சங்க நூல்களுள் ஒன்றென நம்பப்பட்ட
கலித்தொகை, பிற்கால நூல் என்று திறனாய்வாளர்
தெரிவிக்கின்றனர்.
காரணங்கள்:
1 - சங்க நூல்கள் யாவும் அகவல்பாவால்
ஆக்கப்பட்டிருக்க இது கலிப்பாவால் இயன்று வேறுபடுகின்றது.
2 - முந்தைய அகத் திணை நூல்கள் இயல்பான
காதலைப் பாடுகின்றன; அன்புடை நெஞ்சம் தாங் கலந்தன என்றபடி
நிபந்தனை ஏதுமின்றி மனக் கலப்பு நிகழ்ந்தது. கலித்தொகையோ காளையை அடக்கவேண்டும்
என்று விதிக்கிறது.
" ஏறு தழுவினவர் அல்லாத எவரும் இவளை அடைய
முடியாது என எல்லாரும் கேட்கும்படி பல தடவை அறிவிக்கப்பட்டவள் என்று தலைவி
சுட்டப்படுகிறாள்.( பா - 2 )
கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள் (பா 3)
பொருள்: ஏற்றுக் கோடு - காளையின்
கொம்புகள் ; புல்லாளே - தழுவாளே.
3 - பிற்காலப் புராணச் செய்தியைக்
காண்கிறோம்: கைலை மலையை இராவணன் தூக்க முயன்றான். (38 )
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்
தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன்
போல........
4 - பாலியல் வன்முறையும் அறம் தான் என்ற
கருத்து இடம்பெற்றுள்ளது:
"வௌவிக் கொளலும் அறன்" (62)
5 - பழைய நூல் எதுவும் சொல்லாத மாற்றுத்
திறனாளிகள் இருவரின் ஊடலுங் கூடலும் விவரிக்கப்படுகின்றன. (94)
இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு எனக் கணித்தனர் ஆராய்ச்சியாளர்.
+++++++++++++++++++++++++++++++++
அருமை... விளக்கத்திற்கு நன்றி ஐயா...
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்க
ReplyDeleteஇலக்கியச் சாரலில் கரைந்தேன்..
ReplyDelete