Wednesday 22 October 2014

பிழையும் திருத்தமும் - 2

பிழையும் திருத்தமும் - 2

இது வேறு பட்டியல்


 பிழை 

திருத்தம் 
 1. அருகாமையில்

 அருகில்
 2. இளைய சகோதரன்
 தம்பி

 3. எட்டிப் போ
 எட்டப் போ  (எட்டும்எட்டாதுஎட்டாக்  கனி)
 4. ஏமாந்தார்
 ஏமாறினார்

 5. ஒருக்கால்
 ஒருகால்

 6. சிகப்பு
 சிவப்பு (செக்கச்  சிவந்த  கழுநீரும்  -  கலிங்கத்துப்  பரணி)
 7. சில்லரை                           
  சில்லறை

 8. சுடு தண்ணீர்                        
 வெந்நீர்

 9. செல்வந்தர்                          
  செல்வர்

 10. திகட்டுதல்                           
 தெவிட்டுதல்

 11. துடை ( உடலுறுப்பு )                 
தொடை 

 12. தொத்து  நோய்                      
 தொற்று  நோய்

 13. நீர்வீழ்ச்சி                           
அருவி

 14. பனிரெண்டு                          
 பன்னிரண்டு

 15. (பரிசை)  வெல்லுங்கள்             
 (பரிசைப்பெறுங்கள்

 16. மனசு , மனது                       
  மனம்  (மனமார,  மனத்தில்)

 17. மாற்றாந்தாய்                         
 மாற்றான்  தாய்

 18. முயற்சிப்போம்                       
முயல்வோம்

 19. மூத்த  சகோதரர்                     
 அண்ணன் ,  தமையனார்

 20. மென்மேலும்                         
 மேன்மேலும்


இரு  விதமாக  எழுதப்படுபவை:

            1. உலாவுதல்  
உலவுதல் 
                           2.  கருப்பு 
கறுப்பு
                           3. கூடு 
கூண்டு
                           4. சலங்கை 
சதங்கை
                           5. சறுக்கல்  
சருக்கல் 
                           6. துளை
தொளை
                           7. பொருத்தவரை 
பொறுத்தவரை
                           8. மங்களம் 
மங்கலம்
                           9. மெல்ல
மெள்ள
                         10. வேர்வை 
வியர்வை


6 comments:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
  2. மிக்க நன்றி . நானும் என் மனமார்ந்த வாழ்த்தினை உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் சுற்றத்தார்க்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  3. ஏமாந்தார் என்பதை ஏமாறினார் என்று தான் எழுத வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். அது போல மாற்றான் தாய் என்பதைச் சேர்த்து மாற்றாந்தாய் என்று எழுதுவது சரியென்றே நினைத்திருந்தேன். தகவலுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி மாற்றான் தாய் என்பதைச் சேர்த்தெழுதினால் மாற்றான்றாய் என்றாகும் .

      Delete
  4. பொதுவாக நாம் புழங்கும் வார்த்தைகளில் எவ்வளவு பிழையான சொற்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுடைய இப்பதிவின் மூலம் விளங்குகிறது. இருவிதமாக எழுதமுடிகிற வார்த்தைகள் பற்றியும் அறிந்து தெளிந்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஆமாம் ,, நிறையப் பிழைகளுடன் தான் பற்பலரும் தமிழை எழுதுகிறார்கள் . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

    ReplyDelete