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் எடுத்து
உலகு பயன்படுத்துகிறது .
அவற்றுட் சில :
அலிபி , ஹபெயாஸ் கொர்ப்புஸ். , மலா ஃபிதே ,
போஸ்த் மொர்தேம் , ப்ரிமா ஃபசியே , சினே திஏ
( alibi , habeas corpus , mala fide , post mortem , prima
facie , sine die ).
குற்றவாளி தப்பிக்கலாம் , நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்னும் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை எடுத்துச் சொன்னவர் த்ரயான்
என்ற ரோமானிய சக்கரவர்த்தி .
அவர் சொன்னார் : " ஒரு
நிரபராதியைத் தண்டிப்பதைக் காட்டிலும் ஒரு குற்றவாளியைத் தப்ப விடுதல் மேலானது
"
அக் காலத்திலேயே அதிகாரத்தைத் தவறாய்ப்
பயன்படுத்தல் , அரசுக்கு எதிரான சதி , பொதுப் பணம் கையாடல் , உயில் மோசடி , கள்ள நாணயம் தயாரித்தல் , பெண் சிசுக் கொலை முதலான குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ரோமானிய வழக்குரைஞர்களுள் பெரும் புகழ்
எய்தியவர் சிசெரோ ( Cicero ) தேர்தலில் கையூட்டுத் தந்து வென்றதாக
முரேனா என்பவர்மீது தோற்றவர் ஒருவர் தொடுத்த வழக்கில் சிசெரோ முரேனாவுக்கு ஆதரவாகத்
திறம்பட வாதாடி அவரை மீட்டார் .
கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட மிலோ
என்னும் பெயருடையாருக்காகவும் அவர் வாதாடியிருக்கிறார் .
அந்த இரு வாதங்களும் ப்ரோ முரேனா (
முரேனாவுக்காக ) , ப்ரோ மிலோனே என்ற தலைப்புகளில் நூல்களாகி லத்தின்
இலக்கியப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன .
சட்டமுறை உருவாக்கம், செயல்பாடுகளின் முன்னோர் பற்றி அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteகருத்துரைக்கு மிக்க நன்றி .
ReplyDelete