Sunday, 19 February 2012

சில பிரஞ்சுப் பழமொழிகள்




1.  ஒன்றும் தெரியாதவனுக்கு எது பற்றியும் சந்தேகம் இருக்காது .


2.  எந்தச் சாராயத்துக்கும் வண்டல் உண்டு .


3. கேட்க விரும்பாதவரை விட மோசமான செவிடர் இல்லை.


4. தாடி வைத்தவரெல்லாம் பாதிரி அல்ல .


5. தேவை அற்றதை வாங்கினால் அவசியமானதை விற்க நேரும் .


6. நல்ல சாராயத்துக்கு விளம்பரம் தேவை இல்லை .


7. பழத்தை அடைவதற்காக மரத்தை வெட்டுவதா ?


8.-- முட்டையை உடைக்காமல் ஆம்லெட் செய்யமுடியாது .


9. பசிக்கிற வயிற்றுக்குக் காது இல்லை.


10.  உழைப்பானது நேரத்தைச் சுருக்குகிறது , வாழ் நாளைப் பெருக்குகிறது.

6 comments:

  1. இன்றைய சந்தை பொருளாதாரக் காலக்கட்டத்தில் எல்லோரும் பின்பற்ற வேண்டிய பொன்மொழி:-
    தேவையற்றதை வாங்கினால் அவசியமானதை விற்க நேரும் என்பது தான்.
    பெயர்ப்புக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு நன்றி . உண்மையிலேயே அந்தப் பழமொழிதான் இக் காலத்தில் யாவரும் நினைவில் கொண்டு ஒழுகவேண்டிய பழமொழி .

      Delete
  2. பத்துப் பழமொழிகளும் சிந்தனையைத்
    தூண்டும் நல்முத்துக்கள். அருமை.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாசித்து உங்கள் கருத்தை நன்றியுடன் எழுதியதற்கு மிக்க நன்றி .

      Delete
  3. ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு உதவும் அருமையான சிந்தனைகள் தாங்கிய பழமொழிகளெனும் பொன்மொழிகள். சிக்கனத்தின் பெருமை, உழைப்பின் அருமை, பசியின் கொடுமை என்று பழமொழிகள் கூறும் உண்மை வியக்கவைக்கின்றன. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. நன்றியுடன் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி . எல்லா மொழிகளிலும் மக்கள் தத்தம் பட்டறிவு தந்த சிந்தனைகளைச் சுருக்கமாய் எடுத்துரைத்துள்ளனர் . நம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மனத்தில் கொண்டு ஒழுகுதல் நன்று .

    ReplyDelete