Monday 10 September 2012

உருவப் பொம்மை எரிப்பு


 

தமிழகத்து ஆர்ப்பாட்டங்கள் சிலவற்றில் உருவப் பொம்மை எரிப்பது உண்டு. அப்படி எரிப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பது எரிப்பவர்களுக்குத் தெரியுமா? ஐயம்தான்.
 
தாம் வெறுக்கிற ஒருவரை நேரடியாகத் துன்புறுத்துவதற்கு அஞ்சுகிற அல்லது  இயலாதவர்களுள் சிலர், அரை நூற்றாண்டுக்குமுன், மந்திரவாதியை அணுகினர்.
 
பணமும்  தகவலும் பெற்றுக்கொண்ட மந்திரவாதி ஒரு துணிப் பொம்மை செய்து தெய்வத்தின்முன்  வைத்து, மந்திரம் ஓதி, பூஜை செய்வார்.
 
பின்பு பொம்மையின்மீது சில இடங்களில் ஊசியால் குத்துவார். இது செய்வினை எனப்பட்டது. இதன் பயனாய்ப் பகைவர்  நோய்வாய்ப்பட்டுச் சங்கடப்படுவார் என்பது நம்பிக்கை.
 

பொம்மையை எரித்தால் அவர் இறந்தேவிடுவாராம். இப்போது மந்திரம் இல்லை ஆனால் செயல் நிகழ்கிறது, காரணம் தெரியாமலே.
 
(படம் உதவி ; இணையம்)

5 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. கொடும்பாவி எரித்தல் என்பதும் இதுதானோ? கொடியவன் உருவை எரிப்பதால் கொடும்பாவி எனப்பட்டதோ?

    ReplyDelete
  2. உருவ பொம்மை எரித்தல் என்பது சூன்ய மந்திரங்களின் வளர்ச்சியா ? இதுப் பற்றி நான் யோசிக்கவே இல்லை .. பல நாடுகளில் கொடிகளை எல்லாம் கொழுத்துகின்றார்கள்.. யாகங்களில் வளர்ச்சியோ !!!

    ம்ம்ம். இந்தக் கோணத்தில் நான் சிந்தித்தே இல்லை .. !!!

    ReplyDelete
  3. நம்பும் கூட்டம் இருக்கிறதே...

    இவையெல்லாம் எப்போது மாறுமோ....?

    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete