Thursday, 15 October 2015

கொலம்பசின் முட்டை

  (இது   ஒரு  பிரஞ்சுக்   குட்டிக்  கதை)

கொலம்பஸ்

   அமெரிக்காவிலிருந்து திரும்பி  வந்த  பின்புகொலம்பஸ் கலந்துகொண்ட  விருந்தொன்றில்,  புதிய கண்டத்தைக் கண்டுபிடித்தது பற்றிய  பேச்செழுந்தது
 
     "அது ஒன்றும்  பெரிய சாதனை அல்லகப்பலில்  போய்க்கொண்டே   இருந்தால்  போதும்கண்டம்  எதிரில்  தெரிந்துவிடும்மேற்குத்   திக்கில்   போகும்  எண்ணம்  தோன்றி  இருக்க  வேண்டும்அவ்வளவுதான்!"

    இவ்வாறு  யாவரும்   கருத்து  தெரிவித்தனர்;   கொலம்பசை  மட்டம்  தட்டும்  பொறாமைவிருப்பம்  தெளிவாய்   வெளிப்பட்டது.

     "அப்படியா?"  என்று  வினவிய  கொலம்பஸ்ஓட்டுடன்  கூடிய  முட்டை யொன்றைக்  கொண்டுவரச்  செய்துஅதைக்  காட்டி,   "இதைஅதன்    ஒரு   முனையில்,   எந்த  ஆதாரமும்  இல்லாமல்,   நிற்க   வைக்க வேண்டும்;   உங்களுள்  யாராலாவது  முடியுமா?"  என்று  கேட்டார்.

     எல்லாரும்  முயன்று  பார்த்துத்  தோல்வியை  ஒப்பினர்.

       கொலம்பஸ்,   முட்டையின்  குறுகிய முனையைத்  தமது  பீங்கான்  தட்டின்மேல்  லேசாய்த்  தட்டினார்:    ஒரு  சிறு  குழி   உண்டாயிற்று;   நிற்க  வைத்தார்;   ஜம்மென்று  நின்றது!

     கொலம்பஸ்  புன்முறுவலுடன்   கூறினார்:  "இது  ஒன்றும்  கஷ்டம்  அல்லஆனால்  அந்த  எண்ணம்   தோன்றியிருக்க   வேண்டுமே!"


                                  ++++++++++++++++++++++

6 comments:

  1. Replies
    1. வணக்கம்
      ஐயா
      மாறுபட்ட சிந்தனை அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1
      தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
      ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
    2. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  2. உங்கள் பாராட்டுக்கும் த.ம. வாக்குக்கும் மிக்க நன்றி .

    ReplyDelete
  3. கொலம்பசின் புத்திசாலித்தனமும் பொறாமைக்காரர்களின் மூக்கையுடைத்த சாதுர்யமும் வியக்கவைக்கிறது. சாதனையாளர்களை அவ்வளவு எளிதில் சகமனிதர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு சான்று.. கொலம்பசின் முட்டை ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. உண்மை தான். சாதனை செய்த பிறகு எதுவுமே கஷ்டம் இல்லை தான். ஆனால் புதுமையான எண்ணம் தோன்ற வேண்டும். கொலம்பசின் முட்டை தத்துவத்தை ரசித்தேன். மிகவும் நன்றி!

    ReplyDelete