கிபன்கள் |
டச்சு உடற்கூற்றியலார் எழேன் துய்புவா (Eugene Dubois),
1887-இல் அந்நாட்டு மருத்துவக் குழுவில் இடம் பெற்று டச்சுக் காலனியாய் இருந்த சுமத்ராவுக்கும் பின்பு ஜாவாவுக்கும் சென்றார். ஹெக்கேலின் ஆதரவாளரான அவர்
, ஆசியாவில் கிபனிலிருந்து
மனிதன் வந்தான் என உறுதியாய் நம்பியவர்.
சுமத்ராவில் கிபன், ஒராங்
உட்டான் இரண்டும் வாழ, ஜாவாவில் கிபன் மாத்திரமே வசித்தது
. கிபனின் பழைய எலும்புக்
கூடுகள் அகப்படும் என்னும் எதிர்பார்ப்புடன் அவர் பல
மாதம் இடைவிடாமல் அகழ்ந்ததில், ஒரு மானிட
உருவத்தின் எலும்புகளை ஜாவாவில் எடுத்தார் (1891);
அவை: முகவாய்க்கட்டையின் ஒரு பகுதி
, மண்டை
யோட்டின் மேல்
மூடி, இரண்டு தனிப் பற்கள், ஒரு தொடையெலும்பு. இவை, நிமிர்ந்து நடந்த ஒரு விலங்கினுடையவை என்பது சர்வ நிச்சயம். மண்டை ஓட்டின் கொள்ளளவு பெருங்குரங்கினுடையதைவிடப் பெரியதாய் இருந்தது; ஆகவே அந்த மிருகம், பெருங்குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்டது என முடிவு கட்டிய அவர்
, பிதிக்காந்த்ரப்பெஸ் இரேக்டஸ் (pithecanthropus erectus )
என்ற பெயரை சூட்டினார்; அதன்
பொருள்: நிமிர்ந்த குரங்கு-மனிதன். பிற்காலத்தில் 'ஜாவா மனிதன்' எனப் பெயர் மாறிற்று.
1929-இல், சீனாவின் பீக்கிங் பிரதேசத்தில் கிடைத்த
கூடு 'பீக்கிங் மனிதன்' எனப்பட்டது; இதற்கும் ஜாவா
மனிதனுக்கும் இடையே மறுக்க இயலா ஒற்றுமைகள் தென்பட்டன. அடுத்த வருடம் ரால்ஃப் வான் கேனிக்ஸ்வால்ட் (Ralph
von Koenigswald ) -- ஜெர்மன் புதை
படிவ ஆய்வாளர்
--ஜாவாவில் மேற்கொண்டும் எலும்புகளைத் தோண்டியெடுத்தார்.
இவையும் பீக்கிங் எலும்புகளும் மனிதனுடையவை
என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்தன: ஹொமோ இரேக்டஸ் (Homo erectus) - நிமிர்ந்த மனிதன்
-- என்றழைத்தனர். லத்தீன்: ஹொமோ
= மனிதன்.
நிமிர்ந்த மனிதனில் இரு வகை இருப்பதாய்க் கண்டறியப்பட்டது:
1 -- ஹொமோ இரேக்டஸ் இரேக்டஸ் -- ஜாவா மனிதன்;
2 -- ஹொமோ இரேக்டஸ் பெக்கினென்சிஸ்
-- பீக்கிங் மனிதன்.
பேராசிரியர் ரேமன்ட் டர்ட் (Raymond Dart) ஆஸ்ட்ரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் பிறந்தவர் (1893 - 1988); உடற்கூற்றியலர். தென்னாப்ரிக்காவில் பணியாற்றியபோது அங்குக் கிட்டிய எலும்புக் கூட்டை ஆராய்ந்து, ஆஸ்ட்ராலொப்பிதேக்கஸ் ஆஃப்ரிக்கானுஸ் (Australopithecus africanus)
என்று பெயர் வைத்து, மனிதர்களுக்கும்
பெருங்குரங்குகளுக்கும் இடைப்பட்ட மற்றும் அதுவரை அகப்படாத இனம் எனத் தெரிவித்தார்.
ஆஸ்ட்ராலொ = தெற்கத்திய; பிதேக்கஸ்
= குரங்கு. தென்குரங்கன் என்று இதை மொழிபெயர்த்தார் தேவநேயப் பாவாணர்.
அதுவரைக்கும் அகப்படாதது என்ற டர்ட்டினுடைய கருத்து சரி; ஆனால் அது மனிதனின் மிகப் பழைய மூதாதையுடையது என்பது பின் கண்டுபிடிப்புகளால் தெரிந்தது. ஆஸ்ட்ராலொப்பிதேசைன் ( Australopithecine ) என அதன் பெயர் மாற்றப்பட்டது. சுருக்கமாக ஆசைன் என்போம். கிழக்காப்ரிக்காவில் 50 ல/ஆ/மு அல்லது அதற்கும் முந்தி வாழ்ந்தது அந்த இனம். (கிழக்காப்ரிக்கா என்பது எத்தியோப்பியா
, கென்யா, டான்சானியா ஆகிய மூன்று நாடுகள் அடங்கிய
பிரதேசம்).
