" ஆத்திசூடிக்கு ஏன் அந்தப்
பெயர்?"
"தெரியவில்லை"
"அது அவ்வாறு
தொடங்குவதால்"
"அறஞ்செய விரும்பு என்பதல்லவா தொடக்கம்?"
"அல்ல;
முதல் பாடல்:
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே
அப்படித்தான் கொன்றை வேந்தனுக்கும்
பெயர் வந்தது; அதன் தொடக்கம்:
கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
ஒளவையாரின் மூதுரையை 'வாக்குண்டாம்' என்றும் சொல்வதுண்டு.
முதல் செய்யுள் அப்படித் தொடங்குவதால் அந்தப் பெயர்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
- பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
உலகநீதி படித்திருக்கிறீர்களா? உலகநாதர் என்பவர் இயற்றிய அந்த அறநூல்,
உலக நீதிப் புராணத்தை உரைக்கவே
கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு
எனத் தொடங்குகிறது.
வெற்றிவேற்கை தெரியுமா? பிற்காலப் பாண்டியன் அதிவீர ராமன் படைத்த அதில், அதனைக் கற்பதால் கிடைக்கும் பயனைக் கூறும்
பாட்டு:
வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை
தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலா தவரே.
இதன் இன்னொரு பெயர்: நறுந்தொகை. அதுவும்
அந்தச் செய்யுளில் இருக்கிறது.
இப்படிச் சில நூல்களுக்கு அவற்றின் தொடக்கச்
சொற்களே தலைப்பாய் அமைந்துள்ளன.
++++++++++++++++++++++++++++++++++
(படம்: நன்றி இணையம்)
அருமை... அருமை ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி...
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் எம் மனமார்ந்த நன்றி .
Deleteஆத்திசூடி பற்றி மட்டும் முன்பு எப்போதோ அறிந்திருக்கிறேன். மற்ற தலைப்புகள் பற்றி இப்போதுதான் அறிகிறேன். உரிய பாடல்களோடு அறியத் தந்த பகிர்வுக்கு மிகவும் நன்றி தங்களுக்கு.
ReplyDeleteவாசித்துக் கருத்துரைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றி .
Deleteநானும் ஆத்திசூடி பெயரின் காரணத்தைத் தெரிந்து வைத்திருந்தேன். மற்ற நூல்களுக்கும் தொடக்கச் சொற்களே தலைப்பாய் அமைந்த விஷயம் இப்போது தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி!
ReplyDelete