Monday, 9 November 2015

காலனும் கிழவரும்


             (இதுவும்  லா ஃபோந்த்தேன்  கதைதான்)

     ஒரு  முதியவர்,   நூறாண்டு  கடந்தவர்,   காலனிடம்  முறையிட்டார்:       "திடீரென வந்து உடனடியாகப் புறப்படக் கட்டாயப்படுத்துகிறாய்என்  முறியை  (உயில்இன்னம்  எழுதவில்லைபேரனுக்கு  வேலை  வாங்கித்  தரவேண்டும்வீட்டை எடுத்துக்  கட்ட வேண்டியிருக்கிறது. முன்தகவலாவது  தந்திருக்கலாமேகெடு  கொடுக்காமல்  உயிரைப்  பறிப்பது  நியாயமா?"

    காலன்  பதில்  சொன்னான்:

    "முதியவரேநான்  திடுதிப்பென்று  வரவில்லைநான்  அவசரக்காரன்  என    நியாயமின்றிப் புகார் செய்கிறீர். நீர்   நூறு  வயதைத்  தாண்டிவிடவில்லையாஉம்மையொத்த  வயதானவர் இரண்டு பேரைப் பாரிசில் காட்டும்பத்து  பேரைப்  பிரான்சில்  காட்டும்உமக்கு  நான்  முன்னெச்சரிக்கை  தந்திருக்க  வேண்டுமெனச்  சொல்கிறீர்.   நான்  எச்சரிக்கவில்லையா?   நடைஅசைவுஅறிவுஉணர்வு  எல்லாம்  படிப்படியாய்க்  குறைந்தனவேசுவை  குன்றியதுசெவி கேட்கவில்லையாவும் மங்கினஉம்  தோழர்கள்   செத்ததை  அல்லது   சாவுப் படுக்கையில்  விழுந்ததை   அல்லது   நோய்வாய்ப்பட்டதை   உம்மைக்  காணச்  செய்தேன். இவையெல்லாம்  என்ன,   முன்னறிவிப்பு   அல்லாமல்?

     போவோம் முதியவரேபேச்சில்லாமல்.   உமது  முறி  இல்லையென்றால்  நாட்டுக்கு  ஒரு  குறைச்சலும்  ஏற்பட்டுவிடாது".

       அறிவாளியைச்  சாவு   அதிரச்  செய்வதில்லைபுறப்பட  அவர்  எப்போதும்  தயார்பயணம் நெருங்கும் சமயத்தை முன்னறிவிப்புகள் மூலம்  உணர்ந்திருப்பதால்.  ஆயத்த நிலையில் இல்லாமையைக் காட்டிலும்  அறியாமை வேறில்லை.


***********************
(படம்; நன்றி இணையம்)

10 comments:

 1. மிகவும் அருமையான யதார்த்தமான நல்ல பகிர்வு.

  காலன் கடைசியாகச் சொன்ன பதில்களான மூன்று பத்திகளும் மிகச்சிறப்பாக உள்ளன, யோசிக்க வைக்கின்றன.

  நல்லவேளையாக காலன் வரும்முன் இதனை நானும் படித்து நன்கு உணர்ந்து கொண்டு விட்டேன். :)

  பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

  தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 3. அற்புதமான கவிதையை
  பகிர்ந்து அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய தீபவளித் திரு நாள்
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. காலனுக்கும் கிழவருக்கும் இடையிலான உரையாடல் மனத்தை நெகிழ்த்துகிறது.

  \\அறிவாளியைச் சாவு அதிரச் செய்வதில்லை; புறப்பட அவர் எப்போதும் தயார், பயணம் நெருங்கும் சமயத்தை முன்னறிவிப்புகள் மூலம் உணர்ந்திருப்பதால். ஆயத்த நிலையில் இல்லாமையைக் காட்டிலும் அறியாமை வேறில்லை.\\

  இந்த வரிகள் உணர்த்தும் வாழ்க்கைப்பாடம் அருமை.. நல்லதொரு கருத்துள்ள கதையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. இக்கதை உணர்த்தும் பாடம் மிகவும் சரிதான். ஆனால் என்ன தான் புறப்படத் தயாராக இருந்தாலும் முடிக்க வேண்டிய வேலைகள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. நல்லதொரு கருத்துள்ள கதையைப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!

  ReplyDelete
 6. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் நானும் மனங் கனிந்த வாழ்த்தைத் தெரிவிக்கிறேன் .

  ReplyDelete
 7. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி .பதிலுக்கு நானும் உள்ளங் கனிந்த வாழ்த்தைத் தெரிவிக்கிறேன் .

  ReplyDelete
 8. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி . என் அகங்கனிந்த வாழ்த்தை நானும் தெரிவிக்கிறேன் .

  ReplyDelete
 9. ரசித்துக் கருத்து எழுதியமைக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
 10. ஆம் , வேலைகள் எஞ்சித் தான் இருக்கும் ; முக்கிய கடமைகளைக் காலம் தாழ்த்தாமல் ஒத்திப் போடாமல் விரைந்து முடித்துவிட வேண்டும் . அதற்குப் போதிய ஆயுள் கிட்டாமல் போவதுமுண்டு . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

  ReplyDelete