2008-இல் நான்,
பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில், "மினி யூரப்" என்னும் காட்சிச்
சாலையைப் போய்ப் பார்த்தேன்; கட்டணஞ்
செலுத்திய சீட்டுடன் நுழைய வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துள்ள நாடுகளின் முக்கிய கட்டடங்களை 1/25 என்ற அளவில், அச்சு அசல் அதே மாதிரி, அதே வண்ணங்களில், ஒரு மிக விசாலமான நிலப்
பரப்பில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்
. நாட்டுக்கு நாடு, கட்டடங்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது; (ஒன்று முதல்
பதினாறு வரை). விலங்ககத்தில்
பகுதி பகுதியாய்ப் பார்த்துக்கொண்டு போவது
போலப் போக வேண்டும்.
பிரஞ்சு மொழியில் 64 பக்கங் கொண்ட
ஒரு கையேடு தந்தார்கள்.
(வேறு மொழியிலும் உண்டு). அதில் கட்டடங்களின் படங்கள்
, ஒரிஜினல் நிறங்களில் விளங்குகின்றன. அவற்றின் பெயர்கள்,
சிறப்பம்சங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நாடு மற்றும் மக்கள் பற்றிய முக்கிய தகவல்கள் கொண்ட அந்தக் கையேட்டின் உதவியால் நாம் ஒவ்வொன்றையும் நுணுக்கமாகப் பார்த்தறியலாம். ஒரு பொத்தானை அழுத்தினால் அந்தந்த நாட்டின் தேசியப் பண் ஒலிக்கும்.
ஜூலை - ஆகஸ்ட் மாத இரவில், பிரகாசமான ஓளியில் மூழ்கியுள்ள அந்தக் கட்டடங்களைப் புதுக் கோணத்தில் கண்டு மகிழலாமாம்.
கையேட்டின் சில
முக்கிய தகவல்களை இங்குப் பதிகிறேன்:
யூரப் என்பது பினீசிய மொழிச் சொல்லான எரேப்
(ereb) பிலிருந்து வந்தது; அதன்
பொருள்: மேற்கு.
பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, இத்தாலி, லக்சம்பர்க் ஆகிய
ஆறு நாடுகள் கூடி, 9-5-1957 இல்,
ஐரோப்பிய
ஒன்றியம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தன; பிற நாடுகள் அவ்வப்போது சேர்ந்து சேர்ந்து, அது 2007 இல் இருபத்தேழு தேசங்
கொண்டதாய்ப் பரிணமித்தது.
அதன் தலைநகரம் பிரசல்ஸ்; கொடி, கருநீலநிற நீள்சதுரப் பின்னணியில் அகன்ற
வட்டமாய்ப் பொறித்த பன்னிரண்டு விண்மீன்கள் கொண்டது. இவை செம்மைக்கு
(perfection) அடையாளமாம்.
நாணயம், யூரோ.
இனிச் சில நாடுகளைப் பற்றி:
1 - பெல்ஜியம் – (16 கட்டடம்) - உலக வைர உற்பத்தியில் 70% இந் நாட்டினுடையது.
2 --செக் குடியரசு
--(1) --மக்களுள் 40% மேல் நாத்திகர்.
3 --டென்மார்க் -(3) - 406 தீவுகளால் ஆன நாடு; 97 இல் மட்டும் மக்கள் வாழ்கிறார்கள்.
4 -- எஸ்த்தோனியா - (1) --அதிக அளவில் காளான் உண்கிறார்கள்;
கிட்டத் தட்ட
அறுபது வகை.
5 -- பின்லாந்து --(1) -- 70% பிரதேசம் காடு.
6 -- ஜெர்மனி -- (10) --ஐரோப்பியருள் ரொட்டியை மிகுதியாக உண்பவர்கள்.
7 -- ஹாலந்து - (15) - பத்துப் பேரில் எட்டுப் பேர் மிதிவண்டி வைத்திருக்கின்றனர்
. உலகஞ் சுற்றுபவர்களுள் இவர்களே அதிகம்.
8 -- இத்தாலி - (10) - உடைக்காக எக்கச்சக்கமாய்ச் செலவு செய்பவர்கள்.
