Sunday, 28 July 2013

அற்புதச் சிகிச்சை - காட்சி 6

                                            
                                  பாத்திரங்கள் :

ஸ்கானாரேல்    -   தந்தை
லிசேத்து             -  வேலைக்காரி .

         
 அற்புதச்  சிகிச்சை    -      காட்சி   6                         
                                                  
லிசேத்து   -  ஐயோதுன்பம்!    அந்தோதுர்ப்பாக்கியம்!    பாவம்எஜமானர்அவரை    எங்கே   நான்  பார்க்க  முடியும்?

ஸ்கானாரேல்  என்ன  சொல்கிறாள்,     அவள்?

லிசேத்து  ,    பரிதாபத்துக்குரிய  தந்தையே!     இந்தச்  செய்தியை     நீங்கள்  கேட்டால்  என்ன  செய்வீர்களோ?

ஸ்கானாரேல்  என்னவாக  இருக்கும்?

லிசேத்து  இரக்கத்துக்குரிய    என்  எஜமானியே!  

ஸ்கானாரேல்  தொலைந்தேன்.

லிசேத்து  ஐயா

ஸ்கானாரேல்  லிசேத்!

 லிசேத்து  எவ்வளவு    துரதிர்ஷ்டம்!

ஸ்கானாரேல்  லிசேத்

லிசேத்து  விதி .

ஸ்கானாரேல்  சொல்லு     விவரமாய்.

லிசேத்து  - உங்கள்  மகள்!

ஸ்கானாரேல்  ஐயோஐயோ!     ( அழுகிறார்

லிசேத்து  அழாதீர்கள்,    ஐயா!

ஸ்கானாரேல்  சொல்லேன்,    சீக்கிரம்

லிசேத்து  உங்கள்  மகள்,    நீங்கள்  அவளிடம்  பேசிய  பேச்சாலும்    நீங்கள்  காட்டிய  பயங்கரக்  கோபத்தாலும்    பாதிப்பு  அடைந்து ,    அவசரமாய்த்  தன்  அறைக்குப்  போய்,    நம்பிக்கையை  அறவே  இழந்த  நிலையில்,     ஆற்றுப்  பக்கம்  உள்ள  சன்னலைத்  திறந்து  ...

ஸ்கானாரேல்  அப்புறம்?

லிசேத்து  விண்ணை  நோக்கிக்  கண்ணை  உயர்த்தி,  "முடியாது,    அப்பாவின்  கோபத்தைத்  தாங்கி  வாழ   என்னால்  இயலாது;    என்னை  அவர்    மகளல்ல  என்று மறுதலிப்பதால்    சாக  விரும்புகிறேன்"    எனக்  கூறினார்கள்.

ஸ்கானாரேல்  குதித்துவிட்டாளா?

லிசேத்து  இல்லைஐயா;    மெதுவாகச்  சன்னலை  மூடிவிட்டுக்    கட்டிலில்  போய்ப்  படுத்துக்கொண்டு    அழத்  தொடங்கினார்கள்.     திடீர்  என    முகம்  வெளுத்தது, மூர்ச்சை  அடைந்து    என்  கைகளில்    சாய்ந்துவிட்டார்கள்.

ஸ்கானாரேல்  மகளே!

லிசேத்து  அசைத்து  உலுக்கி   நினைவுக்குக்  கொண்டுவந்தேன்;     ஆனால்  அவ்வப்போது  அதே  நிலைமை  திரும்புகிறது.     பகலைத் தாண்ட  மாட்டார்கள்  ஏன்று  நினைக்கிறேன்.

ஸ்கானாரேல்  சீக்கிரம்டாக்டர்களைக்  கூப்பிடு;   இந்த  மாதிரி  ஆபத்தில்  எத்தனை  பேர்  இருந்தாலும்    அதிகமல்ல.   அய்யோ  மகளே!   அருமை  மகளே!

        ( மருத்துவர்களுள்  ஒருவனாய்க்    காதலனையும்  வரவழைக்கிறாள்      லிசேத்.    மற்றவர்களுடைய  முயற்சியால்  நீக்க  முடியாத  நோயைக்  காதலனுடைய   "அற்புதச் சிகிச்சை"    குணமாக்குகிறது.      காதல்  மணத்துக்கு  ஸ்கானாரேலை  இணங்க  வைத்துவிடுகிறார்கள்.)

                                   (முடிந்தது)               
                                    +++++++++++++++++++++++



                                                  




2 comments:

  1. ஆற்றின் போக்கிலேயே போய் கரைசேர்வது போல் புத்திசாலித்தனமாய் முதலாளியின் போக்கிலேயே போய் அவர் மகளின் காதலைச் சேர்த்துவைத்த வேலைக்காரியின் சமயோசிதம் வியக்கவைத்தது. ரசிக்கவைத்த வசனங்கள். நல்லதொரு நாடகப் பகிர்வுக்கும், நேர்த்தியான மொழிபெயர்ப்புக்கும் நன்றி தங்களுக்கு.

    ReplyDelete