Thursday, 30 April 2015

தமிழ் நெடுங்கணக்கு (Alphabet)

   
    முதல்  ன்  வரையுள்ள   எழுத்துகள்  கொண்ட   நெடுங்கணக்கை   நாம்  பயன்படுத்துகிறோம்; இதைத்  தமிழர்   உருவாக்கவில்லை. அதனால்தான்  ற் ன்  என்ற  இரண்டு  எழுத்துகளும்  இறுதியில்  தள்ளப்பட்டன.    வரிசை  எப்படி  இருந்திருக்க  வேண்டும்?

    க் ங் , ச் ஞ் , ட் ண் ,  த் ந் , ப் ம் , ற் ன் .  ( கசடதபற );  ய் ர் ல் வ்,ழ்,ள் ( யரலவழள ). இப்படி.

அசோகரின்  கல்வெட்டுக்கள்   பிராமி   என்னும்  எழுத்தில்   செதுக்கப்பட்டுள்ளன;  
பிராமியில்    ற் ன்  இல்லை.   

  அந்த  பிராமி  தமிழகத்துக்கு  வந்தபோதுநம்  மொழிக்குத்  தேவைப்பட்ட   சில 
வேறுபாடுகளை   அதில்   செய்து   உருவாக்கியது  தமிழ்  பிராமி  எனப்பட்டது . காலத்தால்  
முற்பட்ட   தமிழ்க்   கல்வெட்டுகள்  (கி. மு. 2 ஆம்  நூற்றாண்டுதமிழ்  பிராமியில்   உள்ளன.

     அந்த   எழுத்துகாலப்  போக்கில்  உருமாறி,   வட்டெழுத்து   எனப்  பெயர் பெற்றது.  
அதிலிருந்து  தோன்றியது  இன்றைய  நெடுங்கணக்கு.   இது  தொல்காப்பியருக்கு   முன்பே    
புழக்கத்தில்  இருந்தமை

                         'அகர   முதல்  னகர  இறுவாய்'
                               (  முதல் ன் இறுதி)

என்னும்   நூற்பாவால்  தெரிகிறது.

     அசோகரின்   பிராமியில்      என்ற  ஒலிகள்  குற்றொலிகள்  அல்லஅவை     என   
நீட்டி  உச்சரிக்கப்பட்டனதமிழுக்குக்   குற்றொலிகள்  வேண்டுமேமேலே  புள்ளி  
வைத்து   சமாளித்தார்கள்.
       அதாவது:        ----  உச்சரிப்பு     ;





--- உச்சரிப்பு     .
       இதைத்   தொல்காப்பியம்  தெரிவிக்கிறது:

                மெய்யின்  இயற்கை  புள்ளியொடு  நிலையல் ;
                எகர  ஒகரத்து   இயற்கையும்  அற்றே.

     பொருள்:  மெய்  எழுத்தின்மேல்  புள்ளி  இட  வேண்டும்;     வுக்கும் அப்படியே.
      13  ஆம்  நூற்றாண்டில்  இயற்றப்பட்ட    நன்னூலும்  அதை வழிமொழிகிறது:

               தொல்லை   வடிவின   எல்லா   எழுத்தும் ஆண்டு
               எய்தும்    எகர  ஒகர   மெய்  புள்ளி.

     பொருள் :         ஆகியவற்றுக்கும்    மெய்யெழுத்துகளுக்கும்  புள்ளி  வைக்கவேண்டும்.

     உயிர்மெய்  எழுத்துகளுக்கும்  இது  பொருந்தும்:
          பெபொ  ------    உச்சரிப்பு --  பே , போ






உச்சரிப்பு  -- பெபொ.
     2000  ஆண்டாகத்   தமிழர்  அப்படித்தான்  எழுதிவந்தனர் .
    18 ஆம்  நூற்றாண்டில்இத்தாலியிலிருந்து  தமிழகம்  வந்து  தமிழ்  பயின்ற   வீரமாமுனிவர்,    
ஒழுங்குபடுத்தினார் ;  அதன்படி,

                 எ , ஒ -----  ----  ------  உச்சரிப்பு:  எ ,  ஒ .  (குற்றொலிகள்);
                 ஏ ,   ஓ ------   --- ---     உச்சரிப்பு: ஏ , ஓ .  (நெடில்கள் ) .
                  பெ , பொ  ---  --- --                       பெ , பொ    (குறில் )  ;
                  பே  , போ   ---    ---                        பே ,   போ .   (நெடில்)

      குறிலுக்கான   புள்ளி  ஒழிக்கப்பட்டு   ஓரளவு  சீர்மை  ஏற்பட்டது.

      20  ஆம்    நூற்றாண்டில்     பெரியார்  ஈ , வே.  ராமசாமி  அதுவரை    புழக்கத்தில்  இருந்த   சில  ஒழுங்கற்ற  வடிவங்களையும்  திருத்தினார்.   அவை:











அவற்றை  முறையே    றா,  னா , ணா,,  லை, ளை,  னை,  ணை    எனச்  சீரமைத்துத்   தமது  இயக்க
ஏடுகளில்   எழுதிப்   பரப்பினார்.   திராவிடர்  கழகத்தினர்   அனைவரும்    அவரைப்  பின்பற்றினர் .  
அதைச்  சட்டப்படி  அமல்படுத்தத்   தமிழர்  எவரும்   அக்கறை   செலுத்தவில்லை.  
எம். ஜி.  ஆர்.   தான்   அந்தப்   பெருமைக்கு   உரியவரானார். அவரால்  குறைந்தன  தமிழ்  கற்போரின்  சிரமங்கள்.

