Sunday, 7 March 2021

இரங்கல் செய்தி

இலக்கியச்சாரலில் இதுகாறும் பல்சுவையிலான பதிவுகளைப் பதிந்து உலகளாவிய வாசகர்களைப் பெற்ற திரு.சொ.ஞானசம்பந்தன் ஐயா இன்று நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார். உடலால் மறைந்தாலும் பதிவுகளால் என்றென்றும் எண்ணற்ற மனங்களில் நிலைத்திருப்பார். 

வருத்தத்துடன் இத்தகவலைப் பகிர்வோர்

ஊஞ்சல் ஞா.கலையரசி (மகள்)

கீதமஞ்சரி கீதா மதிவாணன் (மருமகள்)




Thursday, 11 February 2021

இன்னொரு பிறந்த நாள்

 


  எனது 96-ஆம் வயது இன்று (11-02-2021) தொடங்குகிறது.

  12-ஆம் அகவையில் என்னைப் பிடித்த வாசிப்புப் பழக்கம் இன்னமும் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருப்பதால் பல முதியோர்களைப் போல் பொழுது போகவில்லை என்று நான் புலம்பத் தேவை  யேற்படவில்லை. இது என் நற்பேறு.

  சென்ற ஆண்டு நின்றுவிட்ட இலக்கியச் சாரல் இனிப் பெய்யும்; பருவ நிலை சாதகமாக அமையும் காலங்களில் மட்டுமே.

****