Saturday 18 June 2016

இறையனார் களவியல் (தொடர்ச்சி)




தொல்காப்பியத்தில் அகம் பற்றி 162 பாக்கள் உள்ளன; அவற்றைக் கற்று, பல பாக்களை 
எடுத்தெழுதித் தம் நூலை இறையனார் ஆக்கியுள்ளார். (இப்படி முன்னோர் படைப்பைப் 
பின்னோர் காப்பியடிப்பது பழங்காலத்தில் தவறாய்க் கருதப்படவில்லை). கீழ்க்காணும் 

ஒப்புமைகள் கவனிக்கத்தக்கன:
     
தொல். 125 --   
                                        குறையுற உணர்தல் முன்னுற உணர்தல்
                               இருவரும் உள்வழி அவன்வர உணர்தலென
                                        மதிஉடம் படுதல் ஒருமூ வகைத்தே.

 கள-- 7 --                  முன்னுற உணர்தல் குறையுற உணர்தல்
                                        இருவரும் உள்வழி அவன்வர உணர்தலென்று
                                        அம்மூன் றென்ப தோழிக்கு உணர்ச்சி.

 தொல். 131 ---         அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே
                                        அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே.

கள --17 --                 அல்லகுறிப் படுதலும் அவ்வயின் உரித்தே
                                        அவன்வரவு அறியும் குறிப்பின் ஆன.

தொல். 128 --           குறிஎனப் படுவது இரவினும் பகலினும்
                                        அறியக் கிளந்த ஆற்றது என்ப

கள -- 18 --                குறிஎனப் படுவது இரவினும் பகலினும்
                                        அறியக் கிளந்த இடமென மொழிப.   

தொல்.  137 ---         அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின்
                                        அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும்.

கள  - 22 --               அம்பலும் அலரும் களவு

தொல். 138 --          வெளிப்பட வரைதல் படாமை வரைதல்என்று
                                       ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே.

கள - 24 --               களவு வெளிப்படா முன்னுற வரைதல்
                                      களவு வெளிப்பட்ட பின்றைவரைத லென்று
                                      ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே.

தொல். 134 --         ஆறினது அருமையும் அழிவும் அச்சமும்
                                      ஊறும் உளப்பட அதனோர் அற்றே.

கள -- 31 --              ஆறின் னாமையும் ஊறும் அச்சமும்
                                      தன்னை அழிதலும் கிழவோற்கு இல்லை.

தொல். 185 --           பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும்
                                       நீத்தகன்று உறையார் என்மனார் புலவர்
                                       பரத்தையிற் பிரிந்த காலையான.

கள - 43 ---              பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி
                                      பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும்
                                      நீத்தகன்று உறைதல் அறத்தாறு அன்றே.
    
தொல்.  177  --        அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்
                                      சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர்.

கள - 54 --               வன்புறை குறித்த வாயில் எல்லாம்
                                      அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றின்
                                       சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர்.

        பெயர் தெரியா அந்தப் புலவர் கட்டிவிட்ட கதைப்படிஆலவாய் இறைவன் சிந்தித்து
ஒரு மனிதன் இயற்றிய நூலிலிருந்து பாக்களை எடுத்துத் தான் இயற்றியது போல் 
செப்பேடுகளில் எழுதி வைத்திருக்கிறான்.
===============================

4 comments:

  1. அருமை... https://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. ’களவு’ என்ற வார்த்தை ஒருசில இடங்களில் வருவதும் தலைப்புக்கு ஏற்றபடி அமைந்து வேடிக்கையாகத்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  3. உங்கள் பின்னூட்டத்துக்கு என் அகமார்ந்த நன்றி .களவு என்னும் சொல் பற்றி நீங்கள் அருமையான கண்டுபிடிப்பைத் தெரிவித்தீர்கள் , பொருத்தமாக உள்ளது .எனக்கு இது தோன்றவில்லை .

    ReplyDelete