    ஓர்   இத்தாலியர்,  ஒரு  கன்னடியர்,  ஒரு  மலையாளி  எனத்  தமிழைத்  தாய்மொழியாய்க்   கொள்ளாதவர்களே  நம்  நெடுங்கணக்கை  ஒழுங்குபடுத்தினர் !
                                      
                                            ++++++++++++++++++++++++++++++++++

16 comments:

  1. தமிழ் எழுத்துக்கள் பற்றிய வரலாற்றுத்தகவல்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன. பாராட்டுகள்.

    // ஓர் இத்தாலியர், ஒரு கன்னடியர், ஒரு மலையாளி எனத் தமிழைத் தாய்மொழியாய்க் கொள்ளாதவர்களே நம் நெடுங்கணக்கை ஒழுங்குபடுத்தினர் !//

    மிகச்சிறப்பான முத்தாய்ப்பான முத்தான தகவல்கள், ஐயா. :) பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .

      Delete
  3. ///ஓர் இத்தாலியர், ஒரு கன்னடியர், ஒரு மலையாளி எனத் தமிழைத் தாய்மொழியாய்க் கொள்ளாதவர்களே நம் நெடுங்கணக்கை ஒழுங்குபடுத்தினர் !///
    வேதனையாக இருக்கிறது ஐயா
    எத்தனை எத்தனை தமிழிறிஞர்கள் இருந்தும்.....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துரைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி . பெரும்பாலான தமிழறிஞர்கள் மரபை ( வழக்கத்தை ) மீறத் தயங்குவார்கள் . தப்பித் தவறி யாராவது புதுமை செய்தால் அல்லது சொன்னால் அவரைத் தமிழ்த் துரோகி என்று தூற்ற ஒரு கூட்டம் காத்திருக்கும் ..

      Delete
  4. நெடுங்கணக்கைத் தமிழர் உருவாக்கவில்லை என்பது வியப்பான புதிய செய்தி. பழங்காலத்தில் குறிலுக்குப் புள்ளி வைத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் தான் அறிந்தேன். பெரியார் செய்த சீர்திருத்தம் பற்றி நானறிவேன். ஏனெனில் அவர் சீர்திருத்தம் வருவதற்கு முன் பழைய முறையில் எழுதிப்படித்தவள் நான். வீரமாமுனிவர் செய்த திருத்தம் பற்றியும் எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு தெளிவாக நினைவில்லை. தொல்காப்பியமும் நன்னூலும் புள்ளி வைத்து எழுத இலக்கணம் சொல்கின்றன. ஓலைச்சுவடிகளில் புள்ளி வைத்தால் ஓட்டை விழுந்து சுவடி வீணாகிவிடும் என்பதற்காக புள்ளியில்லாமல் எழுதுவார்கள். கல்வெட்டிலும் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக புள்ளி வைக்க மாட்டார்களாம். அச்சுத்துறையும் அப்போது இல்லை. அப்படியானால் எதில் எழுதுவதற்காக புள்ளி வைத்து எழுத இலக்கணம் சொல்லப்பட்டிருக்கின்றது என்பதை அறிய ஆவல். இது ஊமைக்கனவுகள் சகோதரர் எழுப்பிய சந்தேகம். உங்களிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கேட்டிருக்கிறேன். இது போன்ற பயனுள்ள பதிவுகளைத் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓலைச் சுவடிகளில் எழுத்தின்மீது சிறு வட்டம் இட்டார்கள் ; அதுவே புள்ளி . தாளில் எழுதுவோரில் சிலர், அவ்வாறு இடுவதுண்டு . அச்சில் புள்ளி எனச் சுட்டுவது வேறு . கல்வெட்டுகளில் புள்ளி இராது என்பது சரி .
      புள்ளி கொண்ட எழுத்துகளை ( மெய் , உயிர் ) மட்டும் பயன்படுத்தி எழுதும் செய்யுள் பிந்துமதி . வடசொல் பிந்துக்குப் பொருள் , புள்ளி .
      " நெய்கொண்டென் செம்பொன்கொண்டென்" என்று வரலாம் .எல்லா எழுத்துக்கும் புள்ளி உண்டு . கொண்டென் என்றாலும் கொண்டேன் என்றாலும் ஒன்றே . தன்மை ஒருமை விகுதிகள் : அல் , ஆன் , என் , ஏன் .

      Delete
    2. ஓலைச்சுவடிகளில் புள்ளிக்குப் பதில் சிறு வட்டமிட்டார்கள் என்று சந்தேகத்தைத் தீர்த்து வைத்தமைக்கு மிகவும் நன்றி. கூடுதலாக பிந்து மதி பற்றியும் தெரிந்து கொண்டேன். புதிய செய்தி.

      Delete
  5. அருமையான விளக்கம் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டியமைக்கு மிக்க நன்றி .

      Delete
  6. தமிழ் பிராமிக்கு முன்னால் தமிழில் எழுத்துக்கள் குறித்த தகவல்கள் ஏதாவதூண்டா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அக்கறைக்கு மிகுந்த நன்றி . பிராமியிலிருந்துதான் தமிழ் எழுத்துகள் உருவாக்கப்பட்டன என்றே அறிஞர்கள் சொல்கிறார்கள் . அதற்கு முந்தைய நிலைமை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது .

      Delete
  7. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய பல அறியாத தகவல்களை அறிந்துகொண்டேன். ற் ன் கடைசியில் இருப்பது பற்றி பலமுறை யோசித்திருக்கிறேன். காரணம் இப்போது புரிந்தது. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. என் ஆக்கம் பயனுள்ளதாய் இருந்ததை யறிந்துகொண்டேன் . பின்னூட்ட்த்திற்கு மீக்க நன்றி .

      Delete