Tuesday, 26 May 2015

வெள்ளையரின் நெடுங்கணக்கு


     

  ஆங்கில  எழுத்து  என  நாம்  குறிப்பிடும்  26  எழுத்துக்கும்  ஆதிமூலம்  பினீசியரின் (Phoenicians)  நெடுங்கணக்கு.   இவர்கள்  நடுநிலக்  கடலின்  மேலைக்  கரையில்இப்போதைய  லெபனான்  நாட்டின்  மேற்குப்  பகுதியில்,   சுமார்  2500  ஆண்டுக்கு முன்பு    தலைசிறந்த  நாகரிகத்துடன்  வாழ்ந்தவர்கள் ;   விவிலியம்  இவர்களைக்    கானானியர்  என்கிறதுஇவர்கள்தான்  தனித்தனி  எழுத்துகளால்   ஆன  (மொத்தம்  22  எழுத்துநெடுங்கணக்கை  உருவாக்கிய  உலக  முதல்வர்கள்

    இதைத்    தெரிந்துகொண்ட  கிரேக்கர்,   தமது  மொழியின்  தேவைக்கேற்பகொஞ்சம்  சீர்படுத்தியும்  நான்கு   எழுத்தைக்  கூட்டியும்  உபயோகித்தனர்பினீசிய  நெடுங்கணக்கின்   முதலிரண்டு  எழுத்துகளுக்குப்  பெயர்   அல்ஃபா,    பேத்  (alpha,  beth).  இந்தப்  பெயர்களைக்  கிரேக்கர்  அப்படியே  தங்களது  மொழியின்  முதலிரு  எழுத்துகளுக்கும்  சூட்டினர்:   அல்ஃபாபீட்டா  (alpha, beta ).   இவை இரண்டும்   சேர்ந்ததால்   அல்ஃபாபெட் (alphabet)  என்னும்  சொல்  பிறந்தது.

     கிரேக்கரிடமிருந்து,     இத்தாலியில்  வாழ்ந்த  எத்ருஸ்கர்  (Etruscans)  என்ற  மக்களும்     இவர்களிடமிருந்து,   ரோமானியரும்    நெடுங்கணக்கைக்  கற்று,    தத்தம்  மொழிகளுக்கு  உபயோகித்தார்கள்தென்  ஐரோப்பா முழுதும்   ஒரு  காலத்தில்  ரோமானியரின்  கையில்  இருந்ததால்  அவர்களின்  மொழியாகிய  லத்தீன்   (26 எழுத்துஅக்  கண்டத்தில்  பரவியதுரோமன்  எழுத்து (Roman   Script)  எனப்  பெயரிடப்பட்ட  அதை   ஒவ்வொரு  நாட்டாரும்  கூட்டியோ குறைத்தோ  மாற்றியோ  பயன்படுத்தினர்.

      காட்டாக, பிரஞ்சில்  39  எழுத்துகள்   உண்டு:  a e i o u  ஆகியவற்றின்மீது  இரட்டைப் புள்ளி  வைத்தோசாய்வுக்   கோடு  இழுத்தோ,   தொப்பி  போட்டோ   புது  எழுத்துகளை  உருவாக்கியுள்ளனர்;  o  வும்  e  யும்  ஒட்டிக்கொண்ட   ஓரெழுத்தும்   வால்  முளைத்த   c  யும்  உண்டு.

     இப்போது வெள்ளைக்காரர்கள்  வாழும்  எல்லா  நாடுகளும்  மட்டும்  அல்லாமல்   துருக்கிவியட்நாம்  முதலான   வேறு   சில   நாடுகளும்          ரோமனெழுத்தைக்  கைக்கொண்டுள்ளன.  

   உலகத்தில்  பெரும்பாலான  பகுதிகளில்  அமுலில்  இருக்கும்   நெடுங்கணக்கு  ஆசியாக்காரரால்   உருவாக்கப்பட்டது    என்பதை  எண்ணி    நாம்  பெருமை  பாராட்டலாம்.

        -------------------------------------

     

13 comments:

  1. ஆங்கில எழுத்துகள் பற்றிய மிகவும் அருமையான பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

    //உலகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அமுலில் இருக்கும் நெடுங்கணக்கு ஆசியாக்காரரால் உருவாக்கப்பட்டது என்பதை எண்ணி நாம் பெருமை பாராட்டலாம்.//

    இதை எங்களுக்கு இன்று உணர்த்திய பெருமை தங்களுக்கும் உண்டு. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுடன் கருத்து தெரிவித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. அறிந்திராத தகவலை அறிந்தேன் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . தகவல் உங்களுக்குப் பயன்பட்டதறிந்து மகிழ்கிறேன் .

      Delete
  3. மொழிகளின் மூத்த மொழி தமிழ் எல்லாம் அதிலிருந்துதான் என்பதெல்லாம் சும்மாவா..?

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மிக மூத்த மொழிகளுள் ஒன்று என்பதை எண்ணி நாம் பெருமைப்படலாம் ; ஆனால் உலக மொழிகளெல்லாம் ஒரு மொழியிலிருந்து பிறந்தன என்பதை ஆராய்ச்சியாளர் ஒப்பவில்லை . உலக மொழிகளைப் பற்பல பிரிவுகளாய் அவர்கள் பிரிக்கிறார்கள் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  4. வணக்கம்
    ஐயா.
    ஒவ்வொரு தகவலும் புதுமை...படிக்க தந்தமைக்கு நன்றி ஐயா.த.ம2
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்துரைமைக்கும் த ம வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

      Delete
  5. தனி தனி எழுத்துக்களைக் கொண்ட நெடுங்கணக்கை முதலில் உருவாக்கிய பினீசியர்கள் பற்றித் தெரிந்து கொண்டேன். Alphabet ன் வரலாறு தெரிந்து கொண்டேன். முற்றிலும் புதிய தகவல்கள். மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுடன் பின்னூட்டம் தந்தமைக்கு அகமார்ந்த நன்றி .

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Alphabet உருவாக்கியவர்கள் கிரேக்கர்கள்தாம் என்று இதுவரை நினைத்திருந்தேன். அவர்களுக்கும் முன்னோடிகள் பினீசியர்கள் என்ற தகவல் இப்போதுதான் அறிகிறேன். புதியதொரு தகவல் பகிர்வுக்கு மிகுந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பல செய்திகள் நாம் அறிந்திருப்பதற்கு மாறாக இருப்பதுண்டு .

      Delete