நூல்களிலிருந்து - 9
1994-2014 காலக்கட்டத்தில், 'காலச்சுவடு' பிரசுரித்திருந்த 29 கட்டுரை அடங்கிய நூல், 'தமிழ் நவீன
மயமாக்கல்' என்னுந் தலைப்புடன், டிசம்பர் 2014-இல் வெளியாகியிருக்கிறது.
28-ஆம் கட்டுரை ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவரைக் கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எடுத்த பேட்டி. (2005)
![]() |
ஜார்ஜ் எல். ஹார்ட் |
அந்த அமெரிக்கர், கலிபோர்னியா
பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்
பேராசிரியராய்ப் பணியாற்றியவர். பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில்
பெயர்த்தவர்.
1. The Poems
of Ancient Tamil --1975;
2 -- The Poems of Tamil Anthologies - 1979;
3 --The Forest Book
of the Ramayana of Kampan -1988;
4 -- The Four Hundred Songs of War and
Wisdom - 1999.
இந்திய அரசின்
பத்மஶ்ரீ பெற்ற அவரது செவ்வியிலிருந்து சில
பகுதிகளைப் பகிர்கிறேன்.
கட்டுரையின் தலைப்பு:
பழந்தமிழ்
என்பது பெருஞ்சொத்து
கிட்டத்தட்ட 3500 ஆண்டுக்கு முன்பு பாரசிகத்திலிருந்து இந்தியாவுக்குக்
குடிபெயர்ந்த இந்தோ - ஐரோப்பிய மொழி பேசிய ஓர் இனந்தான் ரிக் வேதத்தை இயற்றியது; இந்தியாவில் பலர், ஆரியரின் வருகை அப்படியல்ல
என்று வாதாடினாலும், மொழியியல்
ஒப்பீடுகளின் மூலம், ரிக் வேதத்தைப் பாடியவர்கள்
இந்தியாவில் தோன்றியவர்கள் அல்ல என்பதை நூறு சத விகிதம் நிரூபிக்க முடியும். வேறு இந்தோ- ஐரோப்பிய மொழி பேசிய ஆதி
நாகரிகங்களை, கிட்டத்தட்ட வேத காலத்து மக்களுடைய மொழிபோல ஒன்றைப் பேசிய ஈரானிய நாகரிகம் உட்பட,
ஆராய்வோமானால், நாம் வர்ணம் என்றும் சாதி என்றும் ஒன்றைக் காண
முடியாது; ரிக் வேதத்தில்கூட
சூத்திரர் என்ற வார்த்தை ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே வருகிறது; நாளாவட்டத்தில் நான்கு
வர்ணங்களென்பது ஸ்திரமானது; ஐந்தாவதாய்ப் பஞ்சமரும்
சேர்த்துக்கொள்ளப்பட்டது.
சங்க இலக்கியங்களில் சாதிப் பிரிவுகளின் நிலைமை
துலக்கமாய்க் காட்டப்பட்டிருக்கிறது; அடிமட்ட தலித் இனத்தினரிடையே
பல்வேறு பிரிவுகள், இன்றுபோல்,
அன்றும் இருந்திருக்கின்றன; இவற்றை
வைத்துக்கொண்டு பார்க்கும்போது சாதிப் பாகுபாடு ஆரியர்களால் திணிக்கப்பட்டது என்றோ
ஓர் ஆரிய அமைப்பின் மூலம் உருவானது என்றோ எண்ண இடமில்லை; ஆதி ஆரியர்களுக்கு
இடையில் அப்படியான ஓர் அமைப்பும் இருந்தது
கிடையாது. என் எண்ணம் என்னவென்றால்,
சாதி என்பது ஆதியிலிருந்த
ஒரு தென்னாசிய வாழ்வுமுறை, நேப்பாளத்திலிருந்து இலங்கைவரை. ஆரியர்களுடைய வருகைக்குப்
பிறகு வர்ண வேறுபாடு படிப்படியாய் வளர்ந்ததற்குக்
காரணம் அவர்கள் வந்தபோது ஏற்கெனவே அங்கே
கண்ட சாதி வழக்கங்கள்தான்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் நகர அமைப்புகளில் ஒவ்வொரு
துறையில் வேலை செய்பவர்களுக்கும் ஒவ்வொரு
பகுதி ஒதுக்கப்பட்டிருந்ததைப் பல
குறிப்புகள் சொல்கின்றன; சாதி அமைப்பு
இருந்ததையே இவை உறுதிப்படுத்துகின்றன; இன்னொன்று, இலங்கைத் தமிழரிடையிலும் சாதி அமைப்பு தீவிரமாய் இருந்திருக்கிறது; ஆனால் அங்கே பிராமணர்கள் மிகக் குறைவு.
