Tuesday, 17 January 2017

வல்லவனுக்கு வல்லவன் - 3


காட்சி - 4                                                                                 
இடம்: வீடு.
பாத்திரங்கள் --  திபோபாத்லேன்,   கீய்மேத்.                               
திபோ -- வழக்குரைஞர் ஐயா!

பாத்லேன் -- மறுபடியும் வந்துவிட்டார்.

கீய்மேத்.  -- இல்லை, வேறு ஆள்.

பாத்லேன் -- கர்த்தர் உன்னைக் காக்கட்டும்; என்ன விஷயம்?

திபோ - சங்கடத்தில் இருக்கிறேன்; நீங்கள் உதவ வேண்டும். என் எஜமானர் வழக்கு போட்டிருக்கிறார்; அவருடைய ஆடுகளை ரொம்ப காலமாக மேய்த்துப் பராமரித்து வந்தேன்ஆனால் அவர் குறைவாய்க் கூலி தந்தார்.

பாத்லேன் -- யார் உன் எஜமானர்?

திபோ -- துணிக் கடைக்கார ழெரோம்.

பாத்லேன் -- ஆ! அவரா! கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. சரி, இருக்கட்டும். சொல்லு.

திபோ -- எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமா?

பாத்லேன் -- கண்டிப்பாகவழக்குரைஞரிடம் எதையும் மறைக்கக்கூடாது.

திபோ -- சில ஆடுகளை நான் கொன்று தின்றது உண்மை. அவை ஆரோக்கியமாகவும் வலுவாயும்தான் இருந்தன. பெரியம்மையால் இறந்ததாய் அவரிடம் சொன்னேன். அவர்,  "ஐயோ! நோய் ஆட்டை மற்ற  ஆடுகளோடு சேர விடாமல் நீக்கு" என்றார். நானும் அப்படித்தான் செய்தேன்ஆனால் வேறு விதமாய்: அதாவது சமைத்து சாப்பிட்டேன். இப்படிப் பல தடவை;   அவருக்கு சந்தேகம் வந்து ஆள் வைத்து ஒற்று பார்த்துக் கையும் ஆடுமாய்ப் பிடித்துவிட்டார். அவருடைய கட்சி வலுவானது என்று எனக்குத் தெரியும்;    நீங்கள் வாதாடி என்னை மீட்க வேண்டும். என்னிடம் போதுமான பணம் இருக்கிறது.

பாத்லேன் -- அப்படியா?   உன்னிடம் வசதி உண்டா? எவ்வளவு கொடுப்பாய்எதிர்க் கட்சியை நீர்த்துப் போகச் செய்து உன்னைக் காப்பாற்றினால்?

திபோ -- காசாய்த் தரமாட்டேன்வெள்ளி நாணயம் பெறுவீர்கள்.

பாத்லேன் -- அப்படியானால்நீ வென்றாய்எவ்வளவு மோசமான கேஸ் என்றாலும் என் வாதத் திறமையால் உடைத்துவிடுவேன். எத்தனை ஆடு அவரை இழக்கச் செய்தாய்?

திபோ -- மூன்று ஆண்டில் பத்துக்குமேல் இருக்கலாம்.

பாத்லேன் - அவருக்கு சாட்சி கிடைக்குமென்று நினைக்கிறாயா?

திபோ - நமக்கு ஒன்று கிடைத்தால் அவருக்கு நான்கு அகப்படும்.

பாத்லேன் -- இது நமக்குப் பெரிய பலவீனம். எனக்கு ஒரு யோசனை: நான் உன்  வழக்குரைஞர் என்பதையோ நாம் சந்தித்ததையோ காட்டிக்கொள்ளாமல் நான் மறைத்துவிடுவேன்.

திபோ -- அது எப்படி முடியும்?

பாத்லேன் -- முடியும். நீ பேசினால்,   கேள்விமேல் கேள்வி கேட்டு,   உன்னை மடக்கிக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்துவிடுவார்கள்; அதனாலே,   நீ என்ன செய்ய வேண்டுமென்றால்உன்னிடம் எந்தக் கேள்வி கேட்டாலும்,  'பே!என்பதைத் தவிர நீ வேறொன்றும் சொல்லக்கூடாது. எரிச்சல் அடைந்து உன்னைக் கீழ்த்தரமாக வைதாலும்,   நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் குற்றம் சுமத்தினாலும்,  'பே!' என்றே சொல்லுவேறு வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாதுஜாக்கிரதை! மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

திபோ-- அப்படியே சொல்லுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

பாத்லேன் --- நானே உன்னிடம் ஏதாவது கேட்டாலும் வேறு பதில் சொல்லாதே.

திபோ --  மாட்டவே மாட்டேன்நீங்கள் கற்றுக்கொடுத்தபடி,  'பே!அல்லாமல் வேறில்லை.

பாத்லேன் -- இதனால் வாதி நிலை குலைந்து போவார்நீ தப்பிப்பாய். எனக்குக்  கட்டணம் நான் திருப்தி படும்படி கொடு. என்ன சம்மதமா?

திபோ -- பே!

பாத்லேன் -- அப்படி நீதிமன்றத்தில் சொல்லுஇங்கேயல்ல.

திபோ -- கட்டணம் கொடுக்காவிட்டால் நான் மனிதனேயல்ல.

பாத்லேன் -- பத்து மணிக்கு விசாரணை தொடங்கும். நான் முன்கூட்டியே போய்விடுவேன்நீ அப்புறமாக வா. இரண்டு பேரையும் ஒன்றாக யாரும் பார்த்துவிடக்கூடாது.

திபோ -- சரிங்கநீங்கள் எனக்காக வாதாடப் போகிறீர்கள் என்பது  தெரியக்கூடாதுஅப்படித்தானே?

பாத்லேன் -- புத்திசாலி! வாதிக்கு ஓட்டம் நிச்சயம்.. நீ எனக்குக் கணிசமாகப் பணம் கொடுக்க வேண்டும்.

திபோ -- அது பற்றி சந்தேகமே வேண்டாம். 

                              (போகிறான்)

பாத்லேன் -- (தமக்குள்) மூன்று வெள்ளியாவது தருவான்.

                                           ++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

8 comments:

 1. //பாத்லேன் -- இதனால் வாதி நிலை குலைந்து போவார்; நீ தப்பிப்பாய். எனக்குக் கட்டணம் நான் திருப்தி படும்படி கொடு. என்ன சம்மதமா?

  திபோ -- பே!//

  மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. தொடரட்டும். :)

  ReplyDelete
  Replies
  1. நன்கு சுவைத்துப் பாராட்டியுள்ள உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

   Delete
 2. பள்ளியில் படிக்கும் போது இந்தக்கதை நாடகமாக நடிக்கப்பட்டு அதில் நானும் நடித்திருக்கிறேன் ஆங்கிலத்தில் இருந்தது

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ? மகிழ்ச்சி . மூலம் எது என்பதைப் பலர் குறிப்பதில்லை .விக்தோர் உய்கோவின் பிரஞ்சு புதினத்தின் ஒரு சிறு பகுதி பாடப் புத்தகத்தில் நாடகமாகத் தரப்பட்டது . அடைக்கலம் தந்த பாதிரியாரிடமே திருடியவனைப் பற்றிய கதை .மூலம் பிரஞ்சு என்பது இடம் பெறவில்லை .பின்னூட்டம் எழுதிய உங்களுக்கு என் அகம் நிறைந்த நன்றி .

   Delete
 3. கதை மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. தொடருங்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஊக்குவிக்கும் பின்னூட்டம் எழுதியமைக்கு உள்ளமார்ந்த நன்றி .

   Delete