Tuesday 3 January 2012

வள்ளல்கள்






பழங்காலத்தில் வாழ்ந்த வள்ளல்கள் ஏழு பேர் என்ற பொருளில் கடையெழு வள்ளல்கள் என்கிறோம். ஆனால் அப்போது புலவர்களைப் புரந்த வேறு பலரும் சங்க இலக்கியங்களுள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் கொண்கானங்கிழான்சிறுகுடி கிழான் பண்ணன்,  தோயன் மாறன்,  நல்லியக் கோடன்,  நன்னன் சேய் நன்னன்,  நாஞ்சில் வள்ளுவன்,  பிட்டங்கொற்றன்வல்லார் கிழான் பண்ணன் ஆகியோர்.

குமணனைப் பாடிய பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் ஏழு வள்ளல்களைப் பற்றி மட்டும் தம் பாவில் குறிப்பிட்டதால் கடையெழு வள்ளல் என்கிற தொடர் பிறந்தது. மற்ற வள்ளல்களை ஏன் அவர் சேர்க்கவில்லை?  அந்த எழுவரை மாத்திரமே அவர் அறிந்திருக்கலாம்.

1 comment:

  1. கடையெழு வள்ளல்களை மட்டுமே அறிந்திருந்த பலருக்கும் அந்நாளில் அவர்களைத் தவிரவும் பல வள்ளல்கள் இருந்ததை அறியச் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete