ஆங்கிலேயரும்
பிரெஞ்சியரும் ஒரே இனத்தினர், பக்கத்துப் பக்கத்து நாடுகளில்தான்
வசிக்கிறார்கள் என்றாலும் அவர்களிடையே முரண்பாடுகளும் பல உண்டு.
இரு நாடுகளையும்
பிரிப்பது 37 கி.மீ. மட்டுமே அகலமுள்ள ஒரு கடல். அதை ஆங்கிலேயர் இங்கிலீஷ் சேனல் (ஆங்கிலக்
கால்வாய்) என்கின்றனர். பிரெஞ்சியரோ, அப்படி அழைக்க விரும்பாமல், கலே என்னும்
பிரெஞ்சுத் துறைமுகத்தின் பெயரால் 'பாதக் கலே' என்று சொல்கிறார்கள்.
மேலும் பல
மாறுபாடுகளைக் கீழே காண்க:
1. ஆட்சி முறை
இங்கிலாந்து :
மன்னராட்சி
பிரான்சு :
மக்களாட்சி
2. சமுதாயம்
இங்கிலாந்து : அரச
குடும்பத்தார், பிரபுக்கள், சாமானியர் என வேறுபட்டது.
பிரான்சு: யாவரும்
சமம்
3. மதப்பிரிவு
இங்கிலாந்து :
புரோட்டஸ்டண்ட்
பிரான்சு :
கத்தோலிக்கம்
4. மொழி
இங்கிலாந்து : ஜெர்மன்
குடும்பம்
பிரான்சு : லத்தீன் குடும்பம்
5. மனப்பான்மை
இங்கிலாந்து :
கட்டுப்பெட்டி
பிரான்சு : புதுமை
விருப்பம்
6. நிற வெறி
இங்கிலாந்து : மிகுதி
பிரான்சு : குறைவு
7. ஊர்திகள்
இங்கிலாந்து : இடப்பக்கம்
செல்லும்
பிரான்சு : வலப்பக்கம்
போகும்
8. நூல்களில் பொருளடக்கம்
இங்கிலாந்து : தொடக்கத்தில்
பிரான்சு : கடைசியில்
9. ஆணுறைக்குப் பெயர்
இங்கிலாந்து : பிரெஞ்சு
லெதர்
பிரான்சு : ஆங்கில உறை
10. அனுமதியின்றி மட்டம் போடுதல்
இங்கிலாந்து : பிரெஞ்சு
லீவ் எடுத்தல் என்பர்.
பிரான்சு : ஆங்கில
பாணியில் நழுவுதல் என்பர்.
ஓரினத்தைச் சேர்ந்த ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர் களுக்கிடையே இவ்வளவு முரண்பாடுகளா? தெரியாத தகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி.
ReplyDelete