Tuesday 7 August 2012

சீனக் குட்டிக் கதை

( கன்பூசியஸ் என்ற ஆங்கில நூலிலிருந்து )


மூன்று தையற்காரர்கள் ஒரே தெருவில் கடை திறந்தனர். தாமே அதிக வாடிக்கையாளர்களைக் கவரவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்பினர்.

ஒருவர் பெரியதொரு விளம்பரப் பலகை நாட்டினார். "இந்த மானிலத்திலேயே சிறந்த தையற்கலைஞன் நானே" என்று அதில் எழுதியிருந்தது.

இதை வாசித்த இரண்டாமவர், இதற்கு மேலே போகவேண்டும் என எண்ணி,  இன்னம் பெரிய பலகை மூலம், "இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த தையற்கலைஞன் நான்தான்" எனத் தெரிவித்தார்.

மூன்றாமவர் பார்த்தார்; இந்த உலகிலேயே சிறந்தவன் என்று விளம்பரப்படுத்தலாமா எனச் சில நாள் யோசித்தபின் ஒரு சிறு பலகை மாட்டினார். அது அனைவரையும் கவர்ந்திழுத்தது மற்ற கடைகளைக் காலியாக்கி.

என்னதான் அறிவித்தது அது?

"நானே சிறந்த தையற்காரன், இந்தத் தெருவில்."

6 comments:

  1. கருத்துள்ள கதை
    பதிவாக்கி அறியச் செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. சிறுகதை ஆனாலும் கருத்துள்ள கதை... அருமை ஐயா..
    நன்றி... (T.M.2)

    ReplyDelete
  3. மூன்றாவது தையற்காரனின் சமயோசிதமும் வியாபார தந்திரமும் வியக்கவைத்தன. மொழிபெயர்த்துப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. குடியேற்றம் சீனி.சம்பத்.23 April 2014 at 10:26

    அறிவின் ஆற்றலை விளக்கும் நல்ல கதை.

    ReplyDelete