1 - லுங்கி -- தமிழக முஸ்லிம்கள் லுங்கி உடுத்துகிறார்கள்; மற்றவர்கள்
நைட்டியாகப் பயன்படுத்துகின்றனர். அது மியான்மார் நாட்டு மக்களாகிய பர்மியரின்
தேசிய ஆடை. லுங்கி என்பது பர்மியச் சொல்.
2 -- இரண்டாம் உலகப் போரின் இறுதியில் (1944) , படை வீரர்களை எந்த மாதிரி பாதையிலும்
கொண்டு செல்லத் தக்கதாய் அமெரிக்கர் கண்டுபிடித்துப் பயன்படுத்திய ஊர்தி: ஜீப்.
3 -- ஐரோப்பாவின் மிக உயரமான மலை உச்சி மவுண்ட் ப்ளான்க் என ஆங்கிலத்தில்
சுட்டப்படுகிறது; மோன் ப்ளான் (Mont Blanc) என்பது அதன்
ஒரிஜினல் பிரெஞ்சுப் பெயர். வெள்ளை மலை என்று பொருள்.
4 -- Fortune is
blind என ஆங்கிலம்
சொல்வதை நாம் குருட்டு அதிர்ஷ்டம் என்கிறோம்; பிரெஞ்சிலும் அவ்வாறே சொல்கின்றனர்.
பழங் காலக் கிரேக்கர், அதிர்ஷ்டத்தை, ஒரு தேவதையாய்
உருவகித்தனர்; அது, கண்கள் ஒரு துணியால் கட்டப்பட்ட நிலையில், ஓர்
உருளையின்மீது நின்றபடி, விரைந்து செல்லும். "அதிர்ஷ்டம் எப்போது வரும், யாருக்கு
அடிக்கும் என்பது உறுதி இல்லை;
அதிர்ஷ்ட தேவதை ஆள் பார்த்து
அருளுவதில்லை" என்பதையே கட்டப்பட்ட கண்கள் குறித்தன. இதன் அடிப்படையில்தான்
குருட்டு அதிர்ஷ்டம் என்னும் கருத்து பிறந்தது.
நீதி தேவதையின் கண்களும் கட்டப்பட்டு இருப்பதாய்ச் சித்திரிக்கப்படுகிறது.
ஆளுக்குத் தக்கபடி நீதி வளையாது என்பது கருத்து.
5 -- பெயர்கள் - 2000 ஆண்டுக்கு முன்பு, பிரான்சு நாடு, "கோல்" என அழைக்கப்பட்டது. அதன்மீது பலப்பல கூட்டத்தார் அடுத்தடுத்துப் படையெடுத்தார்கள்; அவர்களுள் முக்கியமானவர்கள் "ஃப்ரான்" என்போர்; இவர்கள் அந்த நாட்டில் ஆட்சி அமைத்து நீண்டநெடுங் காலம் ஆண்டார்கள்; இவர்களின் பெயரால் கோல் நாடு, ‘ஃப்ரான்ஸ்' ஆயிற்று;
தமிழர்கள் தம் பெயரில், மொழியின் பெயரைச்
சேர்த்துக்கொள்கிறார்கள் அல்லவா? தமிழரசி, தமிழ்வேந்தன்,
தமிழ்மணி, தமிழ்வாணி என்பது போல் .
பிரஞ்சியர்க்கும் இந்த வழக்கம் உண்டு: பிரான்சுவா, பிரான்சீஸ், பிரான்க், பிரான்சுவாஸ், பிரான்ஸ். 19 ஆம் நூற்றாண்டில் இலக்கிய நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் பெயர்:
அனத்தோல் பிரான்ஸ்.
அவர்களிடம் இன்னொரு வழக்கமும் உண்டு;
ஆணின் பெயரைச் சிறிது மாற்றிப் பெண்
பெயராக்குவது தான் அது. தமிழரசன் - தமிழரசி, தமிழ்ச்செல்வன் - தமிழ்ச்செல்வி என
இரண்டுதான் தமிழில் உண்டு;
பிரஞ்சில் நிறைய:
அந்த்துவான் - அந்த்துவானேத்;
ழுய்ல் - ழுய்லி;
ழுய்லியேன் - ழுய்லியேத்;
தெனீ - தெனீஸ்;
லூய் - லூய்ஸ்;
ஃரான்சுவா - ஃரான்சுவாஸ்;
சிமோன் - சிமோன்னு;
ழான் - ழான்னு;
ழாக் - ழாக்லீன்;
ழொசேஃப் - ழொசேஃபீன்;
வலாந்த்தேன் - வலாந்த்தீன்;
ஷார்ல் - ஷர்லோத்;
போல் - பொலீன், பொலேத்.
சில பிரஞ்சுப் பெயர்களைத்
தெரிந்துகொண்டீர்கள்.
6 -- இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் சிங்கப்பூரைக் கைப்பற்றி அதற்கு
"ஷோனான்" என்று பெயர் சூட்டினர்; " தெற்குத் தாய்நாடு" என்று பொருளாம்.
++++++++++++++++++++++++++++++++
வணக்கம்
ReplyDeleteஐயா.
அறியமுடியாத தகவலை தங்களின் வலைப்பக்கம் அறியக்கிடைத்துள்ளது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பல தகவல்கள் அறியாதவை ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி... தங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா...
உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .
Deleteஅறிய தகவல்கள்..
ReplyDeleteகதமபத்தில் ரசித்தேன்
நீங்கள் ரசித்தமை அறிந்து மிக மகிழ்கிறேன் .
Deleteஉங்கள் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி .
ReplyDeleteIyya,thangal karuthukkalai padikkumpothu thangalai parththa aanandam. Era.Sivagnana Pandian
ReplyDeleteலுங்கி என்பது பர்மியரின் தேசிய ஆடை, லுங்கி என்பதும் பர்மிய சொல் என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். குருட்டு அதிர்ஷ்டம் பற்றிய பின்னணியையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இப்பதிவுக்கு மிக்க நன்றி.
ReplyDelete