அங்கு, பல்வேறு பகுதிகளில் கண்டெடுத்த ஆசைன்கள் இரு பிரிவு கொண்டவை:
ஒன்று, வலுமிக்கது; மற்றது, பலங்குறைந்தது.
இரண்டுக்கும் பொதுவான அம்சங்கள் புலப்பட்டன: முன்துருத்திய முகம்,
அதிகம் வளராத புருவம்,
கண்ணுக்குமேல் உப்பிய எலும்பு
, முகவாய்க்கட்டை இல்லாமை, பெரிய கடைவாய்ப் பற்கள். மூளை சுமார்
500 கன
செ. மீ. அளவு; (இக்கால மனிதனுக்கு சராசரி
1400 கன செ.மீ. ). மூளையளவும் உடல் வீதங்களும்
(proportions) அவை பெருங்குரங்கு எனக் காட்டின. நிமிர்ந்த நிலையில் இரண்டு கால்களால் நடந்த
போதிலும் மரந்தொற்றும் பழக்கத்தை அவை கைவிடவில்லை.
முதற் பிரிவு , சைவம் ; அது 10 ல/ஆ/மு அற்றுப்போய்விட்டது.
மற்ற பிரிவு ஆசைன்கள் ஊனும் உண்டன; இவற்றுள் ஒரு பகுதி, காட்டினின்று வெளியேறி, ஆற்றோரமாய்
நடந்து, புல்வெளிகளை அடைந்தது; கல்லாயுதங்களை உருவாக்கிய முதலினம் இதுவே
. கல் கருவிகள் ஆப்ரிக்காவில் மூன்று இடங்களில் கிடைத்தன:
1
-- எத்தியோப்பியாவில் கடா
கோனா (Kada Gona) எனுமிடம்;
. 2 -- அந் நாட்டிலேயே ஒமோ
(Omo) என்ற வேறிடம்;
3
-- கென்யாவில் ட்டூர்க்கானா
(Turkana ) எரியின் கிழக்குப் பகுதி.
இவை 20 ல/ஆ/மு பயன்பட்டவையாம். இன்னமும் மனிதராகிவிடாத பெருங்குரங்குகளுக்கு சிந்தனை
வளர்ச்சி ஏற்பட்டமைக்கு இந்த
ஆயுதங்கள் தக்க சான்றுகள்.
டான்சானியா நாட்டில் ஒல்டுவாய் (Olduvai ) என்ற பிரதேசத்தில் உள்ள ஆழமான மற்றும் ஒடுங்கிய பள்ளத்தாக்கு, வரலாற்றுக்கு முற்பட்ட இனங்களின் எலும்புக்
கூடுகள் பலவற்றை வழங்கிப் புகழுற்றது. லூய்
லீக்கி (Louis Leakey ) - 1903-1972 - அவருடைய மனைவி மேரி -1913-1996 - ஆகிய இரு பிரபல ஆங்கில
மானிடவியலார்கள் அங்கு அகழ்ந்து ஆசைன் கூடுகள் சிலவற்றை வெளிக்கொணர்ந்தனர். இவை இரண்டாம் வகையைச் சேர்ந்தவை.
அதே இடத்தில் மேரி, ஒரு புது
மனித இனத்தின் கூட்டைக் கண்டுபிடித்தார் (1961);
இதற்கு ஹொமோ ஹெபிலிஸ் (Homo
habilis) என்பது அவர் தேர்ந்தெடுத்த பெயர்
. ஹெபிலிஸ்
= திறமைசாலி
. அதன் கைகளுக்குக் கல்லை அழுத்தமாய்ப் பற்றும் திறமை இருந்தது
. மேரியின் மகன் ரிச்சர்ட் (Richard)
அந்த இனத்தின் மேலும் முழுமையான கூட்டை அகழ்ந்தெடுத்தார் (1972 ).
18 ல/ஆ/ முந்தியது என மதிப்பிட்டனர்.
ஹொமோ ஹெபிலிஸ் 20 லட்சத்திலிருந்து 15 ல/ஆ/மு மறைந்தது.
டொனால்ட் ஜொகான்சனும் (Donald
Johanson ) அவரது பிரஞ்சியர் மற்றும் அமெரிக்கர் அடங்கிய குழுவினரும் எத்தியோப்பியாவில் நிகழ்த்திய அகழ்வில், 40% பூர்த்தியான கூடொன்றை 1974 இல் தோண்டியெடுத்தனர்
; ஆசைன்களின் வலிமை குறைந்த இரண்டாம் வகைப் பெண்ணின் மிச்சம் என்பதறிந்து வைத்த பெயர் லூசி (Lucy).
இந்தக் கண்டுபிடிப்பால், இருகால் நடை, வரலாற்றுக்குப் பெரிதும் முற்பட்ட காலத்திலேயே
பழகிவிட்டது என்று ஐயமின்றித் தீர்மானித்தனர்.
ஈராண்டுக்குப் பிற்பாடு, டான்சானியாவில், லேட்டோலி (Laetoli )
எனுமிடத்தில், (ஒல்டுவாய்க்கு 30 மைல் தொலைவு
) எரிமலைச் சாம்பலில், மனிதனுடையவை போன்ற காலடிச் சுவடுகள் பதிந்திருந்தமை தெரியவந்தது; அவை 36 ல/ஆ பழமை வாய்ந்தவை
. 1978-இல், மேரி லீக்கி ஒரே
இடத்தில் இரண்டு பேரின் அடிச்
சுவடுகளைக் கண்டார்; ஆராய்ச்சி அளித்த தகவல்கள்:
1 --- இருவர் சேர்ந்து நடந்திருக்கின்றனர்; ஒருவர் 140 செ.மீ. உயரம், மற்றவர் 120;
2 -- 50 ல/ஆ முன்பே இரு காலால் நடந்துள்ளனர்.
ட்டூர்க்கானாவின் கீழைக் கரையில் இரு மண்டை ஓடுகளும்
(1970) மேலைக் கரையில் நேரியோக்கொட்டொம் (Nariokotome) என்ற இடத்தில் ஒரு முழுக் கூடும்
(1984) கிடைத்து, நிமிர்ந்த மனிதர் ஆப்ரிக்காவில் உருப்பெற்றனர் என்பதை உறுதிப்படுத்தின.
நிமிர்ந்த மனிதர்கள் இப்போதைய மனிதர்களுக்கு மிக நெருக்கமானவர்கள்; அவர்களுள் சிலர் 1.7 மீ. உயரம் வளர்ந்தார்கள்; மூளை 775 க.செ.மீட்டருக்கும் 1250
க. செ. மீட்டருக்கும்
இடைப்பட்ட அளவுடையது; உறுதியான
முகவாய்க்கட்டை, பெரும் பற்கள், சூரிய ஒளிக்குத் தடுப்புப்போல அடர்ந்த புருவ அரண் ஆகியவை அவர்களின் சில உறுப்புகள்.
பல நூறாயிரம்
ஆண்டு தாங்கள் வசித்த சஹாராவின் தெற்குப் பாகத்தினின்று அவர்கள் புலம்
பெயர்ந்து வட ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா என வேறு பிரதேசங்களுக்குப் பரவினார்கள். ஹொமோ ஹெபிலிசைக் காட்டிலும் மேம்பட்ட தோற்றங் கொண்டிருந்த அவர்கள் நிச்சயமாக ஹெபிலிஸ் இனத்தின் வழித்
தோன்றல்கள்தான். 16 லட்ச ஆண்டிலிருந்து 2 ல/ஆ/ முன்வரை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்
.
( தொடரும் )
அறியாத பலப்பல தகவல்களுடன் அருமையான தொடர் ஐயா...
ReplyDeleteநன்றி... தொடர்கிறேன்...
பாராட்டியதற்கும் தொடர்வதற்கும் மிகுந்த நன்றி .
Deleteஅறியத் தந்தீர்கள்... அருமை...
ReplyDeleteசுவைத்துக் கருத்து அறிவித்தமைக்கு மிகுந்த நன்றி .
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
ஒவ்வொரு தகவலும் பிரமாண்டம்.... அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டுக்கும் வாக்குக்கும் மிகுந்த நன்றி .
Deleteமாந்தர் வரலாறு பற்றிய விளக்கங்கள் அருமை. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் நிமிர்ந்த மனிதன் தோன்றி அங்கிருந்து பல பிரதேசங்களுக்கும் பரவினான் என்பதன் ஆதாரங்களை இன்று தான் அறிந்து கொண்டேன். தெரியாத புது செய்திகள். தொடருங்கள்.
ReplyDeleteபாராட்டுக்கும் ஊக்கமூட்டியதற்கும் மிகுந்த நன்றி .
Deleteமனிதன் எப்போது, எவ்வாறு தோன்றினான் என்பதை பல்வேறு ஆராய்ச்சி நூல்களிலிருந்து எடுத்துத் தொகுத்துக் கொடுத்துள்ள தங்களின் அரிய சேவைக்கு
ReplyDeleteஎனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய வியப்பூட்டும் தகவல்கள்!
பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி .
Delete