1 -- சிலர்
கூறுவர், செய்தி என்று பொருளுடைய news
என்னும் ஆங்கிலச் சொல், north,
east, west, south ஆகியவற்றின் முதல் எழுத்துகளைக் கோத்து உருவாக்கப்பட்டது எனவும் நான்கு
திக்குகளிலிருந்தும் செய்திகள் வருவதால் அந்தச் சொல் மிகப் பொருத்தமானது எனவும்.
அது ஆதாரம் அற்ற கூற்று.
புதிய என அர்த்தம் தரும் niwe என்னும் ஆங்கிலோ சாக்சன் மொழியின் வார்த்தையிலிருந்து
உருவானது new என்று அகராதி தெரிவிக்கிறது;
இதன் இறுதியில் s
சேர்ந்து news ஆனது.
செய்தியைக் குறிக்கிற பிரஞ்சுச் சொல், "நுவேல்" (nouvelle); இதற்கும் புதிய என்பதே பொருள்.
2 -- சதுரங்க விளையாட்டைச் சுட்டும் ஆங்கிலச்
சொல் chess; இந்த வார்த்தை எப்படி உருவாக்கப்பட்டது என்று ஒரு வார இதழில் அண்மையில் படித்தேன்; அதில் எழுதப்பட்டிருந்தது:
"சதுரங்கக் காய்களின் பெயர்கள் carts, horses, elephants, soldiers; இவற்றின் முதலெழுத்துகளைச் சேர்த்து chess என்கிறோம்"
இது தவறான தகவல்.
1 - காய்களுள் முக்கியமானவை ராஜாவும் ராணியும்; ஆங்கிலத்தில் king, queen;
இவற்றின் முதல் எழுத்துக்களான k -ஐயும் q - ஐயும் விட்டுவிட்டுப் பெயர் வைப்பார்களா?
2 -
carts முதலான நான்கு சொற்களும் எந்தக் காலத்திலும் பயன்பட்டதில்லை. சரியான பெயர்கள், rooks,
knights, bishops, pawns ஆகியவைதான்; இவற்றின் எதன் முதலெழுத்தும் chess-
இல் இல்லை.
3 - அந்த விளையாட்டின் பழைய பிரஞ்சுப் பெயர் esches ; இதிலிருந்தே chess என்னும் சொல் தோன்றிற்று. (இப்போது பிரஞ்சில்
echecs என்கிறார்கள்).
=======================
பெயர்க்காரணம் நன்றாக உள்ளது தொடருங்கள் ஐயா.
ReplyDeleteபாராட்டிப் பின்னூட்டம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .
Deleteபிழையான தகவல்களைச் சான்றுகளுடன் சுட்டிக்காட்டி விளக்கியமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநன்றிக்கு என் அகமார்ந்த பதில் நன்றி .
Deleteஉதாரணங்களுடன் விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கும் நன்றிக்கும் என் உள்ளமார்ந்த நன்றி .
Deleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஉங்கள் நன்றிக்கு என் பதில் நன்றி .
Delete