Wednesday 18 March 2015

அயல் நாட்டுத் தாவரங்கள்



   தாவர  இயல்  அறிஞர்  கு. வி. கிருஷ்ணமூர்த்தி,   தமது  "தமிழரும் தாவரமும்என்னும் ஆராய்ச்சி நூலில் எந்தத் தாவரங்கள்  எவ்வெந்நாடுகளிலிருந்து எப்போது தமிழகத்துள் நுழைந்தன  என்ற  விவரங்களை  வழங்கியுள்ளார்முக்கியமானவற்றை இங்கே  பகிர்கிறேன்:

எண்
தாவரம்

நாடு
காலம்
1.
கடலைப்  பருப்பு  

இத்தாலி
கி.மு.5
2.
இஞ்சி             
           
வட கிழக்கு  இமயம் 
கி.மு.1
3.
வெற்றிலை , பாக்கு

மலேசியா            
கி.பி.1
4.
ஆல  மரம்  

வட  இந்தியா          
புத்தர்  காலம்
5.
அரச  மரம் 

இமயமலை அடிவாரம்
மேற்படி
6.
மஞ்சள்       

சீனா
தெரியவில்லை
7.
தென்னை

பிலிப்பைன்ஸ்
கி.பி.2
8.
பவழ மல்லிகை 

வட இந்தியா
கி.பி.7
9.
கேழ்வரகு

ஆப்பிரிக்கா
கி.பி.10
10.
துளசி

இத்தாலி, பிரான்ஸ்
கி.பி.12
11.
இலவ மரம்

ஆப்பிரிக்கா
கி.பி.12
12.
புளிய மரம்

மேற்படி
கி.பி.14
13.
மிளகாய்                                  

மெக்சிக்கோ
கி.பி.16
14.
கொய்யா மரம்

பெரு
கி.பி.16
15.
புகையிலை

அமெரிக்கா
கி.பி.16
16.
முந்திரி

தெரியவில்லை
கி.பி.16
17.
தக்காளி

அமெரிக்கா
கி.பி.17
18.
உருளைக் கிழங்கு 

சிலி
கி.பி.17
19.
வெங்காயம்

ஆப்கானிஸ்தான்
கி.பி.17
20.
முள்ளங்கி

சீனா
கி.பி.17
21.
ஆரஞ்சு

சீனா
கி.பி.17
22.
வேர்க்கடலை           

மத்திய அமெரிக்கா
கி.பி.19
23.
காப்பி

எத்தியோப்பியா
கி.பி.19
24.
மரவள்ளி

தென்னமெரிக்கா
கி.பி.19
25.
கிராம்பு

பசிபிக் தீவுகள்
கி.பி.19
         
(குறிப்பு -  1: பழங்காலத்தில்  தமிழர்   புளி  பயன்படுத்தி  இருக்கிறார்கள்அது  கோரக்கர்    புளி  எனப்படும்;   மேற்கு  மலைத்  தொடரில்  விளைகிறது.

குறிப்பு - 2: லெமூரியா  என்ற  குமரி  கண்டம்  பற்றிச்   சில தமிழறிஞர்    கூறிவரும்   செய்திகள்   அறிவியலாதாரம்  அற்றவை   என  இலக்கியச்    சாரலில்  லெமூரியா  என்னும்  தலைப்பில்  தெரிவித்திருந்தேன்;   அதற்கு  இந்நூல்  வலு  சேர்க்கிறது ;   பக் .  12  -- 15.)

**************************
(படம் இணையத்திலிருந்து எடுத்தது)

18 comments:

  1. பயனுள்ள பல தகவல்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  2. வெவ்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு காலகட்டத்தில் வந்திருந்தாலும் இன்று இவையெல்லாம் இல்லாத தமிழகத்தை கற்பனை செய்துபார்க்கவும் இயலவில்லை. அந்த அளவுக்கு நம்மோடு ஒன்றிப்போயிருக்கின்றன அனைத்தும். இவ்வளவும் அயல்நாடுகளிலிருந்துதான் வந்திருக்கின்றன என்று நினைத்துப்பார்த்தால் வியப்பாக உள்ளது. புதிய தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி. கோரக்கர் புளி இதுவரை அறிந்திராத ஒன்று. செடியா மரமா? இப்போதும் இருக்கிறதா? அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. கோரக்கர் புளி தருவது ஒரு மரந்தானாம் . இப் புளி வடக்குக் கர்நாடகம் மற்றும் கோவா சந்தைகளில் இன்றும் விற்கப்படுவதாகவும் இதை மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள் எனவும் நூல் விவரிக்கிறது .

      Delete
    2. இத் தொடுப்பிலுள்ள காணொளியில் கொடுக்காய் புளி பற்றிய விளக்கம், அக்காயையும் காட்டுகிறார்கள்.பார்க்கவும்
      https://www.youtube.com/watch?v=b-t_P0H8FUc

      Delete
  3. வணக்கம்
    ஐயா.

    அரிய தகவல்கள் நான்அறிந்ததில்லை தங்களின் வலைப்பக்கம் வந்து அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊக்கந்தரும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  4. நல்ல தகவல்கள். பிரான்சிலும் நிறைய தாரவரங்கள் 5 நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு மன்னர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவையே!
    மிளகாய் - சிலி தேசத்தைச் சேர்ந்தது எனப் படித்ததாக ஞாபகம். அதனால் ஆங்கிலத்தில் "சிலி" என்பதாகவும் படித்தேன்.
    கோர்க்கர்- என்பதை கொறுக்காய் என இலங்கையில் குறிப்பிடுவோம். இப்போதும் கேரளச் சமையலில் பயன்பாடு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பெயரில் இடம்பெற்றுள்ள பாரிஸ் என்ற சொல் மிகப் பழைய நினைவலைகளை என்னுள் எழுப்பியது . அந்த மாநகரில் இரண்டரை ஆண்டு ( 1949 - 1952 ) வாழ்ந்தேன் ; 2008 இல் இரு நாள் அங்குத் தங்கிப் பழகிய இடங்களுள் சிலவற்றை மீண்டும் கண்டு களித்தேன் .
      நீங்கள் சொன்னதுபோல் சிலி நாடுதான் மிளகாயின் பூர்விகம் . அது பரவிய நடு அமெரிக்காவிலிருந்து போர்த்துகீசியர் கொண்டுவந்தனராம் . தமிழிலும் கொறுக்காப் புளி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் ; பார்த்ததில்லை . அது பற்றிய விவரம் அற்வித்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
    2. ஐயா!
      இத் தொடுப்பிலுள்ள காணொளியில் கொடுக்காய் புளி பற்றிய விளக்கம், அக்காயையும் காட்டுகிறார்கள்.பார்க்கவும்.
      ஐயா, நீங்கள் பாரிசில் நான் பிறக்குமுன் வாழ்ந்துள்ளீர்கள். 2008ல் மீண்டும் பார்த்துள்ளீர்கள்.
      இலங்கையனாகிய, நான் பதிவுலகில் உலாவும் போது பலர் எங்கிருக்கிறீர்கள் என்ற போது, அதை தெளிவுபடுத்தப் பெயருடன் பாரிஸ் சேர்த்துவிட்டேன்.30 வருடமாக இங்கே வாழ்வாகிவிட்டது.
      https://www.youtube.com/watch?v=b-t_P0H8FUc

      Delete
    3. கொறுக்காய்ப் புளியை யூடியூபில் பார்க்க வழிகாட்டிய உங்களுக்கு மிகுந்த நன்றி . விரைவில் பார்த்தறிவேன் .
      பாரிசில் நிலைத்துவிட்டீர்கள் ; வாழ்க வளமுடன் ! ஏழாண்டுக்குமுன் என் மூத்த மகள் கலையரசி , மாப்பிள்ளை , நான் மூவரும் அங்கு வந்தபோது , Gare du Nord பகுதியில் நிறைய இலங்கைத் தமிழர் வாழ்கின்றதாய்க் கேள்வியுற்று , பார்க்கப் போனோம் : தெரு முழுதும் தமிழர் மயம் ; வரிசையாய் அவர்களின் கடைகள் . அவற்றுள் ஓர் உணவகத்தில் பகலுணவு சாப்பிட்டுத் திரும்பினோம் .

