( நான் இந்தியிலிருந்து மொழிபெயர்த்து
விரிவுபடுத்திய குட்டிக்கதை)
இளமையில் அரியணை ஏறிய மன்னனொருவன் இல்லறத்தில் ஈடுபட விரும்பித் தனக்குத் தகுதியான அரச குமாரியைத் தேட முற்பட்டபோது
, முதிய அமைச்சர் கூறினார்:
"வேண்டாம் அரசரே, திருமணத்துக்குப் பின்பு நீங்கள் சுதந்தரமாகச் செயல்படமுடியாது. அரசியின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியிருக்கும்.
--- எப்படிச் சொல்கிறீர்கள் அமைச்சரே, இவ்வளவு உறுதியாக?
--- அதுதானே வழக்கம்.
--- நான் நம்ப மாட்டேன்.
--- ஒரு சோதனை செய்து பாருங்கள்; உண்மை புலப்படும்.
--- அப்படியே ஆகட்டும்."
வேந்தன் ஆணையிட்டவாறு, நகரின் அரச மற்றும் பிரபு குடும்பத்தாருள் திருமணம் ஆனவர்கள் உரிய காலத்தில் அரண்மனையில் கூடினார்கள். ஏறக்குறைய ஐம்பது பேர்.
" நீங்கள் எல்லாரும் கலியாணம் செய்துகொண்டவர்கள் தானே?
--- ஆம், அரசே.
--- சரி, உங்களில், மனைவி சொல்லே மந்திரம் என நினைத்து, அவளுடைய பேச்சைக் கேட்டு நடப்பவர்கள் அனைவரும் என் வலப்பக்கத்தில் வந்து நில்லுங்கள்; சொந்தமாகச் சிந்தித்து செயல்படுபவர்கள் எல்லாம், இடப்
பக்கம் நில்லுங்கள்
. என்னை ஏமாற்ற முயல்பவர் கடுந் தண்டனைக்கு ஆளாவார்."
மளமள என்று வலப்பக்கம் போய் நிற்கத் தொடங்கினார்கள்; ஒருவன் மட்டும், சிறிது நேரம் தயங்கிவிட்டு, இடப்புறம் நின்றான். அரசனுக்கு வருத்தம்: ஆடவர் சொந்த புத்தி இல்லாமல் வாழ்கிறார்களே! கொஞ்சம் ஆறுதல்: ஒருவனாவது
சுதந்தரமாக இயங்குகிறானே!
அவனிடம் சொன்னான்:
"உன்னைப் பாராட்டுகிறேன்; நீ எதையும் உன் அறிவுப்படி யோசித்துத் தானே செய்கிறாய்?
--- இல்லை மன்னா.
--- அப்படியானால்?
--- என் மனைவி
சொல்தான் என் வழிகாட்டி.
--- பின் ஏன் அவர்களோடு சேரவில்லை?
--- கூட்டத்தில் நிற்கக் கூடாது என்று அவள் சொல்லியிருக்கிறாள்."
=======================
(படம்: நன்றி இணையம்)
(படம்: நன்றி இணையம்)
வணக்கம்
ReplyDeleteஐயா.
சிறப்பான கதை மூலம் குடும்பத் தலைவியின் சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டிப் பின்னூட்டம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .
Deleteஏற்கனவே கேட்ட கதைதான் என்றாலும் உங்கள் மொழியில் சிறப்பு பெறுகிறது.
ReplyDeleteதெரிந்த கதைதானே என்று அலட்சியப்படுத்தாமல் வாசித்துப் பின்னூட்டம் அளித்த உங்களுக்கு என் அகமார்ந்த நன்றி .
Deleteநானும் அந்த தனித்து நிற்பவன் போல் தான் சார், ஆனால் என்ன ஒண்ணு என் மனைவியும் என்னை கூட்டத்தோடு நிற்காதே என்று சொல்லியிருக்க வேண்டும் :(
ReplyDeleteமனைவி சொல்லுவதற்கு இடம் வைக்காமல் நடந்துகொள்கிற நீங்கள் பாராட்டுக்கு உரியவர்தான் .உங்கள் பின்னூட்டத்துக்கு எனது உள்ளம் நிறை நன்றி .
ReplyDeleteஅருமையாக மொழியாக்கம்+ விரிவாக்கம் செய்து என்னைச் சிரிக்க வைத்தமைக்கு நன்றி!
ReplyDelete