Thursday 2 October 2014

பிழையும் திருத்தமும்

             
       தமிழைப்   பிழைகளுடன்  எழுதுவோர்  பலப்பலர்;  மெத்தப்  படித்தோரும்  விலக்கல்ல.   தவறு  இல்லாமல் எழுத  விரும்புவார்  சிலராவது  இருக்கக்  கூடும். அவர்களுக்குப்  பயன்படும்  இச்  சிறு  பட்டியல்.



 பிழை 

 திருத்தம்
 1.  அடசல்  

அடைசல்  

(அடைந்து  கிடப்பது )

 2. அடுத்தப்  பக்கம்                              

அடுத்த பக்கம்
 3. அடையார்  (ஊர் )                            

அடையாறு
 4. அட்டைக்  கரி
அட்ட  கரி  

(அட்ட = சமைத்த;  அடுதல் = சமைத்தல் -----> அடுப்பு .
 (அதிகக்  கருப்பைக்  குறிப்பது) 
 சமையல்  பாத்திரத்தின்  அடியில்  பிடித்துள்ள  கரியே   அட்ட கரி.

 5. அரசுப் பணி
அரசு பணி
  
(அரசு பள்ளி,  அரசு  பேருந்து)

 6. ஆட்சேபணை 
ஆட்சேபனை  

(கற்பனை,  யோசனை,  ரசனை  போல )

 7. ஆளுனர்   
ஆளுநர்  ( இயக்குநர் ,   ஓட்டுநர் )

 8. இட ஒதூக்கீடூ
இட ஒதுக்கல்

 9. இணைய தளம்
இணையத் தளம்

 10. உயிர்க் கொல்லி
உயிர் கொல்லி

 11. உள்ளூர  
உள்ளுற

 12. எசகு  பிசகு 
இசகு  பிசகு

 13. கட்டு கடை 
கட்டுக்  கிடை  

(கட்டுக்கு + இடை )  துணிக்   கட்டுகளுக்கு  இடையில்  விற்காமல்  கிடப்பது

 14. கவிச்சி
கவிச்சு  =  மீன் நாற்றம்

 15. குத்துச் செடி
குற்றுச்  செடி 

(குற்றெழுத்து  போல -குறுமை = சிறுமை

 16. குளுமை
குளிர்மை

 17. கோரைப் பல்
கோரப் பல் 

(கோரம் = அசிங்கம்)

 18. சில காலம்
சிறிது காலம் 

(எண்ணக்கூடிய பொருள்களுடன்தான் சில அல்லது    பல வரலாம்: சில நாள், பல மாதம்).

 19. பயண சீட்டு
பயணச் சீட்டு

 20. பிசிர்
பிசிறு



                        



19 comments:

  1. ஆஹா... எத்தனை சொற்கள் பிழையுடன் உபயோகித்து வந்திருக்கிறேன் . இன்று கற்றது நன்று. நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பட்டியல் உங்களுக்குப் பயன்பட்டதறிந்து மகிழ்கிறேன் , உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  2. வணக்கம்
    ஐயா.
    அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்..பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பட்டியலை வாசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி .

      Delete
  3. நன்று ஐயா. நாம் அன்றாடம் எழுதிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் பல பிழையானதாகவே இருக்கின்றன. சிகப்பு சரியா, சிவப்பு சரியா, கருப்பு சரியா, கறுப்பு சரியா என்று பலருக்கு தெரிவதில்லை. அதுபோலத்தான் சில்லரை, சில்லறையும் பயன்படுத்தப்படுகிறது. இது பற்றியும் தாங்கள் எழுத வேண்டும் ஐயா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி . உங்கள் யோசனைப்படி இன்னொரு பட்டியல் எழுதுவேன் .

      Delete
  4. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    எந்த எழுத்திற்குப் பின் புள்ளி வைத்த எழுத்தை எழுத வேண்டும், எந்த எழுத்திற்குப் பின் புள்ளி வைத்தை எழுத்தை எழுதக் கூடாது என்று பாடல் ஒன்று இருக்கிறதல்லவா ஐயா.
    அப்பாடலினையும் எழுதிவீர்களேயானால் மிகவும் மகிழ்வேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி . நீங்கள் குறிப்பிட்ட பாடலை நான் அறியேன் . சந்தி பற்றி இலக்கணப் பாக்கள்தான் இருக்கின்றன .

      Delete
  5. சில நேரங்கள் என்று எழுதலாமா.?

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் சில மனிதர்கள் என்றொரு புதினத்தை ஜெயகாந்தன் இயற்றியுள்ளார் . ஆனால் இலக்கணப்படி சில நேரங்கள் என்பது பிழை . ஒரு நேரம் இரண்டு நேரங்கள் என எண்ண முடியாதல்லவா ? சில தடவைகள் என்று சொல்லலாம் . ஆயினும் பெரிய படைப்பாளிகள் தவறாக எழுதினாலும் ஏற்கப்படுகின்ற்ன . கத்துங் குயிலோசை என்ற பாரதியாரின் சொற்றொடரைச் சான்றாகக் கொள்ளலாம் . கூவுங் குயில் என்பதே மரபு .

      Delete
  6. மிகவும் பயனுள்ள பதிவு. அட்டைகரி என்பது தான் சரியென்றே இதுவரை நினைத்திருந்தேன். அதுபோல் சில காலம் என்பதையும் தவறாகப் பயன்படுத்திவந்தேன். மிக்க நன்றி! தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி . தொடர்வேன் .

      Delete
  7. நல்ல பயனுள்ள பதிவு. நன்றி.
    பேச்சு வார்த்தை என்ற சொல் எப்படி உருவானது
    பால்மாறுதல் எனும் சொல்லின் மூலம் எது
    என் அய்யங்களுக்கு தீர்வு தந்து உதவுங்கள்
    அன்புடன்
    வெங்கட சுப்புராய நாயகர்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி . பேச்சு என்றாலே போதும் , பேச்சுவார்த்தை என்பது பத்திரிகையாளர் உருவாக்கிய சொற்றொடர். பால் மாறுதல் என்பதில் இரு சொற்கள் உள்ளன . நீங்கள் எந்தச் சொல்லுக்கு மூலம் கேட்கிறீர்கள் என்பது விளங்கவில்லை .

      Delete
  8. தம 1 என்றால் என்ன என்று தெரியவில்லை . விளக்கினீர்களானால் நன்றி .

    ReplyDelete
  9. விளக்கத்துக்கு மிக்க நன்றி.பால் மாறுதல் எனும் சொற்றொடரின் மூலம் தெரிய விழைகிறேன்
    அன்புடன்
    வெங்கட சுப்புராய நாயகர்

    ReplyDelete
    Replies
    1. அச் சொற்றொடரின் மூலம் எனக்குத் தெரியவில்லை ;வருந்துகிறேன் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  10. OMG.

    LUCKILY YOU ARE NOT MY TAMIL TEACHER. OTHER WISE I WOULD HAVE SCORED IN MINUS MARKS. BUT YOU WOULD HAVE CORRECTED ME IN GOOD MANNER.

    WISHES

    SESHAN/ DUBAI

    ReplyDelete
  11. I thank you for your wishes ; teachers do not have enough time for correcting all the mistakes of their students; they should learn appropriate books and improve themselves . .

    ReplyDelete