9 -- லித்துவேனியா - (1) - மொழி, சமற்கிருதத்துடன் மிக நெருங்கிய உறவு உடையது.
10 -- போலந்து - (1) -- 97 % பரப்பளவு, கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டருக்குமேல் இல்லை.
11 -- ஸ்பெயின் --(5) --ஆரஞ்சு விளைச்சல் அமோகம்.
12 -- ஸ்வீடன் -- (1) --சொந்தப் பெயர்
, ஸ்வெரிட்ஜ்.
(ஸ்வேர்களின் நாடு)
. 8 ஆம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்த மக்கள் ஸ்வேர்.
13 -- ஐக்கிய அரசு
, (U.K .) --(10) - லண்டன் நாடாளுமன்றக் கட்டடத்தின் கடிகாரம் பெஞ்சமின் ஹால் (Benjamin Hall) என்ற ஒப்பந்தக்காரரால் அமைக்கப்பட்டது; அவர் பருத்தவர் ஆதலால், 'பிக் பெஞ்சமின்' (Big
Benjamin) எனப்பட்டார்; சுருக்கமாய் பிக்
பென்; அதுவே கடிகாரத்தின் பெயராயிற்று.
=================================
மிகவும் பயனுள்ள பல்வேறு புதிய விஷயங்களை அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.
ReplyDeleteபுது விஷயங்களை நீங்கள் அறிந்தமைக்கு மகிழ்ச்சி . அதை வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி .
Deleteஅருமையான தகவல்கள்... நன்றி ஐயா...
ReplyDeleteபாராட்டிக் கருத்தறிவித்தமைக்கு மிக்க நன்றி .
Delete1/25 என்றால் வெளிப்புறம் மாத்திரமே பார்க்க முடியும் அல்லவா.?அருமையான தகவல்கள் .சில கோவில்களில் கோவில் மாதிரி எக்சிபிட்ஸ்வைத்திருப்பார்களே அது போல் என்று நினைக்கிறேன் பகிர்வுக்கு நன்றி. ஐயா
ReplyDeleteஉங்கள் கருத்து சரி . எக்சிபிட் தான் . வெளிப்புறம் மாத்திரம் தெரியும். பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteசிறப்பான தகவல் பாராட்டுகள்
ReplyDeleteபுதிதாய் வருகை தந்திருக்கிறீர்கள் ; வரவேற்கிறேன் . பாராட்டுக்கு மிக்க நன்றி .
Deleteஒவ்வொரு நாட்டைப் பற்றியும் பல அறியாத புதிய செய்திகள். புகழ் பெற்ற பிக் பென் கடிகாரம் அதனை அமைத்த ஒப்பந்தக்காரரின் பெயரால் அழைக்கப்படுவது இன்று தான் தெரிந்தது. பகிர்வுக்கு மிகவும் நன்றி!
ReplyDeleteஊக்கமளிக்கும் கருத்துரைக்கு மிக்க நன்றி
Deleteஎவ்வளவு புதிய தகவல்கள்.. அறியாத பலவற்றையும் அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி. mini europe என்பதை வாமன ஐரோப்பா என தமிழில் விளித்தமை அழகு.
ReplyDeleteஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .
Deleteமரியாதைக்குரிய அய்யா சொ. ஞான சம்பந்தம் அவர்களுக்கு வணக்கம்! உங்களது இலக்கியம் சம்பந்த கட்டுரைகளை படித்து இருக்கிறேன்.
ReplyDeleteநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (25.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 25ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/25.html
இனிய தமிழ்ப் பெயர் கொண்டுள்ள உங்களை அன்புடன் வரவேற்று உங்கள் கருத்துகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் . என் கட்டுரைகளை வாசித்துவருவதற்கு அகம் கனிந்த நன்றி . ஐயா கோபாலக்ருஷ்ணன் என்னை அறிமுகம் செய்துள்ள தகவலறிந்தேன் ; அதற்காக அவர்க்கு உள்ளம் நிறை நன்றி . அவரது வலைத்தளம் பற்றி அறிவித்தமை பெரிய உதவி . மீண்டும் நன்றி . அதைப் பார்ப்பேன்
Delete