Sunday 17 July 2016

என்னென்னவோ



1. இந்தியப் பிரதமரின் சரியான பெயர் நரேந்திர மோதி; இவ்வாறுதான் இந்தியில் எழுத/சொல்லப்படுகிறது.


2. ரோமானியர் பிரான்சைக் கைப்பற்றிய பின்பு (அப்போது அதன் பெயர் 'கோல்' Gaule) இங்கிலாந்தைப் பிடித்து ப்ரிட்டானியா எனப் பேர் வைத்தனர்; காலப்போக்கில் அது கிரேட் ப்ரிட்டன் ஆனது; கிரேட் (Great) என்னும் அடைமொழி எதற்காக?




    பிரான்சின் தேசப்படத்தைப் பாருங்கள்: அதன் மேற்குப்பகுதி, ஒட்டகத் தலைபோல் அட்லாண்டிக் பெருங்கடலில் நீட்டிக்கொண்டிருக்கிறதல்லவா? அதற்கு  பிரஞ்சில் ப்ரெத்தாஞ் (Bretagne) என்று பெயர்; ஆங்கிலத்தில் பிரிட்டன். இதைவிட  இங்கிலாந்து விசாலமானது ஆதலால் அது  க்ரேட் பிரிட்டன்

      3. பிரஞ்சில் 'வா' என்றால், தமிழில் போ' என்று பொருள்; இந்தியில் 'நாக்' எனில் தமிழில் 'மூக்கு'.

    4. திங்கட்கிழமைதான் பிரஞ்சுக்காரர்களுக்கு வாரத்தின் முதல் நாள்.   கர்த்தர் தம் படைப்புகளை ஆறு நாளில் செய்து முடித்துக் கடைசி நாள் ஓய்வெடுத்தார்அது ஞாயிற்றுக்கிழமை; ஆகவேதான் ஞாயிறு விடுமுறை விடுகிறோம் என்பது அவர்கள் சொல்லும் காரணம்.

    5. பிரஞ்சு தேசிய கீதத்தின் பெயர் லா மர்செய்யேஸ் (La Marseillaise).

  1789-இல் வெடித்த புரட்சியை அடுத்த மூன்றாமாண்டு ஆஸ்த்ரியா (Austria) நாட்டை எதிர்த்துப் போர் நிகழ்ந்தது; பிரான்சு - ஜெர்மனி எல்லையில் உள்ள   ஸ்த்ராஸ்பூர் (Strasbourg) நகரில் நிலை கொண்டிருந்த 'ரேன் சேனை' யின் தளபதி ருழே தெ லீல் (Rouget de Lisle) தம் படையினரை ஊக்குவிப்பதற்காக ஒரு பாட்டு இயற்றி இசையமைத்து 'ரேன் சேனையின் பாடல்' எனத் தலைப்பிட்டார். அது பிரபலமடைந்து பரவலாய்ப் பாடப்பட்டது.

  சில மாதங்களுக்குப் பின்புபாரீசில் கொண்டாடப்பட்ட விழா ஒன்றில்தென் துறைமுகமாகிய மர்சேயிலிருந்து (Marseiille) வந்த பிரதிநிதிகள் அந்தப் பாடலை அங்கு அறிமுகப்படுத்தவே, தலைப்பு மாறி, அவ்வூரின் பெயரைப் பெற்றது.

    6.  19-ஆம் நூற்றாண்டுப் பிரஞ்சுக் கவிஞர் ரைம்போ (Rimbaud) மின்னலை இவ்வாறு வர்ணித்தார்: 'வானத்தில் விரிசல்!'

   7. கொலம்பசுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டவர் அமெரிகோ வெஸ்ப்பூச்சி - Amerigo Vespucci; இவரும் இத்தாலியர். வெனிஜுலா பகுதியைக் கண்டுபிடித்தவர் இவரே.




    அமெரிக்க தேசப்படத்தை முதன்முதலில் வரைந்தவர்கள் இவருடைய பெயரைக் கண்டத்துக்கு வைத்துவிட்டார்கள்; கொலம்பஸ் பேரைத்தான் சூட்டியிருக்க வேண்டும். இருப்பினும், கொலம்பசின் நினைவு பலவாறு நிலைநாட்டப்பட்டுள்ளது:

) - தென்னமெரிக்க நாடு ஒன்று: கொலோம்பிஆ (Colombia).
) - அமெரிக்காவின் தென்கரோலினா மாநிலத்தின் தலைநகர்: கொலும்பிஆ (Columbia).
) - ஒஹிஓ மாநிலத் தலைநகரம்: கொலும்பஸ் (Columbus).
) - அமெரிக்க ஆறு ஒன்றன் பெயர்: கொலும்பிஆ.

        கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த தேதி12-10-1492.  அதைச் சிறப்பிக்க ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாம் திங்கட்கிழமையில், 'கொலம்பஸ் நாள்என்னும் பெயரில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில், தேசிய விடுமுறை விடுகிறார்கள்மத்திய, தென் அமெரிக்க தேசங்கள் சிலவும் கொண்டாடுகின்றன.

    8. சங்கத்தமிழில் நிகழ்காலம் இல்லை; நிகழ்காலத்தில் கூறவேண்டியதை எதிர்காலத்தில் கூறினர்.

     9. வான்மீகி ராமனுக்கு மனைவியர் பலருண்டு.

     10.  சகுந்தலையைக் காதலித்து கந்தர்வ மணம் செய்துகொண்ட துஷ்யந்தன் ஏற்கனவே மணமானவன்.


                                                 ++++++++++++++++++++++++++++++++++++++

4 comments:

  1. மிகவும் ஆச்சர்யமான தகவல்களாக அளித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    வரிசை எண்: 9 பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி . ஒரு ராமாயண வசன நூலில் படித்தேன் : "சீதையின் திருமணத்துக்குப் பின்பு ராமன் , அக்கால அரச வழக்கப்படி, மேலும் சில பெண்களை மணந்துகொண்டான் " .அவ்வளவுதான் இருந்தது , மேற்கொண்டு விவரமில்லை .

      Delete
  2. நல்ல தகவல்கள் தொகுப்பு...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அகமார்ந்த நன்றி

    ReplyDelete