Friday, 30 October 2015

விலங்குகளுக்கு நோய்


   (17 ஆம்  நூற்றாண்டுப் பிரஞ்சுக்  கவிஞர்  லா  ஃபோந்த்தேன்  (La Fontaine)  கிரேக்கத்தின்  ஈசாப்  இயற்றிய  கதைகளைத் தம்  மொழியில்  பெயர்த்தார்அதில்  ஒரு   மாறுதலைச்  செய்தார்பாத்திரங்களைப்  பேச  வைத்து  நாடகமாக்கினார்ஒரு  கதையைத்  தமிழில்  பகிர்கிறேன்.)
     பீதியைப்   பரப்பும்  ஒரு  நோய்பூமியின்  கடுங் குற்றங்களைத்  தண்டிக்க  வானம்  தன்  சினத்தில்  உண்டாக்கிய நோய்பிளேக்  (பெயரைச்  சொல்ல  வேண்டுமேஒரே  நாளில்  நரகத்தை   நிரப்ப  வல்லதுவிலங்குகளைத்   தாக்கிற்று.

      எல்லாரும்  மடிந்துவிடவில்லைஆனால்  எல்லாரும்  தாக்குண்டனர்போகும்  உயிரை   நிலைநிறுத்த   எவரும்  அக்கறை  செலுத்தவில்லைஎந்த  உணவும்  பிடிக்காமற் போனதுஓநாய்களோ  நரிகளோ  இரை  பிடிக்கப்  பதுங்கவில்லை.

     சிங்கம்   அவையைக்   கூட்டியது:

    "என் அருமை   நண்பர்களே,   நம் பாவங்களுக்காக  தெய்வம்  இந்தத்  துர்ப்பாக்கியத்தைத்   தந்திருப்பதாய்  நான்  கருதுகிறேன். நம்முள்  யார்   அதிகப்  பாவியோஅவன்  இறைவனின்  கோபத்துக்குத்  தன்னைப்  பலியிடட்டும்அந்த  ஒருவனால்  அனைவரும்  குணமாகக்கூடும்.

       இந்த  மாதிரி  தியாகங்கள்இப்படிப்பட்ட  சமயங்களில்  செய்யப்பட்டதை  வரலாறு   நமக்குக்  காட்டுகிறதுபுகழ்ச்சிப்  பேச்சு  வேண்டாம்நமக்கு  நாமே  அனுதாபம் காட்டாமல்  மனசாட்சிப்படி  பேசுவோம்.

       என்னைப்  பொருத்தவரைஎன்  பயங்கரப்  பசியைத்  தணிப்பதற்கு எத்தனையோ  ஆடுகளைத்  தின்றேன்;  அவை  எனக்கு  என்ன  செய்தனஒரு  தீமையும் இல்லையேசில  சமயம்  இடையனையும்  தின்ன  நேர்ந்ததுண்டு.

      நான்  பலியாவேன், தேவைப்பட்டால்;   ஆனால்என்னைப்  போல்  மற்ற  ஒவ்வொருவரும்  தத்தம்  குற்றங்களை  ஒப்புக்கொள்வது  நல்லதென  நினைக்கிறேன்ஏனென்றால்  எல்லாரையுங்  காட்டிலும் அதிகக்  குற்றம்  புரிந்தவன்  சாகவேண்டியதுதானே  நீதி?"

       நரி  கூறியது:

     "அரசேநீங்கள்  உத்தமர்;  உங்கள்  கவலை  உங்களின்  இரக்கத்தை  வெளிப்படுத்துகிறது.

        ஆடுகள் என்ற  அற்பமான  மற்றும்  மடத்தனமுள்ள பிராணிகளைச்   சாப்பிடுவது  ஒரு  பாவமாஇல்லவே யில்லை;  அவற்றை  உண்டதால்   கெளரவப்படுத்தி  இருக்கிறீர்கள்;  இடையனோ  என்றால்மிருகங்களை  ஆட்டிப்  படைக்கிற  வர்க்கத்தைச்  சேர்ந்த  அவனை  என்ன  செய்தாலும்  தகும்  எனச்  சொல்லலாம்".

       எல்லாரும்  ஆரவாரத்துடன் கால்தட்டினர்.

      புலி  கரடி  முதலான  வலிய  விலங்குகளின்  மன்னிக்கத் தகாத  குற்றங்களை  ஆராய  எவரும்  துணியவில்லை;  சண்டைக்காரர்கள்  யாவரும்,  சாதாரண  நாய்கள்   உள்பட,   அவரவர்  வாக்குமூலப்படி     புனிதர்களாய்க்  காட்சியளித்தார்கள்.

     இறுதியாய்க் கழுதையின்  முறை  வந்தபோது  அது  சொன்னது:

 "எனக்கு நினைவு இருக்கிறது, ஒரு பாதிரியாரின் தோட்டத்துக்கு  அருகில் போனபோது, பசியும்  வாய்ப்பும்  புல்லின்  தளதளப்பும், இவையல்லாமல், நான் நினைக்கிறேன்ஏதோவொரு பேயும்  என்னைத் தூண்டவேஒருவாய்ப்   புல்லைத்  தின்றுவிட்டேன்;  அப்படிச்  செய்ய  எனக்குக்  கொஞ்சமும் உரிமையில்லைநேர்மையாய்ச்  சோன்னால்".

       அவ்வளவுதான்எதிர்ப்புக்  குரல்கள்  எழும்பின.

        ஓநாயொன்றுதன்  வாதத்திறமையால்அந்தக்  கேடுகெட்ட, ரோமமற்ற, சொறி  பிடித்த,   எல்லாத்  துன்பத்துக்கும்  ஊற்றாகிய  விலங்கைப்   பலியிட   வேண்டுமென்பதை   நிரூபித்தது. அதன்  சாதாரண  தப்பு  தூக்குக்குத்  தக்கது  எனத்  தீர்ப்பாயிற்று.

       பிறருடைய   புல்லைத்  தின்பது  எவ்வளவு  கொடிய   குற்றம்சாவு  மட்டுமே  அதற்குப்   பரிகாரமாய்  இருக்க  முடியும்.

       அதை  நடைமுறையில்  காட்டினர்  கழுதைக்கு .


     ========================
(படம் உதவி : இணையம்)

Wednesday, 21 October 2015

மூளையேது? (இதுவும் பிரஞ்சுக் கதை)

   
     


  நடை  தளர்ந்து போனமையால்  வேட்டையாட  முடியாமல்  வருந்தியது  ஒரு  சிங்கம்; முதுமையில்  பட்டினிச்  சாவுதான்  வன விலங்குகளின்  கதி  என்றாலும், உயிர் உள்ளவரை  பசியைத்  தணிக்க இரை  தின்ன  வேண்டுமல்லவா? இருக்கும்  இடந்தேடியா  உணவு  வரும்?  துள்ளும்  மான்களை  விரைந்தோடித்  துரத்தி, எம்பிப் பாய்ந்து பிடித்துக் குரல்வளையில்  கடித்துவயிற்றை  நிரப்பிக்கொண்ட அந்த  இனிய  காலம்  இனி  வருமா? சுகந்தருமா?

  ஏங்கித்  தவித்த  சிங்கம் எதிரில்  வந்த  ஒரு  நரியிடம், "வா, வா, நரியே, நல்ல சமயத்தில்  வந்தாய்ஓடியாடி  இரை  பிடிக்க  இனி  என்னால்  இயலாது  என்பது  உனக்குத்  தெரியும், பசி  தாங்க  முடியவில்லை,  நீ  எப்படியாவது  ஒரு  விலங்கை  அழைத்து  வாயேன்" என வேண்டியது.

 -----  அரசே, உங்கள்  நிலை  கண்டு  இரங்குகிறேன்தவித்த  வாய்க்குத்  தண்ணீர்  தருவதும் பசித்த  வயிற்றுக்கு  உணவு  ஈவதும்  தலைசிறந்த  அறமல்லவோ? "உண்டி  கொடுத்தோர் உயிர்  கொடுத்தோரே" என்பது  நூற்றுக்கு  நூறு மெய்நான் போய்  யாரையாவது  அழைத்து வருகிறேன்.

  ------ மிக்க  நன்றிநரியாரே!"

   ஓர் இளமானைச் சந்தித்த  நரிஇது  வேலைக்கு  ஆகும்  என்றெண்ணிஅதையணுகி,

   "மானேநலமாகும்பிடப்  போன  தெய்வம்  குறுக்கே  வந்தாற்போல் நீ  தரிசனம் தந்தாய். உன்னைப்  பார்க்க வேண்டும்  என்று   நம் மன்னர் என்னை  அனுப்பினார்இவ்வளவு  எளிதில்  காண  முடிந்தமை  வியப்பு!"  என்றது.

   ---  எதற்காகப் பார்க்க  வேண்டுமாம்?

