மூன்று காட்சிகளைக்
கலித்தொகையிலிருந்து எடுத்துக் காட்டுவேன் ; பழைய இலக்கியத்தைப் படிக்க விரும்பியும் இயலாதவர்களுக்குப்
பயன்படலாம்:
பழைய அக நூல்களுள் பாலைநிலம்
வர்ணிக்கப்படுகிறது. பாலை என்றதும் சகாராவை நினைத்துக்கொள்ளாதீர்கள். தமிழகப்
பாலை, மழை இன்றி வறண்டு கிடக்கும் பகுதி; மழைவளம் பெற்றால் புத்துயிர் எய்தும்.
கலித்தொகை 10 ஆம் பாட்டின் வர்ணனையில் பொருத்தமான உவமைகள் அடுக்கி வருவது ஓரழகு:
மரங்கள் நிற்கின்றன: வறுமை வாய்ப்பட்ட
இளைஞனின் தோற்றம் போல் வாடிய கிளைகள்;
கருமியின் செல்வம் போலச்
சேர்ந்தார்க்கு நிழல் தரவில்லை; பிறர்க்குத் தீமை இழைத்துப் பழி கொண்டான் இறுதிக் காலத்தில் அவனும்
குடும்பமும் கெடுவது போன்று வேரும் கிளைகளும் வெம்பின. கொடுங்கோல் அரசனின் குடை
நிழலில் பரிதாப வாழ்க்கை நடத்தும் குடிகளைப் போல உலர்ந்துபோன மரங்களை உடைய பாலை:
பாட்டை வாசித்து ஒலியின்பம் நுகரலாம்:
வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு
நிழலின்றி
யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான்
இறுதிபோல்
வேரொடு மரம்வெம்ப ...
இதை உந்துதலாய்க் கொண்டு ஆண்டாள்
பாடினார்:
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல்
நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் ...
என்று அவர் மேகத்திடம் வேண்டினார் .
(திருப்பாவை - 4 )
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்லது ஐயா.... நன்றி...
Deletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html
வாசிக்க நேரம் கிடைத்தால் நன்றி...
ஒரு முறை எந்தப் பகிர்வுக்கும் வருவதில்லை... நட்பு தொடர்க... நன்றி....
பாலைநிலத்தின் கொடுமையைக் காட்டும் தேர்ந்த உவமைகளுடனான கலித்தொகைப் பாடலை அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDelete