Thursday, 11 February 2016

அஞ்சறைப் பெட்டி




1   --  சிறுவர்களுக்கான தேவதைக் கதைகள் ஆங்கிலத்தில் பல உண்டு.   அவற்றுள் சிண்டரெல்லா  (Cinderella),  தூங்கும் அழகி (Sleeping Beauty) ஆகிய  இரண்டுக்கும்  மூலம்  பிரஞ்சு.

 ஷார்ல் பெரோ (Charles Perrault) என்னும் 17-ஆம் நூற்றாண்டு  எழுத்தாளர் இயற்றிய சாந்த்ரியோன் (Cendrillon), லாபேல்    புஆ  தொர்மான்  (La Belle au bois  dormant) ஆகியவை  அந்த மூலப்  படைப்புகள்.

2 --  கிரேக்க ஈசாப்பின்  கதைகள்தமிழ் உள்படபல்வேறு மொழிகளில்  பெயர்க்கப்பட்டு, பாரெங்கும் பரவியுள்ளன; காக்கையும்  நரியும் (பாட்டி வடை சுட்ட கதை), பொன்முட்டை  இட்ட வாத்துஆமையும்  முயலும்  முதலானவை   பிரசித்தம்.

   அந்த உரைநடைக்  கதைகளை லத்தீன் கவிஞர் ஃபேத்ருஸ் (Phaedrus) செய்யுள் வடிவில் மொழிபெயர்த்ததுடன்புதுக்கதைகளும் இயற்றி  சேர்த்தார். அவற்றுள்  ஒன்று, 'ஓநாயும் நாயும்';  இதன் மையக்கருத்தைத் தழுவிசுப்ரமணிய பாரதியார், 'ஓநாயும் வீட்டு நாயும்' என்னுந் தலைப்பில்  உரைநடையாய்த் தந்துள்ளார்; மூலத்தைக் குறிப்பிடாமையால்அவருடைய  சொந்தப்  படைப்பு என்று   தவறாக  நம்ப  இடமேற்பட்டுவிட்டது.

3 --- சேடிஸ்ம்  (sadism)  பிறரைத் துன்புறுத்தி, அவர்கள் படுந்துயரைக்  கண்டு பரவசமடையும்   கொடிய   மனப்பான்மை.

  18- ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்த மர்க்கீ தெ சாத் (Marquis de Sade) என்ற பிரபலமாகாத பிரஞ்சு எழுத்தாளர் அத்தகைய குரூர மனம் படைத்தவர். உடற்பசி தீரப் பெண்களைப்  பல விதமாய்  இம்சித்து இன்புற்றவர்அவரது  பெயரிலிருந்து பிறந்த பிரஞ்சு சொல் சதீஸ்ம்  (sadisme). அவரது கொடுமை அவரை சிறைக்கு அனுப்பிற்று.   மர்க்கீ என்பது  பிரஞ்சு  பிரபு   பட்டம்.

   அதற்கு  எதிர்சொல் மசொக்கிஸ்ம் (masochism). ஆஸ்ட்ரிய (Austria) நாட்டு (ஆஸ்த்ரெலியா அல்லமசோக் (Masoch) 19-ஆம் நூற்றாண்டுக்காரர்; இளமையில் சில புதினங்கள் இயற்றிய அவர்பின்பு மனக் கோளாறுக்கு ஆளாகிதம்மைக்  கொடுமைப்படுத்தும்படி பெண்களிடம் கோரிஅவர்கள்   இழைத்த  துன்பத்தில்  இன்பங் கண்டார்.

4 --- அரபி கடலில் உள்ள லட்சத்தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றுபெயரைப்  பார்த்து, ' யப்பாலட்சம்  தீவுகளா?' என மலைக்காதீர்கள். பெயர்தான் அப்படிமொத்தம்  27 தான், அதிலும் 17 காலி.  

    பூர்விகப் பெயர் லக்கடீவ் (Laccadive); 1973-இல் லக்ஷத்வீப் (Lakshadweep)  எனப்  பெயர்  மாறியது.

5- ஒரு வயதுக்கு உட்பட்ட மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் (பெரும்பாலும் பெண்) தூங்கும்போது இறந்துவிடுவதுண்டு; கட்டில் இறப்பு (cot death) எனப் பேச்சு வழக்கிலும் சிட்ஸ் (SIDS-Sudden Infant Death Syndrom) என  மருத்துவ மொழியிலும் அழைக்கப்படுகிற இந்தத் துயர நிகழ்வுக்குக்  காரணம்   தெரியாமையால், மருத்துவப்  புதிராகக் கருதப்படுகிறது.

     அப்படி ஒரு  பெண் குழந்தை ஏணையில் இயற்கை எய்தியமை எனக்குத்  தெரியும்.

   ///////////////////////////////////////


     

17 comments:

  1. குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல் களஞ்சியம் ஐயா
    தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நலம் பெற வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. புதிய வரவாகிய உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன் .உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மிகுந்த நன்றி .

      Delete
  2. குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல் களஞ்சியம் ஐயா
    தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் நலம் பெற வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  3. ’அஞ்சறைப் பெட்டி’ என்ற தலைப்பில் கொடுத்துள்ள ஐந்து செய்திகளும் வியப்பளித்தன. பகிர்வுக்கு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  4. இன்று 11.02.2016 தங்களுக்கு 90-வது பிறந்தநாள் என அறிய முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.

    தங்களுக்கு என் அன்பு வணக்கங்களும் நமஸ்காரங்களும்.

    தாங்கள் மேலும் உடல் ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .

      Delete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், அப்பா! வியத்தகு செய்திகளை வெளியிட்டுள்ளிர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி .பாராட்டுக்கும் நன்றி .

      Delete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸார். வணங்குகிறேன்.

    அரிய தகவல்களுடன் சிறிதாகவும் (படிக்க வசதி) சிறப்பாகவும் இருக்கிறது பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி .

      Delete
  7. தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் வணக்கமும் ஐயா...
    நல்ல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி .

    ReplyDelete
  9. சிந்த்ரெல்லா கதையின் மூலம் பிரெஞ்சு என்று இன்று தான் அறிந்தேன். சாடிசம் எதிர்ச்சொல் மசொக்கிசம் பற்றிய செய்தியும் எனக்குப் புதிது. சுவையான செய்திக்கோர்வை!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  10. புதிய செய்திகள் அறிந்தேன் ஐயா!பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .

      Delete