   ---  தெரியாதுஅரசரிடம்  காரணம் கேட்க  முடியுமாஅவருடைய  உடல் நிலை  மோசம், காட்டுக்கே  தெரியும்அதிக  நாள்  தாங்காது.

   ---  எங்கே இருக்கிறார்?

   ---  அருகில்தான்என்னுடன் வா.

  இரண்டும்  சிங்கத்தின் இருப்பிடத்தை  அடைந்தன.

   "மானேவா;  எப்படி  இருக்கிறாய்?

  --- நலந்தான்,  வேந்தேநீங்கள்?

  ---  நாள்களை  எண்ணிக்கொண்டிருக்கிறேன்உலகை  நீங்குவதற்கு முன்எல்லாக்  குடிமக்களையும்  கடைசி  தடவையாய்ப் பார்க்க  வேண்டும் என்று  ஆசைசிலரைப்  பார்த்தாயிற்று;  உனக்காக  நரியைத்  தூது  விட்டேன்.

    ---- எனக்கும்  மகிழ்ச்சிதான் உங்களைச்  சந்தித்ததில்முன்னெல்லாம்  உங்கள்  குரலைக்  கேட்டாலே  நடுநடுங்குவேன்இப்போது  எதிரில்  வர  அச்சமில்லை.

    ----  நல்லதுஇன்னம்  கிட்டே  வா;  கட்டியணைக்க  விரும்புகிறேன்".

    நெருங்கிய  மானைப்  பற்ற  முயன்ற  சிங்கத்திற்குப்  போதிய  வலிமை இல்லை;  எச்சரிக்கையுற்ற  மான்  எடுத்தது  ஓட்டம்.

   "பொறுமை  இழந்து  காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே!

    ----  அவசரப்பட  வேண்டியதாயிற்றுவயிற்றைக்  கிள்ளுகிறதே  பசி.   நீ மறுபடியும்  போய்ச்  சமாதானப்படுத்தி  அழைத்து  வா; தந்திரத்தில்  உன்னை  மிஞ்சுவார் யார்?"

   உள்ளங்  குளிர்ந்த  நரி, மானைத்  தேடிப்பிடித்து, "என்ன  இப்படி  ஓடி  வந்துவிட்டாய்?" என்று  வினவியதும்அது  கோபத்துடன்,  "சீ! வஞ்சகனே, இரண்டு  பேரும்  சேர்ந்து  என்னைக்  கொன்று  தின்னத்  திட்டம்  போட்டீர்களா? பிடியில்  சிக்காமல்  நழுவினேனோபிழைத்தேனோ!

  ---- நீ நினைப்பது  தவறு; சிங்கத்துக்கு  இப்போதெல்லாம்  விலங்கபிமானம்  நிறைய  உண்டாகியிருக்கிறது;  உன்னைத் தழுவி  உச்சி  மோந்து  களிக்க  அது  விரும்பியதுகட்டுக்கடங்காத  ஆசைஆகையால்தான்  அவசரம். வா, குடிமகனுக்கு  நற்பேறு  அல்லவா  மன்னனைக்  கட்டித்  தழுவும்  வாய்ப்பு?"

    நரியின்  சொல்வன்மையில் சொக்கிப்  பகுத்தறிவைப் பறி கொடுத்தது மான்.

   இந்தத்  தடவை  சிங்கம்  பொறுமை  காத்துகைக்கெட்டிய  நெருக்கத்தில்  வந்தபின்பிடித்துக்  கொன்று  ஆனந்தமாய்த்  தின்றதுசதையைக் கடித்து  வலுவாய் இழுத்ததில் மானின் மூளை ஒரு பக்கமாய் விழுந்ததுதான்  தாமதம்நரி  அதைத்  தின்று  தீர்த்தது.

  முக்கிய உறுப்புகளை உண்டபின், சிங்கம், "மூளையைத்  தின்னவில்லையேஅது எங்கே?"  எனக்  கேட்டபோதுநரி  சொன்னது:

  "அதற்கு மூளையேதுஅரசே? மூளை இருந்தால் அது மறுபடியும்  வந்திருக்குமா?"

      =================================
(படம் உதவி: இணையம்)

Thursday, 15 October 2015

கொலம்பசின் முட்டை

  (இது   ஒரு  பிரஞ்சுக்   குட்டிக்  கதை)

கொலம்பஸ்

   அமெரிக்காவிலிருந்து திரும்பி  வந்த  பின்புகொலம்பஸ் கலந்துகொண்ட  விருந்தொன்றில்,  புதிய கண்டத்தைக் கண்டுபிடித்தது பற்றிய  பேச்செழுந்தது
 
     "அது ஒன்றும்  பெரிய சாதனை அல்லகப்பலில்  போய்க்கொண்டே   இருந்தால்  போதும்கண்டம்  எதிரில்  தெரிந்துவிடும்மேற்குத்   திக்கில்   போகும்  எண்ணம்  தோன்றி  இருக்க  வேண்டும்அவ்வளவுதான்!"

    இவ்வாறு  யாவரும்   கருத்து  தெரிவித்தனர்;   கொலம்பசை  மட்டம்  தட்டும்  பொறாமைவிருப்பம்  தெளிவாய்   வெளிப்பட்டது.

     "அப்படியா?"  என்று  வினவிய  கொலம்பஸ்ஓட்டுடன்  கூடிய  முட்டை யொன்றைக்  கொண்டுவரச்  செய்துஅதைக்  காட்டி,   "இதைஅதன்    ஒரு   முனையில்,   எந்த  ஆதாரமும்  இல்லாமல்,   நிற்க   வைக்க வேண்டும்;   உங்களுள்  யாராலாவது  முடியுமா?"  என்று  கேட்டார்.

     எல்லாரும்  முயன்று  பார்த்துத்  தோல்வியை  ஒப்பினர்.

       கொலம்பஸ்,   முட்டையின்  குறுகிய முனையைத்  தமது  பீங்கான்  தட்டின்மேல்  லேசாய்த்  தட்டினார்:    ஒரு  சிறு  குழி   உண்டாயிற்று;   நிற்க  வைத்தார்;   ஜம்மென்று  நின்றது!

     கொலம்பஸ்  புன்முறுவலுடன்   கூறினார்:  "இது  ஒன்றும்  கஷ்டம்  அல்லஆனால்  அந்த  எண்ணம்   தோன்றியிருக்க   வேண்டுமே!"


                                  ++++++++++++++++++++++

Monday, 5 October 2015

புதுமை படைக்கும் புதுகைக்கு புதுவையிலிருந்து...


பற்பல போட்டிகளுடனும் புதுமைகளுடனும் 
 நான்காம் ஆண்டு பதிவர் சந்திப்புத் திருவிழாவை 
சிறப்புற நடத்த உள்ள  
புதுகை விழாக்குழுவினருக்கு வாழ்த்து.

விழாவுக்கான அழைப்பிதழ் கீழே... 
உலகறிந்த தமிழ் எழுத்தாளர்இன்றும் சலிக்காமல் லட்சக்கணக்கான வாசகர் திரளோடு அடிக்கடி வலைப்பக்கத்திலும் எழுதி வருகிற எழுத்தாளர் எஸ்.ராஅவர்கள் வருகிறார்கள்!

உலகம் முழுவதும் தேடுபொறியில் கோடிக்கணக்கானோர் தினமும் தேடும் கட்டற்ற தகவல் களஞ்சியமான “விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர் திருமிகு .இரவிசங்கர் அவர்கள் வருகிறார்கள்...(இவர்களின் சொந்த ஊர் புதுக்கோட்டை என்பதும் குறிப்பிடத் தக்கது)

புதுக்கோட்டையில் பயின்றுபலகாலம் பணியாற்றிதற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குப் பெருமை சேர்த்து வரும் முனைவர் சொ.சுப்பையா அவர்கள் வருகிறார்கள்...

முதன்முறையாகதமிழ்ப் பதிவர்களோடு இணைந்துரூ.50,000 ரொக்கப் பரிசும் அறிவித்து மகிழ்வித்திருக்கும் தமிழ்இணையக் கல்விக கழகத்தின் இணைஇயக்குநர் முனைவர் மா.தமிழ்ப்பரிதி அவர்கள் வருகிறார்கள்...

எங்களையெல்லாம் “வலையில் வீழ்த்திதமிழ் இணையப் பயிற்சிக்கும் தூண்டிகல்வி-இலக்கியம்-தொழில்நுட்பம்-தலைமைப் பண்பு-மனிதப்பண்பு எனப் பலப்பல துறைகளில் எங்களுக்குத் தன் செயல்களால் பயிற்சி தந்தவர்தற்போது கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணிமாறுதல் பெற்றுச் சென்றாலும்இதயத்தால் எங்களுடனே எப்போதும் இருக்கும் எங்களய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் வருகிறார்கள்...

இவர்களொடு... தொடர்பு நமக்குக் கிடைக்கக் காரணமான இளைஞர்கணினித்துறையில் ஆற்றலும் அனுபவமும் தொடர்ஆர்வமும் கொண்ட நம் நண்பர் நீச்சல்காரன் அவர்கள் வருகிறார்கள்..

காலை 8.30 மணிக்கு – கவிதை-ஓவியக் காட்சி திறப்புடன் தொடங்கிமாலையில் இன்ப அதிர்ச்சியாக வரப்போகும் சில முக்கியமான நண்பர்களின் வரவு வரை தொடர் நிகழ்ச்சிகள்...5மணிக்கு விழா நிறைவடையும்.

பதிவர் அறிமுகம்- தமிழிசைப்பாடல்கள்- புத்தக வெளியீடுகள்- பதிவர் நூல் காட்சி மற்றும் விற்பனை- சிறப்புரைகள்- போட்டிகளில் வெற்றி பெற்ற பதிவர்களுக்கு ரொக்கப்பரிசும் சான்றுகளும் வழங்கல்- தமிழ் வலைப்பதிவர் கையேடு வெளியீடு-என நிகழ்ச்சிகள் 5மணிவரை தொய்வின்றித் தொடரும்..!

இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும்வெளிமாநிலங்களிலிருந்தும் சுமார் 350பேர் வருவார்கள் என்னும் எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றனஒவ்வொரு நிகழ்வு-பணிகளுக்கும் ஒரு குழுவென 20குழுவைச் சேர்ந்த சுமார் 50பேர் இதற்கெனக் கடந்த ஒருமாதமாக உழைத்து வருகிறார்கள்..

தாங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழ்வலைப்பதிவர் பயனுறவும் அதன்வழியே கணினித் தமிழ் வளரவும்முகம்தெரியாத முகநூலில் சிக்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர் வலைப்பக்கம் திரும்பவும் உதவ வேண்டும்!

வாசலில் நின்று வரவேற்கக் காத்திருக்கிறோம்.. வருக!
இணையத் தமிழால் இணைவோம்... வருக! வருக!!
தங்கள் வருகை எங்கள் உவகை!... வருக! வருக!! வருக!!! 
விழாக்குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்....!
அன்பில் மகிழ்ந்துஆதரவால் நெகிழ்ந்து-
கூப்பிய கைகளுடன் தங்ளுக்காகக் காத்திருக்கிறோம்!

இவண்
நா.முத்துநிலவன்,
(ஒருங்கிணைப்பாளர்)

தங்கம்மூர்த்திஇரா.ஜெயலட்சுமிமு.கீதா.கஸ்தூரிரெங்கன்
பொன்.கருப்பையாகு..திருப்பதி.குருநாதசுந்தரம்வைகறை
மீரா.செல்வக் குமார்ராசி.பன்னீர்செல்வன்பா.ஸ்ரீமலையப்பன்
மகா.சுந்தர்ஆர்.நீலா.பாண்டியன்மைதிலிகா.மாலதி.ரேவதி
ஸ்டாலின் சரவணன்சு.மதியழகன்சு.இளங்கோஎஸ..கருப்பையா
தூயன்யு.கே.கார்த்திநாக.பாலாஜிசு.துரைக்குமரன்நண்பா.கார்த்திக்,
சோலச்சிசுரேஷ்மான்யாசிவா.மேகலைவன் 
விழாக்குழு உறுப்பினர்கள் 
கணினித் தமிழ்ச்சங்கம்புதுக்கோட்டை

செல்பேசி – 94431 93293
--------------------------------------------------

இவர்களுடன்  இணைந்து 
திண்டுக்கல் பொன்தனபாலன் அவர்கள்
விழாவுக்கு ஆற்றியிருக்கும்
தொழில்நுட்ப உதவி சொல்லில் அடங்காது.

வலைப்பக்கத்தை 
மெருகூட்டித் தந்த 
சென்னைப் பதிவர் 
திருமிகு மதுமதி அவர்கள்
விழாக்குழுவின் நன்றிக்குரியவர்
இவர்களோடு 
நமது மதிப்பிற்குரிய சிலரையும்
அனைத்துப் பதிவர்களுமாய்ச் சேர்ந்து
நமது விழாவில்
கௌரவிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

--------------------

விழாவுக்கான வலைப்பக்கம் –  http://bloggersmeet2015.blogspot.com
விழாத் தொடர்பான மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com