சங்க இலக்கியம் உடனடியாய் வாயினால் பாடிய பண்புகளைக்
கொண்டிருக்கவில்லை; வாய்ப்பாடல்களைப் போலி செய்து எழுதி உருவானவை. திரும்பத் திரும்ப உபயோகிக்கும் வார்த்தைத் தொடர்களாலும் எடுத்துக்கொண்ட பொருள்களாலும்
அது தெரியவரும். பழந்தமிழ் என்பது
பெருஞ்சொத்து; இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்
ஆங்கிலத்தில் செலவிடும் அதே அளவு நேரத்தைப் பழந்தமிழ் இலக்கியங்களில் செலவிட்டால் அவர்களுடைய
எழுத்தாற்றல் பலமடங்கு உயரும் என்பது என்
கருத்து."
=================================
(படம் உதவி - இணையம்)
வழக்கம் போல பல்வேறு தகவல்களை மிகவும் ஆச்சர்யமாக எடுத்துச்சொல்லியுள்ள இனிய பகிர்வு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete//பழந்தமிழ் என்பது பெருஞ்சொத்து; இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் செலவிடும் அதே அளவு நேரத்தைப் பழந்தமிழ் இலக்கியங்களில் செலவிட்டால் அவர்களுடைய எழுத்தாற்றல் பலமடங்கு உயரும் என்பது என் கருத்து.//
தங்களின் இந்தக் கருத்து, இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் பரிசீலனை செய்ய வேண்டியவைகளே.
பாராட்டிப் பின்னூட்டம் இட்டமைக்கு என் மனப்பூர்வ நன்றி .
Delete"இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் செலவிடும் அதே அளவு நேரத்தைப் பழந்தமிழ் இலக்கியங்களில் செலவிட்டால் அவர்களுடைய எழுத்தாற்றல் பலமடங்கு உயரும் என்பது என் கருத்து."
ReplyDeleteதமிழில் எழுதும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து. இவரைப் பற்றி இன்று தான் நான் அறிகிறேன். சாதிப்பாகுபாடு ஆரியரின் வருகைக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதும் புதிய செய்தி தான். பகிர்வுக்கு மிகவும் நன்றி.
சங்க இலக்கியங்களில் சில வகைத் தொழிலாளர்களை இழிவான பிறப்புடையவர்கள் என்று தாழ்த்திக் கூறலுண்டு .ஆரியரது தாக்கம் எனத்தான் நம்புகிறோம் .வேறு ஆய்வாளர்களின் கருத்து தெரிந்தால் சரியான முடிவுக்கு வரலாம் . பின்னூட்டத்திற்கு உளப் பூர்வ நன்றி .
Deleteசங்க இலக்கியங்களில் சில வகைத் தொழிலாளர்களை இழிவான பிறப்புடையவர்கள் என்று தாழ்த்திக் கூறலுண்டு .ஆரியரது தாக்கம் எனத்தான் நம்புகிறோம் .வேறு ஆய்வாளர்களின் கருத்து தெரிந்தால் சரியான முடிவுக்கு வரலாம் . பின்னூட்டத்திற்கு உளப் பூர்வ நன்றி .
Deleteமிகவும் சிறப்பான ஒரு பகிர்வு...
ReplyDeleteதமிழில் எழுதுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து அடங்கி பகிர்வு.
சிறப்பு எனப் பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றி .
Deleteசிறப்பு எனப் பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றி .
Deleteவேதங்களை இயற்றியவன் நான் என்னும் பொருளுடன் கீதையில் வருகிறதே பலவித ஆராய்ச்சியாளர்கள் ஏன் ஒரு ஒத்த கருத்துக்கு வர முடிவதில்லை என்னும் சந்தேகம் வளர்கிறது பழந்தமிழ் ஒரு பெருஞ்சொத்து என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.ஆனால் ......தமிழ் மட்டுமே தொன்மை வாய்ந்தது என்பதே நிரடுகிறது பல எண்ண ஓட்டங்களுக்கு இட்டுச் செல்லும் பதிவு பாராட்டுகள் ஐயா
ReplyDeleteநீங்கள் உரைத்ததுபோல் ஆய்வாளர்கள் ஒருமித்த கருத்தைக் கூறவில்லை . தமிழ் மாத்திரமே தொன்மையானது அல்ல; சீனமொழி , லத்தீன் , கிரேக்கம் ,பாலி முதலானவையும் பழம் பெருமை வாய்ந்தவை . உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .
Deleteஒரு அமெரிக்கர் வாயால் தமிழின் சிறப்பைக் கேட்க இன்னும் பெருமையாக உள்ளது. தமிழ் எழுத்தாளர்கள் குறித்த அவரது கருத்து பெரிதும் ஏற்கத்தக்கது.புதியதொரு நூலறிமுகத்துக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteமறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டா ரதைவணக்கஞ் செய்தல்வேண்டும் .
என்றார் பாரதி .
அது எவ்வளவு உண்மை !
பெருமையாய் இருக்கிறது. பழந்தமிழ் பெருஞ்சொத்து தான். சந்தேகமில்லை.
ReplyDeleteநன்றி
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகுந்த நன்றி . மொழிப் பற்றுள்ள யாவர்க்கும் பெருமைதான் .
Deleteபெருமையாய் இருக்கிறது. பழந்தமிழ் பெருஞ்சொத்து தான். சந்தேகமில்லை.
ReplyDeleteநன்றி