Thursday, 17 September 2015

புத்திசாலி


   

  கல்வியால்  அறிவு  பெருகும்  என்பது  பொதுவான  உண்மை;  ஆனால்  கல்லாரிடமும்  இயற்கையாகவே    நுண்ணறிவு  காணப்படலாம்;   படிக்காத  மேதைகளும்  பாரினில்  உண்டு.

     ஒரு படகோட்டி   எந்தச்  சிக்கலான  பிரச்சினைக்கும்    தீர்வு  காணக்கூடிய அறிவுச்  சாதுரியம்  உள்ளவன் என்று  பெயரெடுத்திருந்தான்;   அவனது  புகழ்  அக்கம்பக்கம்  பரவி   அரசனுடைய  செவிக்கும்  எட்டியது.

    சோதித்துப்  பார்க்க   விழைந்த  அவன்   ஒரு  நாள்பரிவாரஞ் சூழயானை  ஊர்ந்து  ஆற்றங்கரையை  அணுகினான்படகோட்டிக்குத்   தன்  கண்களை  நம்ப   இயலவில்லைகடவுளுக்கு  நிகராக  மக்கள்  போற்றும்    மன்னனை  இதோஇப்படிஇவ்வளவு  அருகில்  காண்பதென்றால்தரையில்  விழுந்து வணங்கி  எழுந்து   பய  பக்தியுடன்  கைகட்டி  நின்றான்.

     இறங்கி வந்த  வேந்தன் ,  " நீ  புத்திசாலி,   எந்தப்  பிரச்சினை  தீர்வதற்கும்  வழிகாட்டக்கூடியவன்   என்று  கேள்வியுற்று  வந்திருக்கிறேன்என்றான்.

    "அரசரே,   நான்  படிக்காதவன்ஏதோ  எனக்குத்  தோன்றுகிற  யோசனையைச்  சொல்லுவது  உண்டு.

     --  அதைச்  சோதிக்கத்தான்  வந்தேன்.   இந்த  யானையின்  எடை  என்ன  என்பதை  உன்னால்  சொல்ல முடியுமா?

     -- முடியும், அரசே.

    --  முடியுமா?   எப்படி  நிறுப்பாய்?

    --  எந்தத்  தராசிலும்  நிறுக்க  முடியாதுவேறு  வழி  இருக்கிறதுமன்னரே.

    --  சொல்  அதை.

    --  யானையைப்  படகில்  ஏற்றிக்  கொஞ்ச  தூரம்  போய்  நிறுத்தி   அந்த  இடத்தில்  கம்பு  நட்டு அடையாளம்  வைத்துக்கொண்டுதண்ணீரில்  எந்த  அளவு  படகு  மூழ்கியிருக்கிறது  என்பதைக்  கோடு  போட்டுக்   குறித்துக்  கொள்ளலாம்அப்புறம்   நிறைய  செங்கல்லைப்    படகில் நிரப்பி   அந்த  இடத்துக்கு  ஓட்டிப் போய்க்  கோடுவரை  அமிழச் செய்யலாம்;   செங்கல்  எண்ணிக்கையை  ஒரு   கல்லின்  எடையால்  பெருக்கினால்   யானையின்  எடை  தெரியும்  என்று  நினைக்கிறேன், அரசரே"

       வியப்பில்  ஆழ்ந்த  வேந்தன்,  " என்ன  ஒரு  நடைமுறை   அறிவு!"  எனப்  புகழ்ந்து, "நீ  உண்மையிலேயே  பெரிய  புத்திசாலிதான் "   எனக்  கூறித்  தக்க  சன்மானம்  வழங்கி  மீண்டான்.


                    ---------------------------------------------------------------

8 comments:

  1. Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. படகோட்டி உண்மையிலேயே பட்டறிவு உள்ளவந்தான் என் தளத்தில் விநாயகச் சதுர்த்தி யை முன்னிட்டு ஒரு பதிவு. வருகைதர வேண்டி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. அரசனே வியந்து தேடிவந்து பார்க்கும் வண்ணம் அதிபுத்திசாலியான படகோட்டி, தன்னுடைய திறமைகண்டு தற்பெருமை கொள்ளாது, பணிவுடன் வெகு இயல்பாக அரசனின் ஐயத்தைப் போக்கியமை போற்றத்தக்கது. இதுவரை அறிந்திராத கதை இது. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  4. சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் வாழ்கிற மக்களிடமும் அறிவு , பணிவு முதலிய நற்பண்புகள் உண்டு என்பதை அறிவிக்கும் கதை . கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

    ReplyDelete
  5. படகோட்டியின் பட்டறிவை நினைத்து வியப்பாயிருக்கிறது. இதுவரைக் கேட்டிராத நல்லதொரு கதையை நினைவில் வைத்துப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஊக்கமூட்டும் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி.

      Delete