      Delete
  5. அறியாத தகவல்கள் ஐயா... சேமித்துக் கொண்டேன்... நன்றி...

    ReplyDelete
  6. தகவல்கள் உங்களுக்குப் பயன்பட்டமை அறிந்து மகிழ்கிறேன் , பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  7. கொடுக்காய்ப் புளி மரம் பார்த்திருக்கிறேன். புளியங்காய் போலத்தான் தொங்கும். பறவைகள் அவற்றை விரும்பி உண்ணும். குறிப்பாகக் கிளிகள். ஆலமரத்தின் பூர்வீகம் தமிழ்நாடு என்று நினைத்திருந்தேன். வட இந்தியா என்றறியும் போது வியப்பு! லெமூரியா பற்றி இப்புத்தகத்தில் என்ன கொடுத்திருக்கிறார்கள் என்பதைச் சுருக்கமாய்க் கொடுத்தால் நாங்களும் தெரிந்து கொள்ள வசதியாய் இருக்கும். ஏற்கெனவே லெமூரியக் கண்டம் பற்றிய உங்கள் பதிவைப் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . லெமூரியா பற்றி முனைவர் கு.வி. கிருஷ்ணமூர்த்தியின் வாதச் சுருக்கம்:
      1 - இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் , தீபவம்சம் ( கி.பி. 5,6 ஆம் நூ) இலங்கை அருகிலோ தமிழக அருகிலோ பெரிய நிலப் பரப்பு இருந்ததாய்ச் சொல்லவில்லை .
      2 - உலகப் படத்தை முதன் முதலாய்க் கி.பி.140 இல் வரைந்த டாலமி (Ptolemy ) தமிழகத்தைத் தமிரிகே எனவும் இலங்கையைத் தாப்ரபானே எனவும் குறித்துள்ளார் ; குமரிகண்டம் பற்றிப் பேச்சே இல்லை .
      என்னும் தமிழகத் துறைமுகம் பற்றி மட்டுமே அது சொல்கிறது ..
      4 - தமிழக வரலாற்று அறிஞர் சுப்ரமணியனின் கருத்து :
      சங்க இலக்கியங்களில் கடற்கோள் பற்றிக் குறிப்பில்லை ; சில பிற்கால இலக்கியங்கள் சுருக்கமாகக் கூறுவதை உரையாசிரியர்கள் மிகைப்படுத்தியுள்ளனர் . குமரிகண்டம் வரலாறல்ல .

      Delete
    2. கொஞ்சம் விட்டுப் போயிற்று ,
      3 - கி.பி.70 இல் இயற்றப்பட்ட பெரிப்ளஸ் ( Periplus ) என்ற நூல் குமரிகண்டம் பற்றி எதுவும் கூறவில்லை ; குமரி என்னும் தமிழகத் துறைமுகம் பற்றி மட்டுமே அது சொல்கிறது .

      Delete
    3. லெமூரியா பற்றி இப்புத்தகம் கூறும் செய்திகளைக் கொடுத்திருப்பதற்கு மிகவும் நன்றி. எனவே இது பற்றிக் கூறுவதற்கு அறிவியல் ஆதாரமில்லை என்று ஏற்கெனவே நீங்கள் சொல்லியிருந்தது முற்றிலும் சரி என்று விளங்குகிறது.

      Delete
  8. கொய்யாப்பழம் "பெரு" நாட்டில் இருந்து வந்ததினால் தானோ என்னவோ, இப்பழத்திற்கு பெரு என்ற பெயரினாலேயே இன்றும் அழைக்கின்றனர் ஹிந்திகாரர்கள்

    ReplyDelete