Thursday, 11 April 2013

சிங்கமும் புலியும்


 

தமிழ்த் திரைப்படங்கள் பரப்புகிற தவறான தகவல்களுள் ஒன்றுசிங்கம் தனியாய் வரும் என்பது; கதைகளில் கூறப்படும் செய்திகளான சிங்கம் காட்டில் வாழும், அதுவே காட்டுக்கரசன், குகையில் வசிக்கும் என்ற செய்திகளும் சரியல்ல.
 
சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரிமயிரைப் பிடித்து உலுக்குதல் என்பது அச்சம் அறியா அதிவீரச் செயலைக் குறிக்கிற ஆங்கிலப் பழமொழி. 

ஆனால் சிங்கம் குடும்பமாக வாழும் விலங்கு. பெண் சிங்கம் வேட்டையாடி இரை வழங்கும்குடும்பம் சேர்ந்து உண்ணும். சிங்கக் கூட்டத்தை ஆங்கிலத்தில் A pride of lions என்பர். சிங்கம் புல்வெளிகளில் வாழ்கிறது

காட்டுக்கு அரசன் புலிதான்;  அடர்ந்த உள்பகுதியில் அது வசிக்கும் ஆதலால் அதைக் காண்பது அரிது. தனியாக வாழ்வதால் காயம் பட்டாலோ, நோய் உற்றாலோ, முதுமை அடைந்தாலோ இரை தேட முடியாமல் இறந்துவிடும். 

இந்த ஆண்டு இந்தியாவில் 32 புலிகள் உயிரிழந்தன எனவும் உலகு முழுதும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது எனவும் 16-5-12 இந்து நாளிதழ் தெரிவித்தது. 
 
படம் உதவி: இணையம்
=======================================================

2 comments:

  1. புலிகளை காப்பது அனைவரின் கடமை... தகவலுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. இனியாவது காட்டுக்கரசன் புலி என்று சொல்வோம். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete