நம் முன்னோர் ஆதார பூர்வமாய் வரலாறு எழுதாமை ஒரு பெரிய குறைதான்; அது பரவாயில்லை. ஆனால் அவர்களுள் சிலர் நெஞ்சாரப் பொய் சொல்லி உண்மையை அறியவொட்டாமல் குழப்பி விட்டமைதான் பெருந் தவறு. தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், ஔவையார் முதலிய படைப்பாளர் பற்பலரைப் பற்றிய புளுகு தகவல்களை அவர்கள் எழுதிப் பரப்பியிருக்கிறார்கள்.
அவற்றுள் ஒன்று, ஒட்டக்கூத்தர் - புகழேந்தி குறித்த வதந்தி. அவர்கள் இருவரும் பகைவர் எனவும் புகழேந்தியை ஒட்டக்கூத்தர் கொடுமைப்படுத்தினார் எனவும் விரிவான கதை உண்டு.
ஒட்டக்கூத்தர் 12 ஆம் நூற்றாண்டுக்காரர்; புகழேந்தி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் உறைந்து பூசலிட்டனர் என்ற புனைசுருட்டை இட்டுக்கட்டியவரும் பரப்பியவரும் நேர்மை அற்றவர்கள் என்று குற்றம் சாற்றுவது தவறாகாது.
++++++++++++++++++++++++++++++++


