Monday 6 February 2017

வல்லவனுக்கு வல்லவன் -- 5


காட்சி - 6
இடம் -- தெரு.   
பாத்திரங்கள் -- பாத்லேன்,  திபோ


பாத்லேன்-- என்னஇளைஞனே,   காரியத்தை நன்றாய் முடித்தேனா?
திபோ -- பே!
பாத்லேன் -- வழக்கு முடிந்துவிட்டது; இனிமேல், பே வேண்டியதில்லை. உனக்கு 
நல்ல யோசனை சொன்னேன், அல்லவா?
திபோ -- பே!
பாத்லேன் --- பயப்படாதே; இனி யாரும் உன்னை ஒன்றுஞ் செய்ய முடியாது. 
நன்றாய்ப் பேசலாம். என் கட்டணத்தைக் கொடு.
திபோ -- பே!
பாத்லேன் -- உன் பே தேவையில்லை; பணந்தான் தேவை.
திபோ -- பே!
 பாத்லேன் -- என்னகிண்டலா? தண்டனை கிடைக்காமல் காப்பாற்றினதற்குத் 
தொகை கொடுசீக்கிரம்.
திபோ -- பே!
பாத்லேன் -- பேசினபடி பணந் தரப் போகிறாயா, இல்லையா?
 திபோ -- பே!

                      (போகிறான்)

பாத்லேன் -- எவரையும் ஏமாற்ற என்னால் முடியும் என்று நினைத்திருந்தேன்;
என்னைவிடப் பெரிய ஆளாய் இருக்கிறான், ஆடு மேய்க்கிறவன்.

                                                   (முடிவு)

குறிப்பு: இந்த நாடகத்திலிருந்து பிறந்ததே, 'உனக்கும் பேபேஉங்கப்பனுக்கும் 
பேபே' என்ற பழமொழி; பிரஞ்சிந்தியாவில் உருவானது அது.

                                                   [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[


8 comments:

  1. //குறிப்பு: இந்த நாடகத்திலிருந்து பிறந்ததே, 'உனக்கும் பேபே, உங்கப்பனுக்கும் பேபே' என்ற பழமொழி; பிரஞ்சிந்தியாவில் உருவானது அது.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    இந்தப் பழமொழியை நான் சென்ற பகுதியிலேயே என் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்.

    நல்லதொரு முடிவு. நாடகம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் , சொல்லியிருந்தீர்கள் , உங்கள் பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. பே....
    நல்லாயிருந்தது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்துப்பாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. பள்ளியில் நாடகமாக நடித்த நினைவுகள் மீண்டும்

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . உங்களின் மலரும் நினைவுகளுக்கு நான் பயன்பட்டதில் மகிழ்கிறேன் .

      Delete
  4. உனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பே கதையின் மூலம் அறிந்தேன். நல்ல நகைச்சுவை. பகிர்வுக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete