(22-09-19 தினமணியில்
வெளியான என் குறுங்கட்டுரை)
குறிப்பு - திங்ஸ் என்பது
அச்சுப்பிழை; தின்க்கிங் என்றிருக்க வேண்டும்.
&&&&&&&
நேர்மறையா…?
விடையின் வகைகளைப்
பற்றித் தொல்காப்பியர் கூறாவிடினும் உரை எழுதிய இளம்பூரணார் உடன்படுதல், மறுத்தல் முதலான
ஆறு வகைகளைத் தெரிவிக்கிறார். நன்னூல் விதி ‘விடை எட்டு வகைப்படும்’ என்கிறது.
சுட்டு மறைநேர்
ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல்
உறுவது கூறல்
இனமொழி எனும்எண்
இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும்
பொருண்மையின் நேர்ப
(நன்னூல்-386)
கட்டுவிடை, மறைவிடை, நேர்விடை ஏவல் விடை, வினாஎதிர்
வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, இனமொழி விடை ஆகிய எட்டு விடைகள். மறை என்பது மறுத்தல்;
நேர் என்பது உடன்படுதல்; இரண்டும் எதிர்ச்சொற்கள். இவற்றை ஒன்று சேர்த்து ‘நேர்மறை’
என்னும் சொற்றொடரைப் பலரும் எடுத்தாள்கின்றனர். இது பிழையாகும்.
“தம்பி, கடைக்குப்
போவாயா?”
என்ற வினாவுக்குப்
“போவேன்” என்பது நேர்; “மாட்டேன்” என்பது மறை. யாராவது இரண்டையும் சேர்த்துப் “போவேன்,
மாட்டேன்” என்று கூறுவாரா? ‘நெகட்டிவ் தின்க்கிங்’ என்பதை எதிர்மறைச் சிந்தனை எனல்
சரி. பாசிட்டிவ் தின்க்கிங் என்பதை உடன்பாட்டுச் சிந்தனை அல்லது ஆக்கச் சிந்தனை என்று
சொல்லலாம். எனவே ‘நேர்மறை’ என்னும் சொற்றொடரை எடுத்தாள்வதை இனி தவிர்க்கலாமே!
- --- சொ.
ஞானசம்பந்தன்
அருமை... விளக்கம் சிறப்பு...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் அகமார்ந்த நன்றி .
Deleteஅருமை
ReplyDeleteவருக , வருக ! உங்கள் பாராட்டுக்கு என் அகங் கனிந்த நன்றி .
Deleteநம் பதிவுக்கு வரும்பின்னூடங்களை பார்க்கிறேன் some people say yes when they mean no
ReplyDeleteநன்றாய்ச் சொன்னீர்கள் ; மெய்தான் . உங்கள் கருத்துரைக்கு என் அகமலி நன்றி .
Deleteஅருமை. Positive thinking என்பதற்கு இரண்டு வார்த்தைகளும் பொருத்தமாகவும், அழுத்தமாகவும் பொருளை வலியுறுத்துகின்றன. மறைமொழி என்பதில் "மறை" என்பதற்கு ஒளித்து வைத்திருத்தல், மறைத்து வைத்திருத்தல் ; தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் எனும் பொருள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நன்றி.
ReplyDeleteவருக , உங்கள் கருத்துரைக்கு என் நெஞ்சுநிறை நன்றி .
Delete