நிமிர்ந்த
இனத்திலிருந்து 2 ல/ஆ/மு பரிணமித்தது ஹொமோ செப்பியன்ஸ் (Homo sapiens); செப்பியன்ஸ்
= புத்திசாலி. இதன் பிரிவுகள்
இரண்டு:
1 --- ஹொமோ செப்பியன்ஸ்
நீயெண்டெர்த்தாலென்சிஸ்
-- நீயெண்டெர்த்தால்கள்
35,000 ஆ/ முன்வரை
மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்தார்கள் என்பதை
அறிவோம்.
2 --- நவீன
ஹொமோ
செப்பியன்ஸ் (Modern Homo
sapiens) -- கிழக்காப்ரிக்காவில்
தோன்றி அக்
கண்டத்தின் வட பகுதியிலும் மேற்காசியாவிலும் ஒரு
ல/ஆ/மு
பரவினர். மேற்காசியாவில்தான், இஸ்ரேலின் கலிலீ
(Galilee) பகுதியில்,
நாசரேத் அருகில், கஃப்ஜேஹ் (Qafzeh)
குகையில், நவீனமனிதர்களின் மிகமிகத்
தொன்மையான எலும்புக் கூடுகள் அகப்பட்டன. அங்கு ஓர் இளம்பெண்ணும் அவளின்
காலடியில் ஆறு
வயதுக் குழந்தையும் புதைக்கப்பட்டிருந்தனர்.
ஏறக்குறைய ஒரு ல/ஆ பழமையான
புதையல் அது. 1933 இல், ஐந்து மனிதக்
கூடுகளும் பின்பு
1965 க்கும்
1975 க்கும் இடையில், பிரான்சு நாட்டு பெர்நார் வாந்தேர்மீர்ஷ் (Bernard Vandermeersch) எனும் தொல்வரலாற்று நிபுணரால்
பதின்மூன்றும்
அகழ்ந்தெடுக்கப்பெற்றன. வயது வந்தோரும்
குழந்தைகளுமாக
எல்லாரும்
புதையுண்டிருந்தனர்.
இந்த மாதிரி
இடுகாடுகள் பிரான்சு, இத்தாலி, மத்திய ஆசியா, பாலஸ்தீனம்
ஆகிய பிரதேசங்களில் காணப்பட்டன. இராக்கின் ஷனிடர் (shanidar) குகையில் ஒன்பது
கூடுகள் வெவ்வேறு
ஆழங்களில் கிட்டின; அவற்றுள் அதிகப் பழையதற்கு
வயது 70,000 ஆண்டு.
க்ரோ
மஞ்ஞோன் இனம், 'முற்பட்ட ஹொமோ
செப்பியன்ஸ் செப்பியன்ஸ்' என்பதையறிவோம்.
இப்போது உலகம் முழுதும் வாழ்கின்ற இனம் ஹொமோ செப்பியன்ஸ்
செப்பியன்ஸ் எனப்படுகிறது.
இதுவும் கிழக்கு
ஆப்ரிக்காவில் பிறந்தது; ஒரு லட்சத்திலிருந்து ஒன்றேகால்
லட்சம் ஆண்டுகளுக்கிடையே அந்தக் கண்டத்தை விட்டு
அது
வெளியேறியிருக்க வேண்டும்.
மனிதர்களை வெள்ளை
இனம், கருப்பினம், மங்கோலிய இனம், சிவப்பினம் எனப் பிரிப்பது இருபதாம் நூற்றாண்டுவரை
வழக்கத்தில் இருந்தது; ஆராய்ச்சி விரிவடைய அடைய,
'யாவரும்
ஓரினம், வசித்த இடம், தட்பவெப்ப
நிலை, சூழல் முதலானவற்றின் வேறுபாடும் மாறுபாடுமே
அவர்களின்
தோற்ற
வித்தியாசங்களுக்குக் காரணம்' என்பது
இறுதி முடிவாய்
ஏற்கப்பட்டுள்ளது.
சிம்பன்சி |
மானிடர்
வரலாற்றைச் சுருக்கமாகக் கூறலாம்:
ஒரு
பொது மூதாதை - பெருங்குரங்கு
அதிலிருந்து ஒரு கிளை : பரிணாமம்
உற்ற பெருங்குரங்குகள்; அதிலிருந்து கிபன், ஒராங் உட்டான், கொரில்லா, சிம்பன்சி.
மறு
கிளை: ஆசைன்கள்; அதிலிருந்து ஹொமோ ஹெபிலிஸ், ஹொமோ
இரேக்டஸ், ஹொமோ செப்பியன்ஸ்.
பற்பல
நாட்டு
அறிவியல் வல்லுநர்கள் கஷ்டம்
பாராமல், காலங் கருதாமல், கடுமையாய்
உழைத்து, ஆராய்ந்து, மனிதர் தோன்றிய வரலாற்றை
அறிந்து கூறியிருக்கிறார்கள்; அவர்கள் ஹோமரின்
இதிகாசங்களிலோ ஷேக்ஸ்பியரின்
நாடகங்களிலோ தகவல்
திரட்டவில்லை; அறிவியல் முறைப்படி, பல்லாண்டு களப்பணி செய்து, கைக்கெட்டிய பொருள்களை அளந்து, ஒப்பிட்டு, காலம் நிர்ணயித்து, ஊகித்து, கலந்தாலோசித்து, விவாதித்து, முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் பின்காணும் வெவ்வேறு அறிவியல்
துறைகளில் நிபுணர்கள்:
-- மண்ணூல். Geology
--அகழ்வு
ஆய்வியல். Archaeology
--புதைபடிவ
ஆய்வியல் . Palaeontology
-- மானிட
இயல். Anthropology
--விலங்கு இயல்.
-- தாவர
இயல்.
- இயற்கை
இயல்.
-- உடற்கூற்று இயல். Anatomy
-- மரபணு இயல். Genetics
-- வேதியியல்.
Chemistry
-- இயற்பியல்.
Physics
--- புவி
இயல். Geography
ஆராய்ச்சிகள்
தொடர்கின்றன: 29 - 5 - 15 இந்து ஆங்கில
நாளிதழில் ஒரு செய்தி:
"வடக்கு
ஸ்பெய்னில் 43 ல/ஆ/முந்தைய, கிட்டத்தட்ட
முழுமையான, எலும்புக் கூடொன்று கிடைத்துள்ளது; 13 மீட்டர்
செங்குத்து ஆழத்தில் மேற்கொண்டும் கூடுகள்
காணப்படுகின்றன எனவும் குறைந்தது
28 இருக்கலாம் எனவும் ஆய்வர்கள்
தெரிவித்தார்கள்."
ஆகவே, புதுக்கருத்து தோன்றலாம்,
பழையது, தவறு எனக் கைவிடப்படலாம் அல்லது
உறுதியுறலாம். எதுவானாலும் அடிப்படைக் கண்டுபிடிப்பான 'குரங்குதான்
மனிதனின் மூலம் ' என்பது
மாறாது.
மனிதனுக்கும்
சிம்பன்சிக்கும் பொதுவான மூதாதை பற்றிய
முடிவு நன்கு
வேரூன்றிவிட்டது; 1960 இலிருந்து செய்த டி.என்.ஏ (DNA) மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் மனிதர்களும்
சிம்பன்சிகளும்
ஒரே குடும்ப உறுப்பினர்கள்
என்று உறுதிப்படுத்தியுள்ளன.
பழங்காலத்தைக் குறித்த எல்லாக் கோட்பாடுகளும்
எலும்பாராய்ச்சியால்
மட்டுமே பெறப்பட்டவையல்ல; மரபணு, தட்ப வெப்பம், சுற்றுச் சூழல், பிற விலங்குகள்
முதலானவற்றின் ஆய்வாலுந்தான். புதையெலும்பு
ஆய்வர்
எலும்புகளைத் தேடுகிறார்; எங்கே தோண்டவேண்டும் என்பதை
ஊகிக்கிறார் மண்ணூலார்;
அகழ்வர்கள் தோண்டுகிறார்கள்; வேதியியலாரும் இயற்பியலாரும்
எலும்புகளின் காலத்தைக் கணக்கிட,
மரபணு இயலார் செல்களில்
பரிணாம
வரலாற்றைக் காண்கிறார்.
பரிணாமம் பற்றிய கொள்கை
பலமாக நிலைபெற்றுவிட்டது.
மனிதப் பரிணாமம்
என்பது விலங்குத் தன்மை, கரடுமுரடு ஆகியவற்றிலிருந்து மேம்பாடு, பண்பாடு, நாகரிகம் நோக்கிய படிப்படியான
முன்னேற்றம் அல்ல;
வாழும் வழிகளைத் தேடி
மேற்கொள்ளப்பட்ட முடிவற்ற முயற்சிகள், எண்ணற்ற மற்றும் திரும்பத்
திரும்ப நடந்த சோதனைகள் (experiments) ஆகியவற்றின்
விளைவே பரிணாமம்; சாத்தியமான ஒவ்வொரு
திசையிலும் நிகழ்ந்த அந்தச் சோதனைகளே வாழ்வில்
நாம் பார்க்கிற
வேறுபட்ட தோற்றங்களுக்குக்
காரணம்.
வாழும்
உயிர்கள்
தலைமுறைக்குத் தலைமுறை பெரிய அளவிலோ சிறிய
அளவிலோ மாறிக்கொண்டிருக்கின்றன.
காட்டு: இரு தலைமுறைக்கு
முன்பு சிறுவர்களுக்கு
28 பற்கள்
இருந்தன; வாலிபத்தில் 4 கடைவாய்ப்
பற்கள் முளைத்தன; ஆக மனிதனுக்கு 32 பற்கள் எனக்
கணக்கிட்டோம்.
இன்றைய இளைஞர்களுக்கு அவை முளைக்காமையால் 28 தான்.
நம்
குறுகிய
ஆயுட்காலத்தில் எல்லா
மாற்றங்களையும் அறிய
முடிவதில்லை.
புறப்பொருள் வெண்பா மாலை என்றோர் இலக்கண
நூல் உண்டு; சங்க காலத்துக்குப் பிற்பட்ட அதில்,
உதாரணத்துக்காகப் பாவொன்று
காட்டப்பெற்றுள்ளது:
கல்தோன்றி
மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி
மூத்த குடி.
என்று தமிழ்க் குடியின்
பழமையை அது பறைசாற்றுகிறது. பிறக்கும்போதே
வாள்
வைத்திருந்ததாம்! இடுப்பில் தொங்கியதா அல்லது கையில்
பிடித்திருந்ததா என்பது சொல்லப்படவில்லை.
புலவரின் கற்பனை
எனப் பாராட்டலாமே
யொழிய வரலாற்று
உண்மையெனக் கொண்டு ஆதாரமாய்க் காட்டுதல்
தவறு. முன் தோன்றியது ஆப்ரிக்கக்
குடியே! அதுவும் மண்
தோன்றாக்காலத்தில் அல்ல; கல் தோன்றி, மண் தோன்றி, மணல் தோன்றி, ஒரு செல்லுயிர்
தோன்றி, பல செல்லுயிராய்ப்
பரிணமித்து, கணக்கற்ற உயிரினங்கள் உருவாகிப் பெருகிப்
பரவிப் பாரை
நிறைத்ததற்குப் பல
நூறாயிரம் ஆண்டுக்குப்
பின்னர்! எடுத்துக்காட்டாக,
பாம்புகள் ஊரத்
தொடங்கியது 13 கோடி
ஆண்டுகளுக்கு முன்பு; மானிடர் வந்து சில
லட்ச வருடங்களே ஆயின.
முற்றிற்று.
++++++++++++++++++++++++++
தங்களுடைய தொடர் கட்டுரைகள் மூலம் மனிதகுல வரலாறு பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொண்டேன். ஒரு ஆய்வுக்குப் பின்னால் எவ்வளவு துறைகள்.. எவ்வளவு ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என்று அறியும்போது வியப்பும் மலைப்பும் மேலிடுகின்றன. தகவல்களை அனைவரும் இலகுவாய்ப் புரிந்துகொள்ளும் வண்ணம் மிக எளிமையாகத் தந்தவிதமும் இதற்கான தங்கள் உழைப்பும் மிகுந்த பாராட்டுக்குரியது. மிக்க நன்றி தங்களுக்கு.
ReplyDeleteபாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி . ஆய்வாளர்கள் தனித்தோ கூடியோ மெய்வருத்தம் பாராமல் பல ஆண்டுகள் அரிதில் முயன்று புதிய உண்மைகளைக் கண்டுபிடித்து நம் அறிவை மேம்படுத்தியிருக்கின்றனர் ; புதுச் சாதனங்களை உருவாக்கி நம் வாழ்க்கை வசதிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் . அவர்களை நாம் அடிக்கடி நினைவு கூர்ந்து நன்றி செலுத்த வேண்டும் .
Deleteஐயா வணக்கம்.
ReplyDeleteநிறைய தகவல்களுடன் கூடிய பதிவு.
“கல்தோன்றி மண்தோன்றாக் காலப்பாடல்” ஒரு போரெழுச்சிக்கான பாடல் என்பது என் கருத்து.
தமிழர்தம் வரலாற்று ப் பெருமிதத்தை அதன் மூலம் அடைவதென்பது நகைச்சுவையே.
தொடர்கிறேன்.
கருத்துரைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி . அந்தப் பாடல், போர்க் களத்தில் , பகைவனிடம் ஒரு வீரன் தன் குடிப்பெருமையைப் பெருமிதத்தோடு எடுத்துக்கூறுவது. நீங்கள் சொல்வதுபோல் போரெழுச்சிப் பாட்டும் ஆம் .
Deleteவியக்க வைக்கும் மாற்றங்கள் தான் ஐயா... தொடர்கிறேன்...
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கும் தொடர்தலுக்கும் மிக்க நன்றி
Deleteமனித வரலாறு பற்றிய பல அரிய தகவல்களைத் திரட்டிக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி. இவ்வளவு நாட்களும் பரிணாம வளர்ச்சி என்பதை விலங்குத்தன்மையிலிருந்து மேம்பாடு, நாகரிக வளர்ச்சி என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். வாழும் வழிகளைத் தேடி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சோதனைகள் ஆகியவற்றின் விளைவு தான் பரிணாமம் என்ற உண்மையை இன்று தான் அறிந்தேன்.
ReplyDeleteஇது போலவே மாந்தரின் இனப்பிரிவுகள் அனைத்தும் ஓரினம், வசிக்கும் இடம் தட்பவெப்ப நிலையும் தான் தோற்ற வேறுபாடுகளுக்குக் காரணம் என்று தற்போது எடுக்கப்பட்டிருக்கும் இறுதி முடிவு பற்றியும் இன்றே தெரிந்து கொண்டேன்.
தமிழர் தான் மூத்த குடி என்பதற்குப் பலரும் எடுத்துக்காட்டாகக் காட்டும் புறப்பொருள் வெண்பா மாலை பாடலைப் பற்றி விளக்கி, மூத்த குடி கிழக்காப்பிரிக்கக் குடியே என்று விளக்கியதற்கும் மிகவும் நன்றி. புதிய செய்திகள் பலவற்றைத் தெரியப்படுத்தும் அருமையான இத்தொடருக்குப் பாராட்டு!
பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
Deleteகுரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றால் இன்னும் குரங்குகளும் இருக்கின்றனவே. பரிணாம வளர்ச்சி அவை பெற வில்லையா.?
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . பரிணாமம் அடையாத உயிரினம் இல்லை . இன்றைய குரங்குகள் ஒரு லட்சம் ஆண்டுக்குமுன் எப்படி இருந்தன என்பது நமக்குத் தெரியாது ; சில லட்சம் வருடங்களுக்குப் பின்பு எவ்வாறு மாறும் என்பதும் அறியோம் . ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடிய வால் இப்போது சிம்பஞ்சிக்கு இல்லை . சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ள முடியாத உயிரினம் அழிந்துவிடும் .
Deleteஅரிய தகவல்களை எளிய முறையில் தொகுத்துத் தந்தமைக்கு நன்றி. படிப்பதற்குப் போதிய நேரமில்லாத என்னைப் போன்றோருக்கு நிறைய நூல்களைப் படித்த
ReplyDeleteமனநிறைவைக் கொடுத்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
பாராட்டுரைக்கு மிகுந்த நன்றி . ஊக்கம் பிறந்துள்ளது . முடிந்தவரை எழுதுவேன் .
Deleteஅய்யா வணக்கம்,
ReplyDeleteதங்கள் தளம் இன்று தான் அறிந்தேன், அரிய தகவல்கள், நானும் என் பக்கத்தில் தமிழ் நாடகம் வளர்ந்த கதை என்றொரு பதிவிட்டு இருந்தேன், அதில் இது குறித்து எழுதியுள்ளேன். நேரம் இருப்பின் வாசியுங்கள்.
நன்றி.
புது வருகை : அன்புடன் வரவேற்கிறேன் .கருத்துரைக்கு மிக்க நன்றி . அவசியம் வாசிப்பேன் உங்கள் தளத்தின் முகவரி தெரிவியுங்கள் .
Delete