Monday 16 June 2014

துணுக்குக் கோவை


1 --  வான்கோழி --- இது அமெரிக்கப் பறவை;  16-ஆம் நூற்றாண்டில் அங்கே வளர்ப்புப் பறவை ஆயிற்று. அங்கிருந்து ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி  நிலைத்த பின்பு, இங்கு அறிமுகம் ஆனது. இது 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கலாம்.




எனவே, "கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி" என்று பாடிய  பிற்கால ஒளவையார் அப்போது வாழ்ந்தார் என முடிவு கட்டலாம்.

(மிளகாய், உருளைக் கிழங்கு முதலியவற்றையும் அமெரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு ஐரோப்பியர்தான் கொண்டு வந்தனர்)

2 -- பித்தலாட்டம் -- ஏமாற்று வேலை எனப் பொருள்படும்.

பித்தலாட்டம், இரு வடமொழிச்சொற்களின் கூட்டு: பித்தளா + ஆடகம்.

 பித்தளாவைத் தமிழில் பித்தளை என்கிறோம். இது செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகம். ஆடகம் என்பது தங்கம்;  இரண்டும் ஒரே நிறமாக இருப்பதால், இதுவா அதுவா என ஐயப்பட இடம் உண்டு. இதைப் பயன்படுத்தி, மோசடிப் பேர்வழிகள், பித்தளையை ஆடகம் என்று சொல்லி ஏமாற்றினால், அது பித்தலாட்டம்.

3 -- மடையன் - இச்சொல்லுக்கு உரிய பொருள்: சமையற்காரன். கோவிலில் பிரசாதம் சமைக்கும் இடத்தை மடைப்பள்ளி என்கிறோம் அல்லவா?

சொல்லின் பழைய வடிவம் மடவன். மடமை என்னும் வேரிலிருந்து கிளைத்தது; வேறு கிளை: மடத்தி, மடந்தை, மடத்தனம். மடமை என்றால் அறியாமை என்று பலரும் அறிவர்.

      குறுந்தொகை

பா. 66   
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
(கொன்றை மரங்கள் மடமை உடையன)

 பா. 251:  
மடவ வாழி மஞ்ஞை
(மயில் கூட்டங்கள் அறியாமை வாய்ந்தவை)

இதே அர்த்தம் கொண்ட முட்டாள் என்ற வார்த்தை முற்றாள் என்பதன் மரு.

முற்று + ஆள் = முழுதும் ஆள், அதாவது முழுவதும் உடம்பு. மூளை இல்லை என்பது குறிப்பாகச் சொல்லப்படுகிறது.

 4 --  "மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது" என்ற பழமொழியில் மூர்த்தி என்பதற்குச் சிலை என்று பொருள். (குறிப்பிட்ட கடவுளின்) சிலை சிறியது தான், எனினும் அதன் புகழ் பெரியது.

நாளடைவில், மூர்த்தியின் அர்த்தம் விரிவடைந்து, சாமியையே சுட்டுவதாய் மாறிற்று.

ராமமூர்த்தி - ராமன் ஆகிய கடவுள்.


    ++++++++++++++++++++++++++++++++++

14 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    அருமையான தகவல் அறிந்தேன் எல்லாவற்றுக்கும் சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. வணக்கம்

    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. 1 ஆவது வாக்குக்கு மிக்க நன்றி .

      Delete
  3. அறியாதன அறிந்தேன் நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துரைக்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  4. கற்க நிறையவே விஷயங்கள் இருக்கிறது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு என் உள்ளமாந்த நன்றி .

      Delete
  5. புதிய செய்திகளை அறிந்து கொண்ட மகிழ்ச்சி. தொடருங்கள் ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஊக்கமூட்டும் உங்களுக்கு என் அகமார்ந்த நன்றி .

      Delete
  6. பித்தலாட்டம் தமிழ்ச்சொல் என்றே இதுவரை எண்ணியிருந்தேன். முட்டாள் என்பது முற்றாள் என்பதின் மரு என்பதும் புதுச்செய்தி. நல்ல பயனுள்ள துணுக்குகள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  7. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

    ReplyDelete